தனுஷ் தான் அதுக்கு காரணம்.. விவாகரத்துக்கு பின் முன்னாள் கணவர் தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

77

 

நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர். இவர்களுடைய பிரிவிற்கு என்ன காரணம் என இருவரும் கூறவில்லை.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா பயணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில் அனிருத் குறித்து கேள்வி ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டது.

தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா
‘நீங்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அனிருத், இன்று இந்தியளவில் புகழின் உச்சத்தில் இருக்கிறார்’ என கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “அதற்கு தனுஷ் தான் காரணம், நான் இல்லை. அனிருத் இடம் இருக்கும் திறமையை தனுஷ் தான் கண்டுபிடித்தார். அனிருத்தின் பெற்றோர்கள் அவரை படிக்க வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தபோது, அவர்களின்டம் பேசி மனம் மாற்றினார். அனிருத்திற்கு கீபோர்டு வாங்கி கொடுத்தார். அதன்பின் 3 படத்தில் அனிருத்தை இசையமைப்பாளராக போடவேண்டும் என என்னிடம் கூறினார். இன்று அனிருத்தின் வளர்ச்சியை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என கூறினார் ஐஸ்வர்யா.

இசையமைப்பாளர் அனிருத் தான் ஏறும் பல மேடைகளில் தனுஷ் தனக்கு கொடுத்த வாய்ப்பை பற்றி பேசினார். அந்த D இல்லனா இந்த A இல்ல என்று மாஸாகவும் கூறியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE