டைமண்ட் லீக்: ஜமைக்கா வீராங்கனை முதலிடம்

655

கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி-அன் ஃப்ரேஸர்-ப்ரைஸ் (படம்) வெற்றி பெற்றார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் 11.13 விநாடிகளில் இலக்கை எட்டி ப்ரைஸ் முதலிடம் பிடித்தார். நைஜீரிய வீராங்கனை ஓக்பேர் 11.18 விநாடிகளில் வந்து 2-ம் இடத்தைப் பிடித்தார்.

800 மீட்டர் பந்தயப் போட்டியின் மகளிர் பிரிவில் உலக சாம்பியனான கென்யாவின் யுனிஸ் சம்மும், ஆடவர் பிரிவில் எத்தியோப்பியாவின் அமென் வோட்டும் முதல் இடத்தைப் பிடித்தனர்.

ஆடவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவின் நிகெல் ஆஷ்மியெட் 20.13 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெற்றி பெற்றார்.

கிப்ரோப்: ஆடவர் பிரிவிலான 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், நடப்பு உலக சாம்பியனுமான கென்யாவின் ஏஸ்பெல் கிப்ரோப் 3 நிமிடம் 29.18 விநாடிகளில் இலக்கை எட்டி முதல் பரிசை வென்றார்.

உயரம் தாண்டுதல் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான ரஷியாவின் இவன் இக்ஹோவ் 2.41 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்தார். 2.37 மீட்டர் உயரம் தாண்டிய கனடாவின் திரெக் ட்ரெüவின் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

SHARE