தத்தெடுத்து வளர்க்கும் நடிகை அபிராமியின் மகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப போட்டோ

85

 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அபிராமி கடந்த 1995ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன்பிறகு 1999ம் ஆண்டு சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான பத்ரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கல்லூரியில் படிக்கும்போதே சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து வந்த அபிராமிக்கு முதல் படம் பெரிய வெற்றியை கொடுத்தது.

அதன்பின் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

கடந்த 2004ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி, நடித்த விருமாண்டி படத்தில் நாயகியாக நடித்த அபிராமிக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

திருமணம்
கடந்த 2009ம் ஆண்டு பிரபல எழுத்தாளரான பவணனின் பேரன் ராகுல் பவணனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார்.

இப்போது 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள அபிராமி தொடர்ந்து நடித்து வருகிறார். அதோடு நடிகை அபராமி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இதோ அவர் கணவர் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படம்,

SHARE