நம் வீடுகளில் பயன்படுத்தும் டி.வி. மற்றும் மொபைல் போனில் உள்ள செயலிகளின் மூலமாக கூட நமது நடவடிக்கைகளை கண்காணிக்க இயலும் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சிஐஏ எனும் உளவுத்துறை அமைப்பு ஹேக் செய்யப்பயன்படுத்தும் உத்திகளை விக்கலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
அதில் ஸ்மார்ட் போன் மூலமும், டி.வி. மூலமும் எவ்வாறு உளவு பார்க்கப்படுகிறது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய எண்ட் டு எண்ட் டிஸ்கிரிப்ஸன்(End to end Description) வசதிக்கூட பாதுகாப்பானதல்ல என சிஐஏ அமைப்பினை ஆய்வு செய்த தனியார் அமைப்பினர் எச்சரிக்கின்றனர்.
சாம்சங் உள்ளிட்ட ஸ்மார்ட் டிவிகளில் இணைய இணைப்பு, குரலைப் பதிவு செய்யும் வசதிகள் இருப்பதால் டி.வி. ஆஃப் செய்து இருந்தால் கூட நமது நடவடிக்கைகளை வீடியோ, ஆடியோ எடுக்க இயலும் என இந்த தனியார் நிறுவனம் எச்சரிக்கிறது.
மிகப்பாதுக்காப்பானதாக கருதப்படும் ஐபோன்களின் பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றி சிஐஏ அமைப்பானது விவாதித்து இருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
நம்மை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை
- இமெயில் வரும் அட்டாச்மெண்டுகள் பாதுகாப்பனவை என உறுதி செய்த பின்னரே அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
- வங்கிக் கணக்குகளின் தகவல்களை இணையம் வாயிலாகப் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
- லேப்டாப் கேமராக்களை பயன்படுத்தாத நேரத்தில் மூடி வைக்கலாம்.