தமிழரசு கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இயலாமை தவறுகளை திருத்திக்கொண்டு செயல்ப்படுங்கள்

28

 

உங்களின் இமாலய தவறுகள்…
சர்வதேச விசாரணை என்கிற கோரிக்கையை தர்க்க ரீதியாக முன்வைத்திருக்க வேண்டியிருந்த போதும் அது முடிந்து விட்டது என்றும்…
அதை மீள கோருவதில் அர்த்தமில்லை என அறிவித்தது…
காணாமல் போனோர் அலுவலகத்திற்கு (OMP) ஆதரவளித்து பாதிக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச ரீதியான அழுத்தங்களை நீர்த்து போக செய்தீர்கள்…..
இராணுவம் குற்றம் செய்த்திருக்கின்றது என்று சொல்கின்ற வேளை அவை தற்செயலான குற்றங்கள் (isolated incodents/ crimes) என்ற தோற்றப்பாட்டை உருவாக்க எடுத்த முயற்சிகளை தடுக்க முயற்சிக்காது இருந்தீர்கள்…
குறிப்பாக ரவிராஜ் படு*கொ*லை உட்பட பல குற்ற செயல்களுடன் தொடர்புடையோர் விடுவிக்க பட்டபோதும் மௌனமாக இருந்தீர்கள்….
இலங்கையின் நீதித்துறையை பாராட்டும் முகவுரை பந்தியை உள்ளடக்கி ஐ. நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட கால அவகாச தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி இனத்தை அவமானப்படுத்தி இருந்தீர்கள்….
இனப்படுகொலை குறித்த எங்கள் நிலைப்பாடுகளில் தவறான பொருள்கோடல்களை உருவாக்கினீர்கள்….
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்க இலங்கை அரசாங்கத்திற்கு விருப்பு (Political Will) இருக்கின்றது என்பதை எங்களாளே நிறுவ முயற்சித்தீர்கள்…
புது அரசியலமைப்பாக்க முயற்சியிலிருந்த அபாயங்களை மறைத்து ஒற்றையாட்சிக்கு புது வரைவிலக்கணம் எழுதி கொடுத்தீர்கள்…
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க முயற்சிக்கப்பட்ட போது அதையும் ஏற்று கொண்டீர்கள்…
மஹிந்த ராஜபக்சே காலத்தில் உருவாக்கப்பட்ட பல சிங்கள குடியேற்றங்களுக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட போதும் பௌனமாக கடந்து சென்றீர்கள்….
13 ஆம் திருத்தத்தின் கீழான மாகாணசபையொன்றின் போதாமைகளை அம்பலப்படுத்த கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு வடக்கின் மாகாணசபையை முடக்கும் முயற்சிகளுக்கு உதவி செய்தீர்கள்…
யாழ்பணத்தின் பல்கலை கழக துணைவேந்தர் இராணுவ புலனாய்வாளர் தலையீடுகளால் பதவியிழந்த போது கூட வேடிக்கை பார்த்தீர்கள்….
வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பிக்கப்பட்ட பல காணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் இருக்கின்றது என பகிரங்கமாக அறிவித்தீர்கள்….
கன்னியா வெந்நீர் உள்ளடங்கலாக பல வழக்குகளில் தவறான பொருள்கோடல்களை செய்திருந்தீர்கள்…
எந்த கட்டுப்பாடுகளுமின்றி தொடர்ந்த தொல்லியல் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உட்பட மத்திய அரச நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை வேடிக்கை பார்த்தீர்கள்….
இந்த நிலையில் இப்போதாவது சிங்கள கட்சிகள் பேசும் அரசியல் பேரினவாதம்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்….
இந்தவிடத்தில் செயன்முறைகளையும் கட்டமைப்புகளையும் கட்டி எழுப்புவதன் மூலம் மட்டுமே நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்…..
மாறாக செயன்முறை விட்டுக் கொடுத்து ஆளுக்காள் சண்டை போடுவதில் எந்த பயனும் கிடைக்காது……
தமிழ் தரப்பின் பிரதான தரப்பாக தமிழரசு கட்சியின் புதிய தலைமை நடந்த தவறுகளை புரிந்து கொண்டு செயன்முறைகள் குறித்தும் கட்டமைப்புகள் குறித்தும் தீவிரமாக சிந்திப்தோடு….பழையவர்கள் ஒதுங்கி புதியவர்களுக்கு இடம் கொடுத்து நல்ல வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்….
SHARE