டி20 உலகக்கிண்ணத்தை வென்று 10 ஆண்டுகள்! என்னால் நம்ப முடியவில்லை – குமார் சங்ககாரா

190

 

இலங்கை அணி 2014ஆம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத்தை வென்றதை இன்னும் நம்ப முடியவில்லை என குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

டி20 கிண்ண சாம்பியன்
இலங்கை அணி டி20 உலகக்கிண்ணத்தை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதனை நாம் கௌரவமாக கொண்டாடிடுவோம் என இலங்கை கிரிக்கெட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இந்த நிலையில், இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா நெகிழ்ச்சியுடன் டி20 கிண்ணத்தை வென்ற நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

சங்ககாரா நெகிழ்ச்சி
அவரது பதிவில், ”டி20 உலகக்கிண்ணத்தை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது என்பதை நம்ப முடியவில்லை. எனது நம்ப முடியாத அணி தோழர்களுடன் நம்ப முடியாத நினைவுகள். ஆனால், எங்கள் ரசிகர்களின் ஆதரவையும், அன்பையும் என்னால் மறக்க முடியாது.

அவர்கள் நல்ல நேரங்களிலும், மோசமான நேரங்களிலும் எங்களை உற்சாகப்படுத்தி, பின்னர் எங்களுடன் கொண்டாட வீதிகளில் வரிசையாக நிற்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 130 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய இலங்கை 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. குமார் சங்ககாரா ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 52 ஓட்டங்கள் விளாசினார்.

 

SHARE