தடைசெய்யப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சரவனபவான்

727

தடைசெய்யப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்கின்ற கேள்விக்கு பதிலளித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சரவனபவான் கருத்துத்தெரிவிக்கையில்,

இலங்கையில் இருந்து இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பில் கண்டன அறிக்கைகள் எதுவும் விடவில்லை. காரணம் என்னவென்றால் வெளிநாட்டில் உள்ளவர்கள் எந்நேரத்திலும் குரல் கொடுக்கலாம். வெளிநாடுகளிலிருந்து குரல் கொடுப்பது என்பது இங்குள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதொன்றாக அமையாது. அந்தந்த நாட்டிற்கு ஏற்ப பேச்சு, கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது ஆகவே அவர்கள் எக்கருத்தாயினும் வெளியிடலாம்.

இலங்கையில் நிலமைகள் அப்படியல்ல. நாங்கள் ஒரு அறிக்கையினை வெளியிடும் முன்பு வர்த்தமானி அறிவித்தலின்படி எந்தசட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பதை முதலில் ஆராயவேண்டும். அதன்பின்னரே இதற்கு அடுத்தபடியாக என்னவழி இருக்கின்றதோ அதனை தெரிவுசெய்து முடிவுகளை எடுக்கும் நிலைக்குச் செல்லவேண்டும். இவ்வாறான முடிவுகளை எடுத்து அறிக்கைகளை விடுவதற்கு கால அவசாசம் தேவை. காரணம் அரசாங்கத்தினால் திடீரென்று அறிவிக்கப்பட்ட ஒரு விடயம்.எமது பகுதிகளிலும் சட்டவல்லுணர்களுடன் ஆராய்ந்த பின்னரே இதற்கான முடிவுகளை எடுக்கவேண்டும். இது எமக்கு உதவி செய்த அமைப்புக்களும் இருக்கின்றன. உள்நோக்கத்தோடே இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கான ஒரு தீர்வை எடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் ஒரு விடயம் என்னவென்றால் சர்வதேச சட்டதிட்டங்களையும் ஆராய்ந்து பார்க்கவேண்டியுள்ளது. அதற்கமைவாகவும் சில முடிவுகளை எடுக்கவேண்டும்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இதுதொடர்பில் கலந்தாலோசிக்கவேண்டியுள்ளது. ஆகவே ஓரிருமுறை பாராளுமன்றம் கூடவேண்டும். அதன்பின்னரே இதற்கான முடிவுகளைச் சொல்லலாம். இன்னுமொரு விடயம் என்னவென்றால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பில் நாம் பேசலாமா பேசக்கூடாதா என்கின்ற விடயத்தையும் ஆராய்ந்துபார்க்கவேண்டும். இவ்வாறான செய்திகளை பிரசுரிப்பதன் மூலம் அடுத்தகட்டம் என்ன நடக்கப்போகின்றது என்கின்ற சந்தேசமும் எழத்தோன்றுகின்றது. இவ்வாறான தடைச்சட்டத்தை அரசு ஏன் ஏற்படுத்தியிருக்கிறது என்கின்ற கேள்விக்கு பதிலளிக்கையில், பல காரணங்கள் இருக்கின்றது. தற்பொழுது கூறமுடியாது. காரணம் எனது கட்சியாலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாலும் இவ்விடயம் பற்றி ஆராய்ந்து சொல்லும் மட்டும் தனிப்பட்ட அபிப்பிராயங்களைக் கூறுவது அழகல்ல என்றும் கூறினார்.

SHARE