தனி அலகினைக் கோரும் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் – இல்லையேல் இலங்கையில் முஸ்லீம்களுக்கான தனி நாடு உருவாக்கப்படும்.

405

கடந்த சில வாரங்களாக முஸ்லீம் அரசியல்வாதிகள் தனியான ஒரு அலகு வேண்டும் என்று அரசாங்கத்தினை வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்பேசும் மக்கள் என்ற அடிப்படையின் கீழ் முஸ்லீம்களும் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். முஸ்லீம் காங்கிரஸ் என்ற போர்வையில் சர்வதேச முஸ்லிம் நாடுகளுடன் இணைந்து ஒரு தீவிரவாத இயக்கத்தை உருவாக்கும் நோக்கிலும், முஸ்லீம்கள் இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக வாழ்கின்றவர்கள் என்னும் நோக்கிலும் போலியான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லீம் காங்கிரஸ் என்ற கட்சியை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக சிறுபான்மைச் சமுதாயத்தில் தாமும் ஒரு இனம் என்பதைக் காண்பித்து தமது கலை, கலாசாரம், சமத்துவம் என்பன பேணப்படும் வகையில் தனியான அலகு ஒன்றிற்காய் மும்முரமாய்ச் செயற்படுகின்றனர்.

muslim-politicians

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது சம்பந்தனுக்கு அல்வாவினைக் கொடுத்த ரவூப் ஹக்கீம் அவர்கள் மீண்டும் தமிழ் சிங்களவர்களுக்கு அல்வா கொடுக்க முனைகிறார். வடமாகாணசபையில் ஒரு தமிழர் ஒருவரையே முதல்வராகத் தெரிவுசெய்வோம் எனக்கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வெற்றி பெற்றதன் பின்னர் தொப்பியினை மாற்றும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வந்தார். இன்று அதன் விளைவு பாரதூரமாகவே அமைந்துள்ளது. சமாதான காலத்தின்போது ஒஸ்லோ, நோர்வே எனப் பேச்சுக்கள் இடம்பெற்றபோது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அதனை குழப்பினார். தமிழினத்தின் போராட்ட வரலாற்றில் முஸ்லிம் இனத்தவர்களும், அரசியல்வாதிகளும் குளிர்காயும் செயற்பாட்டையே மேற்கொண்டனர். 1990களில் யாழ்ப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த முஸ்லீம்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு கிடைக்கவிருக்கின்ற தீர்வுத்திட்டங்கள் எல்லாவற்றிலும் குழறுபடிகளையே உருவாக்கினார்கள். குறிப்பாக ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லா, அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா, பசீர் சேகுதாவூத், பௌசி, அதாவுல்லா, அலவி மௌலானா மற்றும் முஸ்லீம் சமயத்தலைவர்களும் தீவிரமாக தமிழினத்தின் போராட்டத்திற்கு ஈடாக தமது செயற்பாடுகளில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இவ்முஸ்லிம் அரசியல்வாதிகள் பிரபாகரனை வன்னியில் சென்று சந்தித்து நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் வருவோம் என ரவூப் ஹக்கீம் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டார். இன்று அத்தகைய செயற்பாட்டினையும் மறந்து முஸ்லீம் காங்கிரசும், அதனது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் செயற்படுவது என்பது தமிழ் பேசுகின்ற மக்களை பிரித்தாளும் ஒரு செயற்பாடாகவே கருத முடிகின்றது.

இவர்களுடைய தீவிரவாதப்போக்கு மேலோங்கிச் சென்றதன் விளைவாகவே மஹிந்தவினது ஆட்சிக்காலத்தில் முஸ்லீம் வன்முறையாளர்களையும், இன வன்முறையைத் தோற்றுவிப்பவர்களையும், தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களையும் பொதுபல சேனா என்ற அமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டித்ததுடன் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். முஸ்லீம்களை தாக்குவதன் காரணம் என்ன என்பதை கலகொட அத்தே ஞானசார தேரர் காணொளிகளில் தெரிவித்திருக்கின்றார்.

