ஜோர்டானில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ்

451

மொழி உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் ஹீரோவாக நடித்து தமிழகத்தில் பிரபலமான நடிகர் பிரித்விராஜும் அவரது படப்பிடிப்புக் குழுவினரும் ஜோர்டானில் சிக்கித் தவிக்கின்றனர்.

பிரபல மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி, பிரித்விராஜை வைத்து ஆடு ஜீவிதம் என்ற படத்தை எடுத்து வருகிறார். சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்று அங்கு ஆடு மேய்க்கும் பணிக்கு தள்ளப்படும் இளைஞனின் கதை இது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்னர் படப்பிடிப்பிற்காக ஜோர்டானுக்கு போன படக்குழுவினர் விமான சேவைகள் இரத்தானதால் இப்போது நாடு திரும்ப முடியாமல் அங்கு தவித்து வருகின்றனர்.

தங்களை எப்படியாவது நாடு திரும்ப உதவுமாறு அவர்கள் பிலிம் சேம்பரை தொடர்பு கொண்டுள்ள நிலையில், கேரள முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

SHARE