டெலோ இயக்க தலைவர் சிறி சபாரத்தினம்- குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில் கொடுராமக கொலை செய்யப்பட டெலோவின் தலைவரானார்
650
டெலோ இயக்க தலைவர் சிறி சபாரத்தினம்
1986 மே 6ம் தேதி, கிட்டுவின் தலைமையில் யாழ் கோண்டாவில் பகுதியில் ஈழ விடுதலயை லச்சியாமாக வைத்திருந்த அந்த இதயம் தோட்டக்களால் சுக்குநூறாக சிதறடிக்கபட்டது, ஒன்றல்ல இரண்டல்ல, எதிரில் நிராயுதாபாணியாக நின்ற அந்த போராளியின் உடலை 20க்கும் அதிகமான குண்டுகள் சல்லடையாக்கின, சுட்டது எதிர்த்த சிங்களவன் அல்ல , தன் ரத்தம் பகிர்ந்த சகோதரன்.என்ன தவறு செய்திருந்தாலும் சபாவுக்கு இந்த தண்டனை அதிகம், அதற்க்கு என்ன காரணம், எந்த தரப்பில் இருந்து சொல்லபட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அன்று சரிந்து விழுந்தது சபாவின் சடலம் மட்டுமல்ல, ஈழம் என்கிற ஒரு தேசத்தின் நம்பிக்கை. சபா மட்டும் அல்ல அவரின் டெலோ இயக்கத்தின் போராளிகள் அறுநூறு பேர் படுகொலை செய்தார்கள், டயர்களில் போட்டு கொளுத்தி படுகொலை செய்தார்கள்,
நடராஜன் தங்கதுரை மற்றும் யோகசந்திரன்(குட்டிமணி) என்பவரால் உருவாக்கபட்ட ஒரு சிறு குழு தான் பின்னாளில் தமிழிழ விடுதலை இயக்கமாக(டெலொ) மாறியது.அப்பொழுது அவர்களுடன் களத்தில் தளபதியாக செயல்பட்டவர் சிறி சபாரத்தினம். இந்தியாவிற்க்கு தப்ப முயன்ற தலைவர்கள் இருவரும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யபட, ( இது கூட பிரபாவின் காட்டி காட்டி கொடுப்பு என்று போராளிகள் வட்டம் பேசிக்கொளவது உண்டு ),
(நீதிமன்றம அழைத்து செல்லப்படும் குட்டிமணியும், தங்கதுரையும்)
குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில் கொடுராமக கொலை செய்யபட, டெலோவின் தலைவரானார் சிறி சபாரத்தினம்.
தலைவர் என்று ஆணையிடுபவரல்ல சபா, களத்தில் இறங்கி போராடுபவர்.இன்றும் சபாவை அப்படி தான் ஈழ தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் நினைவு கூறுகின்றனர்.ஈழ விடுதலை இயக்கங்களும் அனைத்தும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க, இந்திராவும் போராளி இயக்கங்களுக்கு தாரளமாகவே உதவியளித்தார்.
டெலோ, இராஸ்,விடுதலை புலிகள் என பல இயக்கங்களாக சிதறிகிடந்தவற்றை ஒன்றாக இணைத்து ENLF ஆக உருவாக்கபட்டது.அனைத்து போராளிகளும் ஒன்றாக இணைந்து தனி ஈழத்திற்க்காக் போராடுவது என உறுதி செய்யபட்டது.
தங்களின் தொப்புள் கொடியான தமிழகத்தின் அரசியல்வாதிகள், ஈழ பிரச்ச்னையை அரசியலாக்க முயலுகிறார்கள் என்ற ஒரு சிறு விஷ்யம் தெரியாமல், புலிகளும் ,மற்ற இயக்கங்களும் பிரிந்தனர். எம்ஜிஆர் புலிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய, கலைஞர் டேலொவிர்க்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார். சபா, கலைஞரின் அன்பிற்க்குரியவரானார். கலைஞர் திரைக்கதை எழுதிய ‘பாலைவன் ரோஜாக்கள்’ படத்தில் கதநாயகனின் பெயர் சபாரத்தினம்.
