தனித்து நின்று நாசாவுக்கு சவால் விட தயாராகும் சீனா

323

 

விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பூமியிலிருந்து விண்கலங்கள் மற்றும் விஞ்ஞானிகளை கொண்டு செல்வது உட்பட தொடர்பாடலில் உள்ள கடினத் தன்மைகளை கருத்தில் கொண்டு நாசா நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்றினை ஆகாயத்தில் அமைத்துள்ளது.

இதே முயற்சியில் சீனாவும் காலடி பதித்துள்ள நிலையில் மிதக்கும் விண்வெளி ஆய்வுகூடம் (Space Lab) ஒன்றினை கட்டமைக்க தயாராகி வருகின்றது.

இதன் பரீட்சார்த்த முயற்சியில் Tiangong–2 எனும் விண்கலத்தினை இரண்டாவது முறையாக விண்ணில் ஏவியுள்ளது. இவ்விண்கலமானது 2022ம் ஆண்டு விண்வெளியில் கட்டமைக்கப்படவுள்ள ஆய்வு கூடத்தின் மாதிரியாகும்.

இம் மாதிரி விண்கலம் 10 மீற்றர்கள் நீளம் உடையதாகவும், 8.6 தொன் எடை கொண்டதாகவும் காணப்படுகின்றது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 393 கிலோ மீற்றர்கள் உயரத்தில் நிலை நிறுத்தப்படவுள்ள விண்வெளி ஆய்வுகூடத்தினை கட்டமைப்பதற்கான சில ஆரம்ப கட்ட பணிகள் 2020ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE