தற்போது விஞ்ஞானிகளால், அவுஸ்திரேலியாவில் பல பில்லியன் வருடங்களுக்கு முன்பு கோள் ஒன்று மோதியமைக்காக ஆதாரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
அதன் தாக்கம் கிட்டத்தட்ட 66 மில்லியன் வருடங்களுக்கு முன் டைனோசர்களின் அழிவுக்கு காரணமான மோதலிலும் படு பயங்கரமாகஇருந்திருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.
ஆய்வாளர்களால் மேற்கு அவுஸ்திரேலியாவில் , தரைக்கடியில் மிக ஆழத்தில், புதைக்கப்பட்ட நிலையில் நுண்ணிய கண்ணாடி மணிகள் (Spherules) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 3 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் மேதிய கோளின் எச்சங்களாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
இம் மோதல் புவியில் பெரிய பூகம்பமொன்றை ஏற்படுத்தியிருக்கும் என அவுஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தின் புவி மற்றும் பருவகால விஞ்ஞானி Andrew Glikson கூறுகிறார். மேலும் அக்காலத்தில் மிகப்பெரிய சுனாமியலைகளையும் இது தோற்றுவித்திருக்கலாம் எனவும் தெரிவிக்கிறது.
இக்குறித்த கோளானது கிட்டத்தட்ட 20 – 30 km விட்டமுடையதாகவிருக்கலாம் எனவும், இதனால் ஏற்பட்ட தாக்கம் நூறு கிலோமீட்டர் வரையில் பள்ளத்தை தோற்றவித்திருக்கலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் டைனோசர்களின் காலத்தில் மோதிய பாறையானது கிட்டத்தட்ட 180 km விட்டமுடையது. ஆனாலும் அதன் திணிவு அவ்வளவு பெரியதின்மையால் பாதிப்புக்கள் இதன் அளவிற்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
மேற்கு அவுஸ்திரேலியாவில் வடமேற்குப் பகுதியில் நிலத்தினை துளையிடும் போதே இவ் எச்சங்கள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.