டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்சவினை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணி விரைவில் உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க தயார் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளில் உள்ள சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனினும் தங்களுக்கு அவ்வாறான அழைப்புகள் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணி விரைவில் உருக்கப்படவுள்ளதாகவும், அதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்