கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்டதால் பலத்த தீக்காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நான்கு நாட்களின் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவுக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிசாம் தெரிவித்தார்.
கணமூலை ரஹூமத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாயே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும்,அவர் சற்று போதைக்கு அடிமையாகியிருந்த நிலையில் சம்பவ தினமான கடந்த வியாழக்கிழமை தனது மனைவியிடம் 2ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளதுடன் மனைவி அவ்வாறு அவருக்கு பணம் வழங்காத நிலையில் அவர் வீட்டை விட்டுச் சென்றதாகவும்,அதன் பின்னரே இப்பெண் வீட்டினுள் சென்று தனது உடம்பில் மண்ணெண்ணெயினை ஊற்றி தீமூட்டிக் கொண்டுள்ளளார்.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் இடம்பெற்ற மரண விசாரணையின்போது தெரிய வந்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி ஹிசாம் தெரிவித்தார்.
இதனால் பலத்த தீக்காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அங்கு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற மரண விசாரணைகளின் பின்னர் தீமூட்டிக் கொண்டதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பை வழங்கி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிசாம் மேலும் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின் றனர்.