இதன்போது இக்குடும்பத்திற்கு வீடு அமைப்பதற்காக சுவிஸ்லாந்தில் வசிக்கும் சுதாகர் சபாநாயகம் என்பவரினால் வழங்கப்பட்ட நான்கு இலட்சம் ரூபாய் நிதி மூலம் வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன் இக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சுயதொழில் புரிவதற்கு ஜேர்மனியில் வசிக்கும் எஸ்.தனபாலசிங்கம் என்பவரினால் மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு மூன்று பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிடுவதற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியினை டென்மார்க்கில் வசிக்கும் கோபாலகிருஸ்ணன் என்பவர் பேரவையின் வங்கி கணக்கிற்கு அனுப்பிவைத்துள்ளார். நெதர்லாந்து தமிழ் கலாசார உதவி நற்பணி மன்றத் தலைவர் வ.கதிர்காமத்தம்பி என்பவரால் நீர் குழாய் பொருத்துதல் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் செய்வதற்கு எழுபத்தையிரத்து அறுபது ரூபாய் பேரவையின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இவர் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைக்கு இரண்டு தடவை உதவிகள் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு பிள்ளைகளின் அத்தியாவசிய செலவினங்களுக்காக அமெரிக்காவில் வசிக்கும் எஸ்.பாலா பதினையாயிரத்து நூற்று இருபது ரூபாவும், கனடா றொரோன்டோவில் வசிக்கும் கோபால் ஆறுமுகம் பன்னிரண்டாயிரம் ரூபாயும் மற்றும் ராமநாதன் ரகுசங்கர் ஆறாயிரம் ரூபாவும் பேரவையின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர். கனடா றொரோன்டோவில் வசிக்கும் கோபால் ஆறுமுகம் என்பவர் மூன்று குழந்தைகளின் வாழ்வாதாரச் செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். இவ்உதவிகளைப் புரிந்த சுவிஸ்லாந்தில் வசிக்கும் சுதாகர் சபாநாயகம், ஜேர்மனியில் வசிக்கும் எஸ்.தனபாலசிங்கம், நெதர்லாந்து தமிழ் கலாசார உதவி நற்பணி மன்றத் தலைவர் வ.கதிர்காமத்தம்பி, அமெரிக்காவில் வசிக்கும் எஸ்.பாலா, ராமநாதன் ரகுசங்கர், கனடா றொரோன்டோவில் வசிக்கும் கோபால் ஆறுமுகம், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், உதவிகளுக்கு உறுதுணையாக விளங்கிய பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு மூன்று குழந்தைகளின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.