பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட சமூகவலைத் தளங்கள் வரிசையில் டுவிட்டரும் ஒன்றாகும்.
எனினும் இதில் தரப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக தொடர்ச்சியாக பாவிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கின்றது.
இதனைக் கவனத்தில் கொண்ட அந்நிறுவனம் அதிரடி மாற்றம் ஒன்றினை செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதாவது இதுவரை டுவிட் செய்யப்படும் கருத்துக்கள் 140 எழுத்துக்கள் என்ற வரையறை இருந்தது.
இவ்வரையறைக்குள் இணைய இணைப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தது.
எனவே இதனை மாற்றி இனி 140 எழுத்துக்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படவுள்ளதுடன், வீடியோ, புகைப்படங்கள், இணைய இணைப்புக்கள் என்பன கருத்தில் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய மாற்றமானது இம்மாதம் 19ம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.