பாலிவுட் இயக்குனர் சிபாரிசால் இந்தியில் புதுபட வாய்ப்பை பெற்றார் டாப்ஸி. ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் மார்க்கெட் டல்லடித்ததால் இந்தி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். சஷ்மே பத்தூர் என்ற இந்தி படத்தில் நடித்தார். இப்படம் வெற்றிபெற்றது.
ஆனாலும் இந்தியில் எதிர்பார்த்தளவு பட வாய்ப்புகள் வரவில்லை. ஆறுதல் தரும் வகையில் ரன்னிங் ஷாதி டாட்காம் என்ற ஒரு இந்தி படம் மட்டும் தேடி வந்தது. இந்நிலையில் சுஜித் சிர்கார் ஹமரா பஜாஜ் என்ற இந்தி படத்தை இயக்கவிருந்தார். இதில் ஆயுஷ்மான் குரானா ஹீரோ. திடீரென்று சுஜித்திடமிருந்து இயக்குனர் வாய்ப்பு நழுவி அமித் ராய் வசம் வந்தது. இவர் தற்போது டாப்ஸி நடிக்கும் ரன்னிங் ஷாதி டாட் காம் படத்தை இயக்கி வருகிறார்.
புதிய படத்திலும் தனது ஹீரோயினாக டாப்ஸியே நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்திருக்கிறார். அது ஏற்கப்பட்டிருக்கிறது. இது குறித்து டாப்ஸியிடம் கேட்டபோது, புதிய படத்தின் தற்போதைய நிலை குறித்து எனக்கு தெரியும். அமித்துடன் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன். ஹமரா பஜாஜ் பட வாய்ப்பு வந்தால் சந்தோஷமாக ஏற்பேன். இதற்கான ஒப்பந்தம் எதிலும் இன்னும் நான் கையெழுத்திடாத நிலையில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.