 

gothabudu

இது வெளிப்படையான உண்மை. இன்று அல்கைதா தீவிரவாதம் இலங்கையில் உருவாகுவதற்கும் இவர்களது பின்னணியே காரணமாக அமைந்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையேந்திப் பிழைத்த இந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், இன்று மைத்திரியின் அரசில் அவரிடம் கையேந்திப் பிழைக்கின்றார்கள். அல்லாஹ்வின் பெயரால் பொய்யுரைத்து மறுகணமே அந்தக்கட்சியில் இருந்து இந்தக்கட்சிக்கு மாறிவிடுகிறார்கள். தமிழினத்தின் விடிவுக்காகப் போராடிய விடுதலைப்புலிகளும், அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இன்று நல்லதொரு நிலையை எட்டிப்பிடித்திருக்க, அதனைக் குழப்பும் நோக்கில் முஸ்லீம் அரசியல்வாதிகள் செயற்படும் விடயம் மிகவும் வேதனைக்குரியதாகும்.

 

மஹிந்த ராஜபக்ஷவினது காலத்தில் அமைச்சுப்பதவியிலிருந்தவர்களும், தற்போதைய அமைச்சர்களும் மக்களுக்கு உதவி செய்தார்கள். அது அவர்களது சொந்தப்பணம் அல்ல. அது அரசு வழங்கிய பணமே. தமிழ் மக்களுடைய பிரச்சினை அல்லது தமிழ்பேசும் மக்களது பிரச்சினை அது அல்ல. அது தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கான பிரச்சினை. இதனை நிர்மூலமாக்குவதற்கு கிழக்குமாகாணத்தில் கடந்த வாரத்தில் அமீர் அலி அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை மிகக்கேவலமாகப் பேசியிருப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாததொரு விடயமாகும். பணங்கொடுத்து மதம் மாற்றும் நிகழ்வுகளை முஸ்லீம் அரசியல்வாதிகள் நடாத்திக்கொண்டிருக்கிறார்கள். இதுபோல கிறிஸ்தவ மதத்திலும் இடம்பெறுகிறது. இவ்வாறானதொரு நிலைப்பாட்டை பகிரங்கமாகக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களின் உரை பிழையெனவும் அவரையொரு படிப்பறிவில்லாத முட்டாள் எனக்கூறியிருப்பது ஒரு அரசியல்வாதிக்கு உகந்ததல்ல.

மாறிமாறிவருகின்ற அரசாங்கம் ஒவ்வொன்றிலும் கையேந்திப் பிழைத்தவர்கள் அல்ல தமிழ் அரசியல்வாதிகள். அதற்குப் பொறுத்தமானவர் அமீர் அலி எனக்கூறினால் தவறேதுமில்லை. நடைமுறை அரசியலை எடுத்துக்கொண்டால் இந்த அரசாங்கத்திற்கு விலைபோகின்றவர்கள் யார்? விலை போய்க்கொண்டிருப்பவர்கள் யார்? த.தே.கூட்டமைப்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக அவர்கள் அடிவருடிகள் அல்ல என்பதை அமிர் அலி அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். புட்டுக்குழலுக்கு தேங்காய்ப் பூவினைப்போல என்று மறைந்த முன்னார் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்கள் கூறியிருந்தார். நிஜத்தில் அவர்கள் புட்டுக்குழழுக்கு தேய்காய்ப் பூ அல்ல. தமிழினத்தை விரோதிகளாகப் பார்க்கின்றார்கள். இன்றைய அரசியலிலும் கூட தமக்குச் சாதகமான பகுதிகளை எடுத்துக்கொண்டு வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் எப்படிப்போனாலும் பரவாயில்லை என்றவொரு நிலைப்பாட்டிலேயே இவர்களது அரசியல் தொடர்கின்றது. உண்மையில் முஸ்லீம் இனத்திற்கு எதிராக கலகொட அத்தே ஞானசார தேரரது செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது என்கின்றனர் பலர். காரணம் காலப்போக்கில் இலங்கையும் கூட ஒரு முஸ்லீம் தீவாக உருமாறும் நிலைக்குத் தள்ளப்படும் என்பதால்தான். அல்கைதா தீவிரவாதத்தினைக்கொண்டு தாம் எதனையும் சாதிக்க முடியும் என்ற துணிச்சலோடு தமது இனத்தில் 160கோடி முஸ்லீம்கள் வாழ்கின்றார்கள். தாம் சிறுபான்மையினர் அல்ல என மார்தட்டிக்கொள்ளும் முஸ்லீம் சமூகத்தலைவர்கள் இலங்கைத் திருநாட்டிலும் தமது அரசியலை நிலைநிறுத்தியிருக்கிறார்கள்.