இந்திய உளவுத்துறை போராளி இயக்கங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து அவர்களுக்கு வியுகங்களையும் அமைத்து கொடுக்க, இதனை ஏற்க புலிகள் தயங்கினர். இந்தியா தன் சுயலாபத்திற்க்கு ஈழ போராளிகளை பயன்படுத்துகிறதென முடிவு செய்த்னார், ஆனால் இந்தியாவின் உளவுத்துறையின் வாக்கை வேத வாக்காக் மற்ற இயக்கங்கள் எடுத்து கொள்வதாக் கோபப்பட்டனர்.
தனி ஈழத்தை குறிக்கோலாக கொண்டு மற்ற இயக்கங்கள் இந்தியாவின் உதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தன, அவர்களுக்கு தேவை தனி ஈழம்.
இயக்கத்துனுள் கருத்து வேறுபாடுகள் முற்றின,எந்த இயக்கம் பெரியது என்ற மிக மோசமான ஃமாபியா அரசியல் ஈழ விடுதலை இயக்கத்தினுள் புகுந்தது. பரஸ்பரம் சில நபர்கள் கொலை செய்ய்பட்டனர், அந்த கொலைகள் மற்ற இயக்க்ங்கள் தான் செய்கின்றன என தமக்குள் சந்தேக பட தொடங்கினர்.
அந்த வழியில், புலிகள் இயக்கதிற்கு உயிர் சேதமும், தனி ஈழம் என்ற லட்சியத்தில் விரிசல் இருபதாக புலிகள் மற்ற இயக்கங்களை சந்தேக பாட தொடங்கியது, அவர்கள் ஒரு படி மேலே போய் சில கொலைகளுக்கான காரணத்தை ஆராயமால் ‘துரோகி’ பட்டத்தை சபாவிர்க்கு கொடுத்தனர்.
‘துரோகி’ என்ற வார்த்தை வந்துவிட்டால் விடுதலை புலிகள் அதற்கு ஒரே தண்டனையாக வைத்திருத்து மரணத்தை.
சபாவிற்க்கு டார்கெட் வைக்கபட்டது. அப்பொழுது சபாவிற்க்கு யாரும் அடைக்கலம் தர கூடதெனவும், சபாவை உடனடியாக் பிடித்து கொடுக்குமாறும் மக்களுக்கு விடுதலை புலிகள் ஆணையிட்டனர்.சபா என்ன செய்வதறியாமல் மறைந்து வாழ்ந்து வந்தார்.
தமிழகத்தில் அப்பொழுது நடைபெற்ற டெசோ மாநாட்டின் போது, சபாவின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கலைஞர், விடுதலை புலிகள் இயக்கத்திடம் தன் சார்பில் சபாவை ஒன்றும் செய்ய வேண்டாம் என கோரினார், புலிகளும் அதற்க்கு செவி சாய்த்தனர்.சபாவின் உயிருக்கு தங்களால் ஆபத்து வராது என உறுதியளித்தனர்.
கஞ்சா காடு ஒன்றில் சமாதானத்திர்க்கு வந்த சபாரத்தினத்தை புலிகள் இயக்கத்தை சேர்ந்த கிட்டு, மண்டியிட்ட சபாரத்தினம் எவ்வளவும் கெஞ்சியும் அவருக்கு மரணத்தை பரிசாகளித்தார். போராளி என ஆனபோதே சபாவின் மரணம் உறுதியானது தான் என்ன தன் சகோதரனால் கொல்லபட்டார்.
உமா மகேஸ்வரன் யார்?
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் தலைவர் இந்த உமா மகேஸ்வரன்,.ஊர்மிளாவை இயக்கத்திற்கு கொண்டு வந்தவர் உமா மகேஸ்வரன். இயக்கத்தின் முதல் பெண் உறுப்பினர் ஊர்மிளாவுடன் காதல் என பிரபாவால் குற்றஞ்சாட்டபட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு உமா மகேஸ்வரன் வெளி ஏற்றபட்டார்,.
