தனுஷ்-அமலா பால் கெமிஸ்ட்ரி சூப்பர் 

481



திருமணத்துக்கு பிறகு அமலா பால் படம் திரைக்கு வருகிறது. டைரக்டர் விஜய்யை காதலித்து வந்தார் அமலா பால். இவர்களது திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு முன்பு அவர் ஒப்புக்கொண்ட படங்கள் ஒன்றிரண்டு திரைக்கு வராமல் இருந்தது. தனுஷ் ஜோடியாக அவர் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி இந்த மாதம் திரைக்கு வருகிறது. இப்படம்பற்றி இயக்குனர் வேல்ராஜ் கூறும்போது,ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த நான் இயக்கும் முதல்படம் இது. கேமரா கோணம் வைப்பது, லைட்டிங் செய்வது என்ற எல்லா வேலைகளையும் செய்துவிடுவேன்.

ஆனால் ஆக்ஷன் சொல்ல மறந்துவிடுவேன். பிறகு சுதாரித்துக்கொண்டு ஆக்ஷன் சொல்வேன். அதைப்பார்த்ததும் தனுஷ், அமலா பால் எல்லோருமே சிரித்துவிடுவார்கள். இப்படத்தின் ஸ்கிரிப்ட் தனுஷுக்கு பிடித்ததுடன் சில கருத்துக்களையும் சொன்னார். இப்படத்துக்காக சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கும் மாறி இருக்கிறார். பாடலும் எழுதி இருக்கிறார். அமலா பாலுடன் அவருக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. எளிமையாக அதேசமயம் மெச்சூராகவும் ஹீரோயின் தேவைப்பட்டார். அதற்கு அமலாபால் பொருத்தமாக இருந்தார்.

 

SHARE