தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா, மற்றும் செயலாளர் ஆகியோரை வரவேற்றும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள துளசி மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கைத் தழிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தநிகழ்வுக்கு அதன் தலைவர் கி.சேயோன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இலங்கைத் தழிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, அக்கட்சியின் புதிய செயலாளர் கி.துரைராஜசிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.