உலக கோப்பை தொடரில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவோருக்கு தங்க பந்து (கோல்டன் பால்) விருது வழங்கப்படுவது உண்டு. இந்த விருதை பறிக்கக்கூடிய பட்டியலில் மெஸ்சி, மரியா, மாஸ்செரனோ (மூவரும் அர்ஜென்டினா),
தாமஸ் முல்லர், பிலிப் லாம், டோனி குரூஸ், மேட்ஸ் ஹம்மல்ஸ் (4 பேரும் ஜெர்மனி), ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), நெய்மார் (பிரேசில்), அர்ஜென் ரோபன் (நெதர்லாந்து) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
சிறந்த கோல் கீப்பருக்கான ‘தங்க குளோவ்ஸ்’ விருதுக்கான பட்டியலில் கீலோர் நவாஸ் (கோஸ்டாரிகா), மானுவல் நியூர் (ஜெர்மனி), செர்ஜியோ ரோமிரோ (அர்ஜென்டினா) ஆகியோரும், சிறந்த இளம் வீரர் விருதுக்கான பட்டியலில் மெம்பிஸ் (நெதர்லாந்து), பால் போக்பா, ராபால் வரானே (பிரான்ஸ்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் விருதை தட்டிச் செல்வது யார்? என்பது இறுதி ஆட்டத்திற்கு பிறகு தெரிய வரும்.