சிறிது காலத்திற்கு முன்பு, விடுதலைப்புலிகளின் தலைவராக உமா மகேஸ்வரனை உலக நாடுகளில் உள்ள போராளிப்பிரதிநிதிகளிடம் அறிமுகம் செய்து வைத்த லண்டன் பிரதிநிதிகள், இந்த மோதலை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் சார்பாக கிருஷ்ணனும், ராமச்சந்திரனும் சென்னைக்கு வந்து பிரபாகரனைச் சந்தித்தனர். “உமா மகேஸ்வரன்பெரிய தவறு எதுவும் செய்யவில்லை. காதல்தானே! விட்டு விடுங்கள்” என்று அவர்கள் பிரபாகரனிடம் பரிந்துரைசெய்தனர். இயக்கத்தில் உள்ளவர்கள் ஒரு போராளிக்கி காதல் கூடாது என்று பிரபா சொன்னதை அப்போது ஓகோ அப்படியா என்று நம்பினர், எந்த அளவு என்றால் ஊர்மிளாவுக்கு தண்டனை என்ற பெயரில் கொலைசெய்யும் அளவுக்கு ஆட்டுமந்தைகளாய் இருந்தனர்,
ஆனால் பிரபாவின் குறி தலைமை பதவி கொள்கை அல்ல என்று எந்த காதலை சொல்லி உமாவை விரட்டினாரோ அந்த காதல் மதிவதனியுடன் வந்த போது இயக்க தோழர்கள் புரிந்துகொண்டார்கள், ஆனால் அப்போது யாரும் எதிர் கேள்வி எழுப்பும் சூழ்நிலையை இல்லாமல் செய்து வைதுருந்தார் பிரபா,
தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு(`பிளாட்’) என்று பெயர். 1982-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி உமா மகேஸ்வரனின் வலதுகரமாகவும், “புதிய பாதை”என்ற இதழை நடத்தி வந்தவருமான சுந்தரம் யாழ்ப்பாணத்தில் பிரபா அனுப்பிய சீலனால் (சார்லஸ் ஆண்டனி) சுட்டுக் கொல்லப்பட்டார்.
அச்சகத்துக்குள் இருந்த சுந்தரத்தை ஜன்னல் வழியாக சீலன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். ஊர்மிளா விவகாரம் பூதாகரமாக கிளம்பியபோது, இவர் உமாவுடன் சென்றுவிட்டார் சுந்தரம். இந்தக் கொலைக்கு விடுதலைப்புலிகள் பொறுப்பேற்றனர். பிரபாவின் அடுத்த குறிதான் தான் என்று உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டுக்குத் தப்ப முடிவு செய்தார். கண்ணன், காக்கா, ஆண்டன், தாசன் ஆகியோருடன் பிப்ரவரி25-ந்தேதி படகில் ஏறி தமிழகம் வந்தார். படகில் திரும்பிய ஆண்டனை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்அளித்த தகவலின் பேரில் வவுனியாவில் இருந்த “பிளாட்” முகாமை ராணுவம் தாக்கியது. அதில் இருந்த ஆயுதங்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை வந்து சேர்ந்த உமா மகேஸ்வரன், சென்னையில் தமிழ் அறிஞர் பெருஞ்சித்திரனார் இல்லத்தில் தங்கிஇருந்தார்.உமா மகேஸ்வரனை தீர்த்துக்கட்ட பிரபாகரனும் பின் தொடர்ந்து சென்னை சென்றார் அங்கு உமாவை தீர்த்து கட்ட சமயம் பார்த்திருந்தார்.
சென்னை பாண்டி பஜார் துப்பாக்கி சூடு சம்பவம் –
1982மே மாதம் 29ஆம் திகதி. தமிழ்நாட்டில் சென்னையில் பாண்டிபஸார் என்னும் ஒரு பகுதி இருக்கிறது. சன நெரிசல் மிகுந்த பகுதி அது. அங்குள்ள உணவு விடுதி ஒன்றுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் உமா மகேஸ்வரனும் ஜோதீஸ்வரன் என்னும் கண்ணனும் வந்தனர். அதே சமயத்தில் அங்கு பிரபாகரனும் அவரோடு சிவகுமார் என்பவரும் அங்கு தற்செயலாக வந்தனர். பிரபாகரன் உமா மகேஸ்வரனைக் கண்டு விட்டார். தன்னால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் கண் எதிரில் நிற்கிறார்.என்ன செய்யலாம்? உடனடியாக தனது கைத்துப்பாக்கியை எடுத்த பிரபாகரன், உமா மகேஸ்வரனை நோக்கி சுடத் தொடங்கினார். அப்போது பாண்டிபஸார் பகுதியில் கடமையில் இருந்த பொலிசார் இரு பகுதியினரையும் உடனடியாக கைது செய்தனர். அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் வெளியே விடவேண்டாம். உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று பொலிசாருக்கு தெரிவித்துவிட்டார் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் ஈழப்போராளிகளுக்குள் நடந்த முதல் மோதல் சம்பவம் அது தான். பத்திரிகைகளில் அந்தச் செய்தி வந்த போது தமிழ்நாட்டினைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீது பற்றுக் கொண்ட பிரமுகர்கள் கவலை தெரிவித்தனர். “போராளிகள் தமது ஆயுதங்களை தமது நாட்டில் வைத்துவிட்டு வரவேண்டும். இங்கு வந்து தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது.அதனை தமிழக அரசு அனுமதிக்காது” என்று தனது நிலைப்பாட்டை விளக்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.
இதே சமயம் கைது செய்யப்பட்ட ஈழப்போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் மத்திய அரசின் ஆலோசனை வழி எம்.ஜி.ஆர் இலங்கை அரசிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார், இன்று இந்தியாவை வசைபாடும் நபர்கள் அன்று மட்டும் இந்தியா இலங்கை அரசிடம் ஒப்படைத்து இருந்திருந்தால் ஏது புலிகள் இயக்கம் ?
கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இயக்கங்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சிகளில் பலர் ஈடுபட்டனர். ஈரோஸ் அமைப்பிலிருந்து விலகியிருந்த ‘அருளர்’சென்னையில் ஈபிஆர்எல்எவ் அலுவலகத்தில் தங்கிருந்தார். இயக்கங்கள் மத்தியில் ஒற்றுமை முயற்சியில் அவரும் ஈடுபட்டார். புலிகள் என்ற பெயரை உமா மகேஸ்வரன் அணியினர் பயன்படுத்தக்கூடாது என்று பிரபாகரன் கூறினார். அதனை உமா மகேஸ்வரன் அணியினரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவருக்கு தெரியாது பிரபாவின் நரிக்குணம், இலங்கை திரும்பிய உமாமகேஸ்வரன் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து படுகொலைசெய்யப்பட்டார்,
யார் இந்த தோழர் க.பத்மநாபா ?
பாசிசத்திற்கெதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும், இந்தியாவின் நண்பனாக, சர்வதேச முற்போக்கு விடுதலை இயக்கங்களின் உற்ற தோழனாக, அமைதி, சமாதானம், ஜனநாயகத்தை ஏற்படுத்த உறுதியோடு போராடிய போராளி.
மார்க்சிய, லெனினிய சித்தாந்தத்தில் அதிக ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டிருந்தார். இடது சாரிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தினார். இலங்கையிலும், இந்தியாவிலும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இயங்கிய பல்வேறு இடதுசாரி தலைவர்களோடும், நெருங்கியத் தொடர்பினை வைத்திருந்தார். சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றதுடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஐக்கியத்திற்கும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதிலும் சகல முற்போக்கு சக்திகளோலோடும் இணைந்து நின்று செயலாற்றினார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் பிரதானமானவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனர். அதன் முதல் பொதுச் செயலாளர். 1951 நவம்பர் 19ல் பிறந்த இவர் தனது 39 வருடகால வாழ்நாளில் 20 வருடங்கள் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், அப்போராட்டத்தின் வழி நின்று இலங்கையின் ஒற்றுமைக்கும், அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின், தொழிலாளர்கள், விவசாயிகளின் பூரண விடுதலைக்காகவும் அயராது இறுதிவரைப் போராடியவர்.
சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்தபோது, ஆயுதத்தின் மீது காதல் கொள்ளாமல், ஒரு தற்காப்பு கருவியாகவே பயன்படுத்தவேண்டும் என்று தனது இயக்கத்தினருக்கு வழி காட்டினார்.
தமிழ் போராளி இயக்கங்களிடையே ஒற்றுமையின்மை தலைதூக்கியபோதெல்லாம், அதை வேரூன்றவிடாமல் ஒற்றுமைக்காக கடுமையாகப் போராடினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம், பிளாட் இயக்கத் தலைவர் பாலகுமார் மற்றும் மிதவாத இயக்கத்தலைவர்கள் அமிர்தலிங்கம் போன்றோரை சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஒற்றுமைப்படுத்தும் நடவடிக்கையில் சளைப்பில்லாமல் ஈடுப்பட்டார்.
ஆனால் பாசிச குணம் கொண்டு, தான் மட்டுமே தமிழர்களின் ஏகப்பிரதிநிதி என ஆயுத பலத்தின் வன்மையால், சகோதரப்படுகொலைகளை நிகழ்த்தி, மேலே சொன்ன தலைவர்களை கொன்றொழித்தது பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகள் இயக்கம். 1990 ஜூன் 19-இல் சென்னையில் இயக்கத் தலைவர்களுடன் உரிமைப் போராட்டத்திற்கான திட்டம் வகுக்க உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பாசிச புலிகளால் தோழர்.பத்மனாபாவையும் உடனிருந்த 13 தோழர்களையும் கோழைத்தனமாக கொலை செய்தனர் புலிகள்.
இவர்கள் தமிழ்கள் இல்லையா ?
இன்று ஈழவிடுதலை பற்றி பேசுகின்ற அவர் அதற்காக ஒரு சிறு துருபை கிள்ளி போடதுண்டா?
கலைஞர் எதிர் கட்சித்தலைவராக இருந்தும் கூட எம்.ஜி.ஆர் ஆட்சியில் இவருடைய ஒரு மித்த கருத்தில் ஈழவிடுதலைத் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றபட்டது. அதன் பின் ஈழபோரளிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் கலைஞர் முன்னின்று செய்தார்.
ஆறு போராளிகள் இயக்கங்களின் கூட்டமைப்பான “டெலோ” என்ற அமைப்பு கலைஞரின்
முயர்ச்சியால் நிறுவபெற்றது, இதை சீமான் அறியாமல் இருப்பாரா ?
அதன்பின் நடந்தது என்ன ?
டெசோ இயக்கம் ஆரம்பித்த ஐந்தாவது மாதத்திலேயே சீறி சபாரத்தினம் தலைமையேற்ற டெலோ இயக்கத்தின் மேல் விடுதலை புலிகள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி அதன் அறிவுபூர்வமான இளம் தலைவரையும் அதன் இயக்கத்தவர்களையும் கொலை செய்தனர்.
அதன் பின்னும் அவர்களுடைய கொலைப்பசி அடங்கவில்லை
அப்பொழுதுதான் 1990 ஜூன் 19-இல் சென்னையில் இயக்கத் தலைவர்களுடன் உரிமைப் போராட்டத்திற்கான திட்டம் வகுக்க உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பாசிச புலிகளால் தோழர்.பத்மனாபாவையும் உடனிருந்த 13 தோழர்களையும் கோழைத்தனமாக கொலை செய்தனர் புலிகள்.
அரசியல், ஜனநாயகக் கோட்பாடுகளில் நம்பிக்கையற்று, ஆயுதத்தின் மூலம் மட்டுமே விடுதலையை அடைய முடியும் என்ற பாசிச கோட்பாட்டில் மூழ்கி திளைத்து, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பலி கொடுத்து தானும் பலியானதுதான் பிரபாகரனின் சாதனை. தனக்குப் பின்னால் இயக்கத்தை வழி நடத்த இரண்டாம் கட்டத் தலைவர்களைக் கூட உருவாகத் தவறிய ஏகாதிபத்தியவாதியாக திகழ்ந்தவர் பிரபாகரன்.
அதன் பிறகு உச்சகட்ட நிகழ்வாக ஸ்ரீ பெரும்புதூரில் ராஜீவ் படுகொலை செயப்பட்டார் .
இப்படியாக கலைஞரின் அணைத்து முயசிகளையும் கொட்சைப்படுதியது விடுதலைப்புலிகள்தான் என்ற வரலாறு தெரியாதாவரா சீமான் ?
ராஜீவ் கொலை விசாரணைக்காக ஜெயின் கமிஷன் அமைக்கப்பட்டு பதினாறு வருட விசாரனைக்கு ஒரு பதில் கூட தராத பிரபாகரன்:- அது ஒரு துன்பியல் சம்பவம் ” என்று கூலாக
பதில் சொல்கிறார் . இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது , விடுதலை புலிகளிடம் கைதான சக போராளி இயக்கங்களைச் சார்தவர்களை துப்பாக்கி ஆடும் பயிற்சிக்காக “டார்கெட் “ஆக பயன்படுத்தியிருகிறார்கள் . உலக அளவில் இந்த செயலை முதலில் செய்தது ஹிட்லர்தான் அவருக்கு அடுத்த இடத்தை பிரபாகரன் பிடித்துவிட்டார்.
உலகின் வரலாற்றை பின்னோக்கி நகர்த்திச் செல்ல முயன்ற ஹிட்லர், முசோலினி போன்ற பாசிசவாதிகளை வரலாறு குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியது போல, தமிழ் பேசும் மக்கள் மத்தியில், தமிழ் மக்களையே கொன்று குவித்த, மீண்டும் குவிக்கத் துடிக்கும் பாசிசக் கூட்டத்தை தமிழ் மக்கள் தோற்கடித்து, வரலாற்றுச் சக்கரத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வர் என்பது திண்ணம்.
பொதுவாக வன்முறை என்பது இருபுறமும் கூரான வாள் போன்றது அது பிடிதிருப்பவனையும் தாக்கும் , இது புலிகளின் விடயத்தில் உண்மையானது .
அவர்கள் தங்கள் இனத்தை சேர்ந்த சக போராளிகளையும் சமூகத்தினரையும் கொன்று குவித்த போதிலும் அவர்களுக்காக உழைத்த கலைஞரின் நட்பையும் இழந்து விட்டனர் இறுதில் சிங்கள பேரினவாதம் வென்று விட்டது ஈழத்தில் அப்பாவி மக்கள் சாவுக்கு கொடூரன் ராஜபக்ஷே எவ்வளவு உடந்தையோ பிரபாகரனுக்கும் அதில் சம அளவு பங்கு உள்ளது….
தற்போது தமிழர் பகுதியில் புனர் நிர்மானம் மற்றும் மறு குடியிருப்பு சம்மந்தமாக அணைத்து நடவடிக்கைகளும் கலைஞரின் வற்புறுத்தலின் பேரிலேயே மத்தியஅரசு செய்து வருகிறது.
ஒரு உண்மையை சொல்லப்போனால் எம் ஜி ஆர் , கலைஞரை போல , விடுதலை புலிகளுக்கு உதவியவர்கள் தமிழகத்தில் இருப்பது அபூர்வம்.
இதை புரிந்து கொள்ளாமல் துவேசத்தை விதைத்து வன்முறையை அறுவடை செய்யும் போக்கை சீமான் மாற்றிகொண்டு ” தம்பி ” போன்ற சமூக கருத்துடைய வன்முறைக்கு எதிரான திரைப்படங்களை தந்தால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிப்பார்…