தமிழினத்தின் விடுதலைக்காக இந்த மண்ணில் எத்தனையோ போராளிகள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். சமாதானத்திற்காக எத்தனையோ கட்டப்பேச்சுக்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அவை எதுவும் இறுதியில் கைகொடுக்கப்படாதநிலையில் இன்று ஒரு சுமுகமான அரசியல் தீர்வினை நோக்கி விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பு பாராளுமன்றிலும் அதற்கு வெளியிலும் செயற்பட்டு வருகின்றது. தமக்கான தனி அலகினை முஸ்லிம்கள் கோரி வருகின்றபோது இலங்கையில் இரு சிறுபான்மையினம் காண்பிக்கப்படும் ஒரு நிலை தோற்றுவிக்கப்படும். ஆகவே தமிழினத்தின் போராட்டத்தில் இந்த முஸ்லீம் இனத்தின் அடிவருடிகளும் குளிர்காய்ந்துகொள்ள நினைக்கிறார்கள். தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு ஒரு வரலாறு உண்டு. முஸ்லீம்களுக்கான வரலாறாக காட்டிக்கொடுப்பும் கட்சி மாறல்களுமே பதிவாகியிருக்கின்றது. ஒரு விடயத்தில் பாடம் கற்றுக்கொண்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவரின் நயவஞ்சகத் தனத்தினை புரிந்துகொண்டுள்ளார். ஆகவே இவர்களது முன்னகர்வினைக்கொண்டே அடுத்தகட்ட அரசியலை நகர்த்தவேண்டிய தேவை த.தே.கூட்டமைப்பிற்கு உள்ளது.

தற்போது இருக்கக்கூடிய முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் போராட்டத்திற்காக என்ன பங்கினை வகித்தனர்? காட்டிக்கொடுக்கும் வேலையினையே அரசுடன் இணைந்து செய்துவந்தனர். முள்ளிவாய்க்காலில் யுத்தம் நிறைவடைந்தபோது தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்திற்கெதிராக கோசங்களை எழுப்பியிருந்தனர். இவர்கள் தமிழ்பேசும் மக்கள் என்று கூறுவதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். அவ்வாறு அவர்களது கோசங்கள் இருந்தன. இலங்கையை தமிழ் மன்னர்கள் ஆண்ட வரலாறு இருக்கிறது. முஸ்லீம்கள் ஆண்ட வரலாறுகள் இருக்கின்றதா? என்பதுபற்றி வரலாறுகளைப் புரட்டிப்பார்க்க வேண்டும். சிங்களவனோடு தமிழன் சண்டை பிடித்த வரலாறு பதிவாகியிருக்கின்றது. குளக்கோட்டன், எல்லாளன், சங்கிலியன், பண்டாரவன்னியன் போன்ற மன்னர்களின் வரலாறுகளைப் புரட்டிப்பார்த்தால் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களுள் இவர்களும் உள்ளடக்கப்படுகின்றனர். இன்று சிங்களவர்கள் கூட தமிழர்களின் வரலாற்றை பாட நூல்களில் மாற்றியமைத்துள்ளனர். இதேவரிசையில் 30ஆண்டுகாலமாக அரசுடன் தனித்துப்போரிட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் இணைக்கப்படுகின்றார். இன்று முஸ்லீம் அரசியல்வாதிகளுடைய கடும்போக்கினைப் பார்க்கும்போது போராட்டமானது வேறுவடிவில் மாற்றம்பெறுவதற்கான சூழ்நிலைகள் உருவாகின்றது. ஆகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் கூட இவற்றைக் கவனத்திற்கொண்டு, நரித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவர்களிடமிருந்து தமிழினம் காப்பாற்றப்படவேண்டும் என்பதே இக்கட்டுரையின் பிரதான விடயமாகும்.

  • இரணியன் –
SHARE