தந்தை விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மகன் சஞ்சய், மகள் திவ்யா செய்த விஷயம்! புகைப்படம் இதோ

97

 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் Goat திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது.

Goat படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் தான் தளபதி 69. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என கூறப்பட்டு வரும் நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அன்று ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆனால், விஜய்யின் வீட்டில் அந்த பிறந்தநாள் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என பலரும் பார்த்தது இல்லை.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாள் அன்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் அவருடைய பிள்ளைகள் சஞ்சய் மற்றும் திவ்யா. அப்போது கேக் வெட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE