டெஸ்ட் போட்டியில் சங்ககரா 38–வது சதம்

374

நியூசிலாந்து– இலங்கை அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 221 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது. இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.

37 வயதான முன்னாள் கேப்டன் சங்ககரா அபாரமாக விளையாடி சதம் அடிததார். 191 பந்துகளில் 7 பவுண்டரியுடள் 100 ரன்னை எடுத்தார். 130–வது டெஸ்டில் விளையாடும் சங்ககராவுக்கு இது 38–வது சதம் ஆகும்.

டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் அவர் தொடர்ந்து 4–வது இடத்தில் உள்ளார். தெண்டுல்கர் (51 சதம்) முதல் இடத்திலும், காலிஸ் (45) 2–வது இடத்திலும், பாண்டிங் (41) 3–வது இடத்திலும் உள்ளனர்.

தொடர்ந்து ஆடிய சங்ககரா 150 ரன்களை குவித்தார். இதனால் இலங்கை அணி 300 ரன்களை தாண்டியது.

SHARE