ஞானசார தேரர் நாட்டுக்குத் திரும்பியவுடன் அவரை விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்யுமாறு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

401

 

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக கடந்த ஏப்ரல் மாதம், நீதிமன்ற உத்தரவையும் மீறி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக தேரர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்களும், தேரர்களும் நீதிமன்றில் முன்னிழைலயாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், வெளிநாடு சென்றிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலளார் ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இந்நிலையில், வெளிநாடு சென்றுள்ள ஞானசார தேரர் நாட்டுக்குத் திரும்பியவுடன் அவரை விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்யுமாறு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

bodu-bala-sena

SHARE