தமிழக – ஈழத்தமிழர் உறவில் விரிசல் ஏற்படுவதைத்தடுக்க கூட்டமைப்பு போராடுமா?

281

சசிகலா நடாராஜன் நிழல் முதல்வராக இருக்கும் சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களுடனான உறவுநிலை குறித்த அ.தி.மு.க.வின் போக்கு எப்படியிருக்கும் என்பது குறித்த ஐயங்கள் பலமாகவே தமிழுணர்வு வட்டாரங்களால் எழுப்பப்படுகின்றது.

காரணம் வடக்கு முதல்வர் விக்கியுடன் சசிகலாவின் குடும்பமோ அவர்களுடடைய ஆளணியோ ஒத்துப் போகமாட்டார்கள் என்ற சம்பவச் சாட்சியங்களுடன் கூடிய தகவல்களேயாகும்.

ஏனென்றால் பிரேமனந்தா என்கிற முதல்வர் விக்கினேஸ்வரனின் ஆத்மார்த்த குருவின் வீழ்ச்சிக்கே காரணம் யாரென்றால் அது சசிகலாவும், நடராஜனும் அவர்களது உறவுகளுமேயாகும்.

இதனைப் பிரேமானந்தா கூட நேரடியாக ஐ{னியர் விகடனிற்கு இரண்டு தடவைகள் சொல்லியிருக்கின்றார்.

அதைவிட இந்தியாவின் விவேகம்சார் ஆங்கிலப் பத்திரிகையான “அவுட்லுக்” மற்றும் “டெக்கான் ஹெரால்ட” கூட ஆதரங்களுடன் சொல்லியிருக்கின்றன. பிரேமானந்தாவின் சீடர்களாக மாறிய சசிகலா குழுமம் பல தேவைகளை அவர் மூலம் சட்டவிரோத பணப்பரிமாறல் போன்ற தேவைகளை நிறைவேற்றியிருந்தது.

அதிலும் 1991ல் ஜெயலலிதா பதவியேற்றதன் பின்னராக இவ்வாறான பல உதவிகளைப் அவர்கள் பெற்றதாகவும், பெருந்தொகை பணத்தைக் சட்டவிரோத ஹவ்லாப் பணப்பரிமாற்றத்திற்கான உதவியைக் கேட்ட போது அதனை பிரேமானந்தா செய்ய மறுத்தபோது அவரது அந்தரங்களை வெளிக்கொணர்ந்தாகவும் பத்திரிகைகள் பகிரங்கமாகச் செய்திகளை வெளியிட்டன.

அதிலும் பிரேமானந்தா வசமிருந்த 150 ஏக்கரில் சுமார் 47 ஏக்கர் நிலத்தை மருத்துவக்கல்லூரி கட்ட அவரது சீடர்களான சசிகலா குடும்பம் கேட்டதை மறுத்த போதே ஆச்சிரமத்தில் நடந்த விடயங்களில் விசாரணைக்கு அவர்கள் அனுமதியளித்தனர். அந்த வழக்கே இந்திய வரலாற்றிலேயே டி.என்.ஏ பரிசோதனை முறை மூலம்,
mannargudi
பிரத்தானிய வல்லுனர்களின் மீள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிரேமானந்தாவே கர்ப்பமாவதற்கு காரணம் எனக் கண்டறியப்பட்டு மூன்று மட்டங்களில் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்ட வழக்காக அது இருந்தது.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், 2011ம் ஆண்டு பிரேமானந்தா இறக்கும் வரை சிறையிலிருந்து ஒவ்வொரு வருடமும் இரண்டு தடவைகள் “பரோலில்” ஆச்சிரமத்திற்கு வருவார். அப்போதெல்லாம் கொழும்பிலிருந்து ஆச்சிரமத்திற்குச் சென்று அவருடன் தங்கியிருக்கும் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் 2011ல் பிரேமானந்தாவிடம் “இங்கிருந்தால் சிறையிலேயே காலத்தைக் கடக்க வேண்டும் எனவே மகிந்தா (அப்போது ஜனாதிபதியாக இருந்தவர்) கூறிய ஆலோசனைப்படி இலங்கைக்கு வந்து விடுங்கள் எனக் கோரிக்கை விடுத்தார்”.

இதில் கசப்பான உண்மை யாதென்றால், ஒரு நாட்டின் உச்சநீதவானாக இருந்தவர், நீதித்துறை பிரேமானந்தாவிற்கு வழங்கிய தண்டனைகளை ஏற்க மறுக்கின்றார். இந்தியத் துணைக்கண்டத்தின் மூன்று நீதிமட்டங்கள், புதுக்கோட்டை நீதிமன்று, தமிழ்நாடு உச்ச நீதிமன்று, இந்திய நீதிமன்று என மூன்று நீதிமன்றுக்களிலும் இந்தத் தண்டனை நிரூபிக்கப்பட்டது மாத்திரமல்ல,

இந்தியாவின் அதிசிறந்த சட்டத்தரணியும், முன்னைநாள் இந்தியச் சட்ட அமைச்சருமான ராம் ஜெத்மலானியே பிரேமானந்தாவிற்கான வழக்கறிஞராக ஆஜராகினார் என்பதும் அவராலேயே இந்தத் தண்டனைகளைக் குறைக்கக் முடியாமல் போனதையும், “இலங்கையின் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசராக” இருந்தவர் மறுதலிக்கின்றார்.

இந்த விடயம் சசிகலாக் குழுமத்தின் பார்வைக்கு சென்று திரு. விக்னேஸ்வரன் ஒரு பகையாளியாகவே கருதப்பட்டார், பார்க்கப்பட்டார். 2011ல் விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவித்த போது இலங்கையின் உச்சநீதிமன்ற நீதியரசர். இன்று அவர் வடக்கு மாகாணத்தின் முதல்வர் எனவே இந்த தனிப்பட்ட கருத்துக் கூறல் எந்தவிதத்திலும் தமிழர்களுடனான உறவுப் பேணலில் தடையாக இருக்கக் கூடாது என்பதும்,

தமிழ்ச் தேசியக்கூட்டமைப்பின் தலைமை இந்த விவகாரத்தில் நின்று நிதானித்து மக்களிற்கு நன்மையை ஏற்படுத்தும் முடிவுகளை எட்ட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இப்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை குறித்த ஆழ்ந்த பார்வையுடன் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களும் இந்த முயற்சிகளிற்கு ஆதரவு வழங்குவார் என நம்புவோம்.

ammapost.com

SHARE