தமிழரசுக்கட்சியை சிதைக்க கடும் முயற்சி: சிறீதரன் குற்றச்சாட்டு

103

 

உரிமைக்கான பாதையை நோக்கி செல்லும் தமிழரசுக்கட்சியை சிலர் தங்களின் சுயலாப அரசியலுக்காக சிதைக்க முற்படுவது கவலையளிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Shritharan Sivagnanam) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கட்சியின் நிலையில் மனம் பாதித்த நிலையில் நாம் இருக்கின்றோம். சுயநலத்துடன் சேர்ந்த சூழ்ச்சிகரமான சில செயற்பாடுகள் நடைபெறுகின்றது. என்னை நேரடியாக தாக்காவிட்டாலும் வேறு சிலரைக்கொண்டு தாக்க முற்படுகின்றனர்.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் முக்கிய கட்சியாகிய தமிழரசுக்கட்சி தன் நிலையை இழந்து எந்த நீதிமன்றத்திற்கு எதிராக வாதாடினோமோ அந்த நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE