மிர்பூரில் இன்று நடந்த டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின.இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, இந்தியாவை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் விராட் கோஹ்லி 58 பந்துகளில் அரைசதம் கடந்து 77 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து 131 என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 17.5வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
சங்கக்கார தனது கடைசி 20 ஓவர் போட்டியில் அரைசதமடித்ததுடன் (52 ஓட்டங்கள்) இலங்கையை வெற்றி பெறச்செய்துள்ளார்.




|