டூத்பேஸ்டில் உள்ள ஆபத்து தெரியுமா? விரைவில் வருகிறது தடை

298

மனிதர்கள் தாம் சுத்தமக இருப்பதற்கும், தம்மை அழகுபடுத்துவதற்கும் பல்வேறு செயற்கை பொருட்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான பல பொருட்களில் அவர்களில் உடலுக்கும், சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பதார்த்தங்கள் காணப்படுவதாக தொடர்ச்சியாக எச்சரிக்கப்பட்டு வருகின்றது.

இவற்றின் வரிசையில் தற்போது டூத்பேஸ்ட் மற்றும் சில அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிறு துணிக்கைகள் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது பற்களை இலகுவாக சுத்தம் செய்வதற்காக இப் பிளாஸ்டிக் சிறு துணிக்கைகள் டூத்பேஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதே போன்று சருமங்களை உலராது பாதுகாக்கும் அழகுசாதனப் பொருட்கள் உட்பட மேலும் சில வீட்டுப் பாவனைப் பொருட்களிலும் குறித்த பிளாஸ்டிக் சிறு துணிக்கைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் துணிக்கைகள் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதனால் ஐக்கிய ராச்சிய நாடுகளில் அடுத்த வருடம் முதல் தடை அமுலுக்கு வருகின்றது.

SHARE