டோனியின் ஹெலிகொப்டர் ஷாட் மூலம் சிக்சர் விளாசிய ஷேவாக் (வீடியோ இணைப்பு)

356
மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் ஷேவாக் அசத்தலாக ஒரு சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான ஷேவாக், கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவர் தற்போது ஓய்வு பெற்றவர்கள் விளையாடும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் ஜெமினி அரேபியன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்த தொடரில் சாகிட்டரியஸ் ஸ்டைக்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய ஷேவாக் 11 சிக்சர், 10 பவுண்டரி என 62 பந்தில் 134 ஓட்டங்களை குவித்து மிரட்டினார். இதனால் அவரது அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 49 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது டோனி வழக்கமாக ஆடும் ஹெலிகொப்டர் ஷாட் மூலம் சிக்சர் விளாசி ஷேவாக் அரைசதம் கடந்தார்.

வீடியோ இதோ,

SHARE