தந்தையை காப்பாற்ற ஐ.எஸ் தீவிரவாதியை மணமுடித்தேன்

387
தனது தந்தையை காப்பாற்றுவதற்காக ஐ.எஸ் தீவிரவாதியை திருமணம் செய்து கொண்டதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.சிரியாவை சேர்ந்த ஹனான்(Hanan Age-26) என்ற பெண்ணின் தந்தையை, ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது செய்தனர்.

இதனையடுத்து, தனது தந்தையை விடுவிக்க பலமுறை அவர் தீவிரவாதிகளிடம் கெஞ்சியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அந்த அமைப்பை சார்ந்த தீவிரவாதி ஒருவரை திருமணம் செய்தால் தான், உனது தந்தையை விடுவிப்போம் என தீவிரவாதிகள் கூறி வற்புறுத்தியுள்ளனர்.

எனவே தந்தையை மீட்க வேறு வழியில்லாததால், அவர்களின் வற்புறுத்தலுக்கு பணிந்து அபு முகமது அல்-இராக்கி(Abu Mohammed al-Iraqi) என்பவனை மணந்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் கூறுகையில், தந்தைக்காக திருமணம் செய்து கொண்ட நான் பல பாலியல் கொடுமைகளுக்கு உள்ளானேன்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமணத்தை பற்றி கனவுகள் இருக்கும். ஆனால் எனது கனவுகள் அனைத்தும் நிறைவேறாமல் இருண்டு போயிவிட்டது என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

இந்நிலையில் திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், தாக்குதல் ஒன்றில் கணவர் இறந்து விட்டதால் சிரியாவிலிருந்து தப்பித்து துருக்கியில் ஒரு அகதியாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் தனது இருப்பிடத்தை தெரிந்து கொண்ட ஐ.எஸ் அமைப்பினர், சிரியாவிற்கு திரும்பி வரவேண்டும் என்றும் வேறொரு தீவிரவாதியை மறுமணம் செய்ய வேண்டும் எனவும் மிரட்டல்கள் விடுத்து வருவதால் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கழித்து வருவதாக கூறியுள்ளார்.

SHARE