டி20 உலகக்கிண்ண தொடரில் கோலி, ரோஹித் எந்தவித பயமுமில்லாமல் விளையாட வேண்டும் – கங்குலி

483

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி, டி20 உலகக்கிண்ண தொடரில் கோலியும், ரோஹித்தும் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வரும் சூன் மாதம் டி20 உலகக்கிண்ண தொடர் நடைபெற உள்ளது.

இதில் இந்திய அணி வீரர் விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி தனது விருப்பம் குறித்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ”டி20 உலகக்கிண்ணத்தில் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். எந்த பயமுமில்லாமல், முதல் 5,6 ஓவர்கள் அதிரடியாக விளையாட வேண்டும். டி20 போட்டிகளில் 40 பந்துகளில் சதமடிக்கும் திறன் விராட் கோலியிடம் உள்ளது” என்றார்.

SHARE