தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தும் மஞ்சும்மல் பாய்ஸ், ப்ரேமலு.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

85

 

சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்கள் மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் ப்ரேமலு.

இந்த இரண்டு திரைப்படங்களும் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மஞ்சும்மல் பாய்ஸ்
ஆம், ஒரே ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் கட்டிப்போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 180 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் ரூ. 52 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

ப்ரேமலு
அதே போல் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளியான ப்ரேமலு உலகளவில் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், கடந்த வாரம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 3 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.

மலையாளத்தில் உருவான இந்த இரு திரைப்படங்களும், தமிழ் படங்களுக்கு நிகரான வசூலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE