டிரம்ப் உரையில் இடம் பெற்ற 5 முக்கிய விஷயங்கள் 

9

 

டிரம்ப் உரையில் இடம் பெற்ற 5 முக்கிய விஷயங்கள்

 

அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு அவர் அதிபராக பதவியேற்றார்.

டிரம்பின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், அமெரிக்க முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் “எதிர்காலம்” எப்படி இருக்கும் என்பதை டிரம்ப் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

“அமெரிக்காவின் பொற்காலம் இன்று துவங்குகிறது. இனி நம் நாடு செழிப்பாகவும், மதிப்புக்குரியதாகவும் இருக்கும். நான் எப்போதும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை கொடுப்பேன் என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்” என்றார் அவர்.

டிரம்பின் முதல் உரையில் இடம்பெற்ற ஐந்து முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

“அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசரநிலை”

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக குடியேறுவது உடனடியாக நிறுத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறிய பல லட்சக் கணக்கானவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அரசு தொடங்கவுள்ளது என்றும் டிரம்ப் கூறினார்.

மேலும், “மெக்சிகோவிலேயே இருங்கள்” என்ற கொள்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது மற்றும் எல்லையில் அதிக துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, விரைவில் மெக்சிகோ வளைகுடாவின் பெயர் ” அமெரிக்க வளைகுடா” என மாற்றப்படும் என்றார் டிரம்ப்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு உலகத் தலைவர்களும், பெரும் தொழிலதிபர்களும் வாஷிங்டனில் கூடியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 78 வயதான டொனால்டு டிரம்ப், 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2-ஆவது முறையாக அதிபராகவுள்ளார். இதற்காக, வெள்ளை மாளிகையில் ஏற்பாடுகள் தயாராகியுள்ளன. வழக்கமாக வெள்ளை மாளிகையின் வெளிப்புறத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் நிலையில், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், ஆராதனை, பதவியேற்பு, அதிபர் உரை, ராணுவ அணிவகுப்பு என அனைத்தும் வெள்ளை மாளிகையின் உள்ளரங்கிலேயே நடத்தப்படவுள்ளதது

இதற்கு முன்பாக, 1985-ஆம் ஆண்டு ரொனால்ட் ரீகன் பதவியேற்கும் போது, கடும் பனிப்பொழிவு காரணமாக அனைத்து நிகழ்வுகளும் உள் அரங்கிலேயே நடத்தப்பட்டது. மேலும், 2020-ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து சூறையாடிய இடத்தில்தான் தற்போது டிரம்பின் பதவியேற்பு விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE