தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 52பேர் கைது !

287

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் ற்றச்சாட்டுக்காக 2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 80,981 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 உள் நுழையும் மற்றும் வெளியேறும் சோதனைச் சாவடிகளில் நேற்றைய தினம் மொத்தமாக 2,762 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் உரிய காரணமின்றி மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 326 வாகனங்களில் பயணித்த 783 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE