தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஈழத்தை தவிர்த்து கூடுதல் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பேன் – சஜித் பிரேதாச
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.
லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி.
வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது. வாஸ்கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள். இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.
அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.
ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.
1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார்.
அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்துபோய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.
1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.
அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது.
இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.
இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.
தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால் வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.
இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது.
இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர்.
இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை உமாமகேஸ்வரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார். மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை.
கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலஸ்தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம். ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம். யூகோஸ்லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டது போல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.
இந்தியா, சீனா போர் நடக்கும் போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீரசிங்கம் அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.
வங்கதேசப் பிரச்னையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிஸ்தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது.
வங்கதேசம் பிரியும்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன் தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.
இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது.
அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடர்களை அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செஷல்ஸ் தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக் கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது.
ராணுவத் தளவாடங்கள், அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல.
எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம்.
ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.
தமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராஜபட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார். இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.
இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்னையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும்.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம்.
ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை
தேசியம் பற்றிய சரியான நிலைபாடு எடுக்காது, போல்சுவிக்குகள் இரஷ்யப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சி நோக்கி நகர்த்தியிருக்க முடியாது. தேசியம் பற்றிய தெளிவான பார்வை புரட்சியை முன்னடத்த மட்டுமல்ல, புரட்சிகர கட்சியை கட்டுவதற்கும் அவசியம். இரஷ்யப் பெரும் தேசிய இறுகிய பிடிக்குள்ளும், பல் தேசிய அடையாளங்களை புரட்சிகர மாற்றுக்காக வென்றெடுக்கும் வேலையை செய்தனர் போல்சுவிக்குகள். இதற்காக தேசியம் பற்றிய தெளிவான அரசியல் நிலைப்பாடு – கோரிக்கை -ஆகியவற்றை தமது தலையைய ஆயுதமாக அவர்கள் முன் வைத்தனர். தேசிய விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு அணுகுவது – ஒரு தேசிய இனம் (அல்லது குழுவின்) தேசியவேட்கையை – அவர்தம் விடுதலை உணர்வை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி பல்வேறு பார்வைகள் –மற்றும் தத்துவார்த்தக் கோட்பாட்டு பார்வைகள் பல அக்காலத்தில் இருந்தன. இவற்றுக்கு மத்தியில் தூர நோக்குள்ள – ஒடுக்கப்படும் மக்கள் நலனை முதன்மைப்படுத்திய ஒரு செயற் திட்ட கோரிக்கையை முன்வைக்கும் நோக்கமாகவே ‘சுய நிர்ணய கோரிக்கை’ லெனின் முதலானவர்களால் முன் வைக்கப் பட்டது.
இக்கோரிக்கை வைக்கப்பட்ட மாநாட்டில் தொடங்கியும் – அதன் பின்னும் இது பற்றி பல காரசாரமான விவாதங்கள் நடந்துள்ளன. இக்கோரிக்கை தேசியத்துக்கு அடிபணிய வழி ஏற்படுத்துகிறது எனவும் –இது தொழிலாளர்களை உடைக்க வழி செய்யும் எனவும் பல்வேறு குற்றச் சாட்டுகள் அப்போதே முன் வைக்கப் பட்டது. அதுவும் ரோசா லக்சம்பேர்க் முதலான சிறந்த மார்க்சிய மேதைகள் இதை முன் வைத்தனர். இந்தக் குழப்பத்துக்கு மத்தியில் இந்தக் கோரிக்கையின் அவசியத்தை – அதன் நடைமுறைத் தேவையை விளக்கி தேசிய கோரிக்கை சார் பல தெளிவுகள போல்சுவிக்குகள் ஏற்படுத்தி இருந்தனர். இரஷ்யப் புரட்சி நிகழ்ந்த பொழுது போல்சுவிக்குகளின் தேசியம் பற்றிய சரியான நிலைப்பாடும் அதன் அத்தியாவசிய தேவையும் தெட்டத் தெளிவாகி விட்டது. போல்சுவிக்குகள் ‘சுய நிர்ணய கோரிக்கையை’ வெறும் வெற்றுச் சுலோகனாக பாவிக்கவில்லை என்பதை புரட்சியின் போதும் புரட்சிக்குப் பின்னும் நிருபித்துச் சென்றனர். எஸ்டோனியா முதற்கொண்டு பல நாடுகளில் இன்றும் ‘லெனின் விடுதலை பெற்றுத் தந்தார்’ எனப் பேசும் எழுதும் பழக்கம் உண்டு. மார்சியத்துக்கு லெனின் வழங்கிய மாபெரும் பங்களிப்பு அவரது தேசியம் சார் எழுத்துக்கள் என ட்ரொட்ஸ்கி அவரை பல இடங்களில் புகழ்ந்து எழுதியிருப்பதையும் நாம் வாசிக்க முடியும்.
புரட்சியின் போது தெளிவான இந்த மார்சிய நிலைப்பாட்டை மீண்டும் முடிவுக்கு கொண்டு வந்தார் ஸ்டாலின். ஸ்டாலின் எழுதிய தேசியம் பற்றிய ஒரே ஒரு கட்டுரைதான் அவரது முக்கிய பங்களிப்பாக கருதப்படுகிறது. அதில் பல ‘வரையறைகள்’ ஊடாக இறுக்கமான பார்வையை ஸ்டாலின் முன் வைத்திருப்பதை பார்க்க முடியும். ஒரு நாட்டுக்குள் சோசலிசம் என்று பேசி- மார்சியத்தை குழி தோன்றி புதைக்கத் தொடங்கிய கையோடு லெனினிச தேசிய கோட்பாடுகளும் சிதைவுக்குள்ளாகிப் போயின. சுய நிர்ணயம் என்பது பேரளவில் குறுகி –பலரது உரிமைகள் மறுக்கப்பட்டது. சோவியத் ரஷ்யா அடக்குமுறைகளை உள்வாங்கிய ஒன்றியமாக தோன்றி இன்று சுக்கலாக உடைந்து போய்விட்டது நமக்குத் தெரியும். தேசிய இனங்களின் ஒடுக்குதல் என்ற அடிப்படையில் சீனப் புரட்சி நிகழவில்லை. திபெத் முதற்கொண்டு பல்வேறு பிராந்தியங்களில் பலப்பட்டிருந்த தொழலாளர் ஆதரவின் அடிப்படையில்தான் சீனா முதலில் ‘ஓன்று பட்டது’. அதற்கு முன் அதிகாரத்தில் இருந்த சக்திகள் சீன வலதுசாரிகளின் (சியாங் கை சேக் முதலானவர்களின்) கையில் திபெத் முதலான இடங்களின் கட்டுப்பாடு இருப்பது பற்றி கண்டு கொள்ளவில்லை. இந்த உண்மை பல வலதுசாரிய வரலாற்றாசிரியர்களால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சீனப் புரட்சிக்குப் பின் வந்த சீன தேசியம் சார் நிலைப்பாடு அவர்களையும் ஸ்டாலினிசத்துக்கு நெருக்கமாகிய கோட்பாடு – மற்றும் நடைமுறைக்கே எடுத்துச் சென்றது. கலாச்சார புரட்சி பல மக்களை கொன்றோளித்தது மட்டுமல்ல பல்வேறு தேசிய அடையாளங்கள் – மற்றும் தேசியங்கள் நொறுக்கித் தள்ளப்படவும் உதவியது. இது தேசிய ரீதியான பிளவுகளை மேலும் கூர்மைப் படுத்தியது. பரந்த சீனா உடைந்து சிதறும் பல்வேறு போராட்டங்கள் இன்று எங்கும் கூர்மைப்பட்டு வருவதையும் நாம் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
2
பணி யுத்தக் காலத்தில் பலப்பட்டிருந்த பெரும்பான்மை இடதுசாரிய இயக்கங்கள் மேற்சொன்ன ஸ்டாலினிச- மாவோயிச நிலைப்பாடுகளின் தாக்கத்துக்கு உள்ளாகி இருந்தன. தெற்காசியாவில் தேசியம் சார் லெனினிச நிலைப்பாடு வெறும் பெயரளவில் மட்டும் – புத்தகங்களுக்குள் முடங்கி கிடந்தது. தேசியம் பற்றிய சரியான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டிய அத்தியாவசியம் குறிப்பாக தெற்காசிய இடதுசாரிகளுக்கு இருந்தது. இருப்பினும் பெரும்பான்மை முதன்மை கட்சிகள் (இந்திய கம்யுனிச கட்சிகள் போல்) லெனினிச நிலைப்பாட்டை உள்வாங்காமலே இருந்தன. ஒடுக்கப்படும் தேசியங்களுக்கு ஆதரவற்ற நிலைப்பாட்டை – ஏதோ ஒரு முறையில் பெரும் தேசிய அதிகாரத்துக்கு உடன்பட்ட நிலையை – ‘தொழிலாளர் ஒற்றுமை’ என்ற பெயரில் அவர்கள் வக்காளத்து வாங்கினர். இலங்கையில் பலமாக இருந்த லங்கா சம சமாஜ கட்சி இதற்கு ஒரு விதிவிலக்கு எனச் சொல்லலாம். ‘ஒரு மொழி இரு தேசம்’ எனப் பேசி எச்சரித்த வரலாறு அவர்களுக்கு உண்டு என்பது அறிவோம். இருப்பினும் அவர்கள் கூட நடைமுறையில் தேசிய கோரிக்கை சார் தூர நோக்கிய பார்வை அற்றவர்களாகவே இருந்து பெரும் தேசிய இனவாதத்துக்கு இரையாகிப் போயினர். எஞ்சி இருக்கும் ஒரு சிலர் இன்று மிக கேவலமான கொலைவெறி இனவாத நெருப்பை வளர்க்க உதவி வருவது அறிவோம்.
இந்தக் கட்சியை தவிர இலங்கைக் கம்யுனிசக் கட்சி – பிறகு பிரிந்து சண்முகதாசன் தலைமையில் உருவான பீக்கிங் பிரிவு – மற்றும் அதிலிருந்து பிரிந்து வளர்ந்த ஜே.வி.பி ஆகிய கட்சிகள் எவையும் தேசிய கோரிக்கை பற்றிய தெளிவான நிலைப்பாடு வைத்திருக்கவில்லை. இதில் குறிப்பாக கம்யுனிசக் கட்சியும் ஜே.வி.பி யும் கடுமையான இனவாதத்திற்கு அடிபணிந்து போயினர். ‘இடதுசாரிகள் நொறுக்கப்பட்டு அவர்கள் ஆதரவு குறைந்து வந்த வேளை கட்சியின் இருத்தலைக் காப்பாற்ற நாம் சிவப்புக் கொடியை இறக்கி வைத்து விட்டு தேசியக் கோடியைத் தூக்கிக் கொண்டோம்’ என ஜே.வி.பி யின் முக்கிய தலைமை உறுப்பினர் ஒருவர் வெளிப்படையாக லண்டனில் வைத்துக் கூறியது நினைவுக்கு வருகிறது. கோட்பாட்டு ரீதியான தெளிவு –அதன் அடிப்படையிலான செயற்பாடு, தலைவர்கள் மற்றும் உறுப்பினர் மத்தியில் மிகப் பலவீனமாக இருந்தமையால் இத்தகைய திடீர் உருமாற்றங்கள் ‘புரட்சிகர கட்சி’ என கூறிக்கொண்ட ஒரு கட்சிக்கு சாத்தியப் பட்டது. அதன் தலைவர் புத்தரின் தத்துவத்துடன் தமது கொள்கை நிலைப்பாட்டை இணைத்து பேசியபொழுது கட்சிக்குள் எந்த நெருப்பும் கிளம்பவில்லை.
பீக்கிங் பிரிவு பெரும்பாலும் மலையக மற்றும் வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் வேலை செய்த படியால் தெற்கின் பெரும் தேசிய அலைக்குள் முழுமையாக இழுபடவில்லை. அதே சமயம் சிங்கள தொழிலாளர்களை பெருமளவில் வெல்வதும் அவர்களக்கு சாத்தியப்படவில்லை. தேசிய இடைவெளி இதற்கு முதன்மைக் காரணம் என்ற தெளிவு அன்றும் இன்றும் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் இக்கட்சி தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் இயங்கி வந்தது. இவர்களின் தேசியம் சார் நிலைப்பாட்டின் போதாமையும் இவர்கள் நடவடிக்கைகள் முடங்க காரணமாயிற்று என்று சொல்வது மிகையில்லை.
இளையோர் ஆயுதத்தை தூக்கி போராட வந்த காலப்பகுதியில் இடது சாரி இயக்கங்களுக்கு என்ன நடந்தது ? என்ற ஒரு கேள்வி பலருக்கு உண்டு. ஆயுத முனையில் இடதுசாரிகள் முடக்கப்பட்டனர் என எல்லாப் பொறுப்பையும் ஆயுதம் தாங்கிய இளையோர் தலையில் கட்டி இறக்கி வைக்கும் வாதம்தான் பொதுவாக பதிலாக சொல்லப்படுகிறது. அது வெறும் பாதி உண்மைதான். அதுவும் பிற்காலத்தில் ஆயுத குழுக்களுக்கு இடையில் மோதல் ஆரம்பித்த காலப் பகுதியில் நடந்தவைகள். அக்காலத்தில் இடதுசாரிகள் – மற்றும் முற்போக்கு வாதிகள் என சொல்லிக் கொண்டு இயங்கியவர்கள் மத்தியில் இருந்த கோட்பாட்டு –செயற்பாட்டு தவறுகளை இன்றுவரை அவர்கள ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றே தெரிகிறது. போராட்டம் என களம் இறங்கிய இளையோர் இடதுசாரிய கட்சி நோக்கித் திரும்பாமைக்கு அவர்களின் மேட்டுக்குடித்தனம் – சத்தியத் திமிர் – ஆகியனதான் காரணம் என வாதிப்பது மிகத் தவறான அனுகுமுறை. போராட்ட காலத்தின் ஆரம்ப்பத்தில் திரண்ட ஒடுக்கப்படும் இளையோர் மேல் வாரித் தூற்றும் வாதம் இது. ஆக என்ன நடந்தது?
பீக்கிங் பிரிவு கட்சியின் தொடர்சியாக இன்று இயங்கிக் கொண்டிருக்கும் –புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் தலைமை உறுப்பினர் சி க செந்தில்வேல் அவர்கள் எழுதியுள்ள ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு’ வரை என்ற வரலாற்று நூல் இது பற்றி பல விசயங்களை தெளிவுபடுத்த உதவும்.
3
இந்த நூலில் முக்கியமான பல தகவல்கள் இருகின்றன. இலங்கையில் நீண்ட காலமாக அரசியல் நடவடிக்கைகளில் முனைப்புடன் இயங்கி வரும் தோழர் செந்தில்வேல் பலராலும் மதிக்கப்படுபவர். குறிப்பாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்தம் நடவடிக்கைகள் மற்றும் எழுத்துக்கள் மிக முக்கியமானவை. அவரது இந்த வரலாற்று நூல் சாதிய ஒடுக்குமுறை பிரஞ்ஞையுடன் எழுதப்படிருப்பது சிறப்பே. இருப்பினும் சில சமயங்களில் இந்தப் பார்வை மட்டும் கோட்பாட்டு போதாமையை மறைத்து நிற்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
தோழரின் ஆய்வுகள் ஒரு தனி நபர் சார்ந்தது மட்டுமல்ல. மாறாக புரட்சிகர கட்சியின் அரசியல் நிலைப்பாடு செயற்திட்டம் சார்ந்ததாகவும் இருக்கிறது. அந்த அடிப்படையில் நாம் இங்கு வைக்கும் கேள்விகள் கருத்துக்கள் பெரும்பாலும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் மேல் வைக்கபடுவதாகவும் இருப்பதை அவதானிக்க.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தோடு தொடங்கிய ஆயுதப் போராட்டம் முல்லைத்தீவில் முடிந்து போன -இடைக்கால வரலாறைப் – பதியும் நோக்கில் இப்புத்தகம் எழுதப் பட்டிருகிறது. இந்த அர்த்தத்தில் வட்டுக்கோட்டை தீர்மானம் மற்றும் அதைச் சுற்றி நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நூலாசிரியர் உணர்துள்ளார் என்பதை அறிகிறோம். அனால் அதற்கான தடயங்கள் நூலில் இல்லை என்றே சொல்ல வேண்டும்! ‘மார்க்சிய அணுகுமுறையில்’ பார்ப்பது என்று சொல்லிக்கொண்டு இந்த நிகழ்வுகளை மேலோட்டமாக பார்ப்பதை வக்காளத்து வாங்கிவிடமுடியாது.
‘முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதாக முடியும் என்ற வரலாற்றின் பாடத்தையும் இத்தோல்வியின் போது காணமுடிந்தது.’ என்று முல்லைத்தீவு படுகொலையில் முடிந்த வரலாறை அணுகி ஆரம்பிக்கிறார் ஆசிரியர். முதல் கோணல் முற்றிலும் கோணல் எப்படி மார்க்சிய பார்வையில் ‘வரலாறுப் பாடம்’ என்ற கோட்பாட்டுக் கேள்வியை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்தால் கூட யுத்த இறுதி பற்றிய தோழரின் கருத்தோடு ஒரு சொட்டும் உடன்பட முடியவில்லை. அழிவின் முழுக் காரணத்தையும் புலிகளிலும் அதன் தலைமையிலும் இறக்கி வைத்த அடிப்படையிலேயே ஆசிரியரின் ஆய்வு ஆரம்பிகின்றது. பூகோள அரசியல் – இலங்கை அரசு – தெற்கு மாற்றங்கள் எதுவும் அவர் கண்களுக்கு தென்படவில்லை. புலி எதிர்ப்பு என்ற ஒரு திரை பல புள்ளிகளை மறைத்து விட்டது. ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறைக்கே எதிரானவர்கள் என்றா சொல்கிறீர்கள் ? – சரியான அரசியல் நிலைப்பாட்டோடு இணைந்த ஆயுதப் போராட்டத்தையா நேபாள – மற்றும் பல்வேறு இந்திய மாவோயிஸ்டுகள் முன்னேடுகின்ற்றனர்?
இதே போல் வட்டுக்கோட்டை நிகழ்வுக்கு முற்பட்ட மாற்றங்களையும் ஆசிரியர் மேலோட்டமாக பார்த்துச் செல்வது தெரிகிறது. 1964ம் ஆண்டில் நிகழ்ந்த மாற்றம் – அப்போது லங்கா சம சமாஜ கட்சி நிகழ்த்திய குத்துக்கரணம் ஆகியன எத்தகைய அடிப்படை அரசியல் மாற்றங்களுக்கு வழி ஏற்படுத்தின என்ற தெற்கின் முதன்மை நிகவுகள் உள்வாங்கப் படவில்லை. கம்யுனிசக் கட்சி உட்பட எல்லா இடது சாரியக் கட்சிகளும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த காலப் பகுதி இது. தெற்கு இடதுசாரியம் – அரச அதிகாரம் நோக்கி சரியத் தொடங்கியதும் – சிங்கள இனவாதத்துக்கு நெருக்கமாகத் தொடங்கியதும் இக்காலப் பகுதியில் ஆரம்பமாகின. சண்முகதாசன் தலைமையில் பிரிந்த பீகிங் பிரிவு தம்மோடு இணைந்த சிங்கள இளையோரை தக்க வைக்க முடியாத நிலை தோன்றியது. இதனால் அந்தப் பிரிவு ‘தமிழ் கட்சியாக’ குறுகத் தொடங்கியது. அக்காலத்தில் உருவாகத் தொடங்கி இருந்த தேசியம் சார் பிளவு (polarisation) எவ்வாறு எல்லா அரசியல் அமைப்புக்களையும் தாக்கியது என்பதை தெளிவாக நாம் பார்க்க வேண்டும். இதையும் மீறி ஒரு புரட்சிகர போராட்ட சக்தி நிமிர வேண்டுமானால் தேசிய பிரச்சினை சார் சரியான கொள்கை அக்கட்சிக்கு இருந்தாக வேண்டும். சண்முகதாசன் கட்சி உட்பட யாருக்கும் அந்த நிலைப்பாடு இருக்கவில்லை. டட்லி –செல்வா ஒப்பந்தத்தை தாம் எதிர்க்கவில்லை எனக் கூறும் ஆசிரியர் கட்சி அப்போது என்ன நிலைப்பாட்டை முன் வைத்தது என சொல்லத் தவறி விட்டார். பிரிந்து போகும் உரிமை –அல்லது குறைந்த பட்சம் சுய நிர்ணய உரிமை என்ற கோரிக்கையை அன்று எந்தக் கட்சி கையில் எடுத்திருந்தது? அதற்கான அவசியம் அன்று இருக்கவில்லை என்றா சொல்கிறீர்கள்? மிகத் தீவிரமாக நிகழ்த்து கொண்டிருந்த தேசியப் பிளவை ஏன் இந்தக் கட்சிகள் அவதானிக்க தவறின?
இந்தக் காலத்து நெருக்கடிக்கு பிறகு அனைத்துக் கட்சிகளும் சிதைவுற்றன. இக்கட்சிகளின் அரசியற் போதாமை – வலது சாரிய அரசுடன் கூட்டு ஆகியனவும்தான் இவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தன. இந்த நெருக்கடிக்குள் வளர்ச்சி பெற்ற ஜே.வி.பி இக்கட்சிகளின் கொள்கை அற்ற வலது சாரிய கூட்டை விமர்சித்துதான் பல இளையோரை தன் பக்கம் வென்றது. இதைத் தவிர எண்பதுகள் வரை முக்கிய கட்சியாக இயங்கி வந்த நவ சம சமாஜ கட்சியும் இக்கால பகுதியில்தான் உருவாகி பலப்பட்டது. அவர்கள் சம சமாஜ தலைமைகளை எதிர்த்த அதே வேலை தேசியக் கோரிக்கை சார்பாக என்ன கருத்தை முன் வைத்தார்கள்? இது ஒரு முக்கியமான கேள்வி தோழர்கள். தெற்கிலும் பலமாக எழுந்த ஒரு கட்சி சுய நிர்ணய கோரிக்கையை – அதுவும் பிரிந்து போகும் உரிமை உட்பட்ட கோரிக்கையை ஆதரித்ததையும் – அதன்மூலம் சிங்கள தமிழ் இளையோரை இணைத்த, கட்சியை கட்டக் கூடிய நிலை இருந்தமையும் நாம் வரலாற்றில் புதைத்துப் பேச முடியாது. அதே சமயம் இக்கட்சி கூட ஏன் தமிழ் பேசும் இளையோர் மத்தியில் பெரும் சொல்வாக்கை நிலை நாட்ட முடியவில்லை என்பதும் – அவர்தம் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு ஒரு தளத்தை வழங்க முடியவில்லை என்பதும் முக்கிய கேள்விகள்தான்.
அங்கு இன்னுமொரு புள்ளியை நாம் தெளிவாக பதிய வேண்டிய தேவை எழுகிறது. தேசியக் கோரிக்கையை ஆதரிப்பது என்பது வர்க்கம் நீங்கிய அரசியல் செயற்பாடு இல்லை. தமிழ் தேசியத்துக்கான ஆதரவு என்பது தமிழ் தேசிய முதலாளித்துவச் சக்திகளுக்கான ஆதரவில்லை. விக்ரமபாகு முதலான தலைமைகள் தமிழ் விடுதலை போராட்டம் பற்றிய ‘சாகசத்’ தன்மை உணர்வோடு நிபந்தனையற்ற ஆதரவு நோக்கி நகர்ந்தனர். அதனால் அவர்கள் தமிழ் வலதுசாரிய தலைமைகள் பக்கம் தம்மை நிறுத்திக் கொள்ளும் தவறைச் செய்தனர். தமிழ் இளையோர் தமது தலைமைகளுக்கு எதிராக திரும்பிய வேளை இவர்கள் வர்க்கம் நீங்கிய பார்வையை முன் வைத்து இயங்க வேண்டி வந்தது, இவர்களை போராட்ட இளையோரிடம் இருந்து தனிமைப்படுத்தியது என்பது மிகையில்லை. இது ஒரு மேலோட்டமான பார்வை அல்ல. ஒரு புரட்சிகர கட்சி கூட தேசிய பிளவின் கூரிய விசைக்கு அப்பாற்பட்டதல்ல என்ற தெளிவுடனும் – நவ சம சமாஜ கட்சி மார்க்சியத்தை தமிழ் இளையோர் மத்தியில் கட்டும் பலத்தை உள்ளடக்கத்தில் கொண்டிருக்கவில்லை என்ற தெளிவுடனும்தான் மேற்படி அரசியற் புள்ளியை பேசுகிறோம்.
மா.லெ கம்யுனிஷ்ட் கட்சி, தேசியம் மற்றும் தேர்தலில் பங்கு பற்றுதல் தொடர்பாக தவறான நிலைப்பாட்டையே தொடர்ந்து வைத்து வருவதை பார்க்கிறோம். வட்டுக்கோட்டை தீர்மனாத்துக்கு முன்பு தமிழ் ஈழம் சாத்தியமில்லை என தாம் மேடைகளில் வாதித்து வந்ததை பெருமையாக எழுதுகிறார் தோழர் செந்தில்வேல். ஏராளமான இளையோர் இடதுசாரிய தேசியம் நோக்கிச் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் இதைச் செய்தனர். இதனால் இந்த இளையோர் மத்தியில் எதிர்ப்பையும் வெறுப்பையும் கட்சி சந்திக்க வேண்டி இருந்தது. 1970ம் ஆண்டு யாழில் நடந்த மிகப் பெரும் ஊர்வலத்தில் கட்சியை புறக்கணிக்கவும் – கட்சி தோழர்களுடன் மற்றவர்கள் மோதவும் இந்தப் பின்னணி முரண் முக்கியமாக இருந்ததை நாம் கவனிக்க வேண்டும். யாழ் ‘மேட்டுக்குடி வலதுசாரிய’ தாக்கம் இளையோர் மத்தியில் இருந்தது என வாதிப்பதில் ஒரு நியாயம் உண்டு. யாழ் மேலாதிக்கம் ஆளுமை செலுத்திய அக்கால கட்டத்தில் இடதுசாரிய இயக்கம் – அல்லது போராட்டக் கருத்துக்களுக்கு ஆதரவு இருக்கவில்லை என்பது மட்டுமின்றி அத்தகைய கருத்து நிலைகளுக்கு மேல் வெறுப்பும் ஒதுக்குதலும் -தூண்டப்பட்டு வந்த காலப்பகுதி அது. அக்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய அரசியற் பிரஞ்ஞையின் பலவீனமும் இதற்கு ஒரு காரணம்.
ஆனால் இளையோர் மத்தியில் மாறிக் கொண்டிருந்த அரசியல் உணர்வு இதற்கு எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. மாணவர் பேரவையும் –அதன் பின் வந்த இளைஞர் பேரவையும் ‘தமிழ் தேசியவாத அரசியல் சக்திகளின் பின்புலத்தில்’ இயங்கினர் என சுருக்கிப் பார்ப்பது தவறு. தமிழ் அரசியற் தலைவர்கள் மேலான வெறுப்பு 70 களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டதை மா.லெ கட்சி கவனத்தில் எடுக்கவில்லை. 1970 தேர்தல் காலப் பகுதியில் ‘பெரும் தலைவர்களுக்கும் கமாண்டர்களுக்குள் ஒரு பாடம் புகட்ட வேண்டும்’ என அவர்கள் எழுதிக் கொண்டிருந்தனர். தேசியம் நோக்கித் திரும்பிய முழு இளையோரும் தமிழ் வலது சாரிய தலைமையின் பின் நின்றனர் என்று பார்த்து அவர்களை எதிரிகளாக நிறுவிக் கொண்ட தவறை அன்றும் இன்றும் இந்தக் கட்சி செய்து வருகிறது. மா.லெ கட்சி 70 நவம்பரில் நடந்த பெரும் ஊர்வலத்தில் ஆரம்பத்தில் இருந்து கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஊர்வலம் நடந்து கொண்டிருந்த போது இடையில் புகுந்து இணைந்து கொள்ளும் சாகசத்தை அவர்கள் செய்ய முயன்றனர். இந்த தருணத்தில்தான் கைகலப்பு ஏற்பட்டது என்பது அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பலர் சொல்கிறார்கள். ஆனால் தவறான அரசியல் சுலோகங்களை எதிர்த்ததற்காக தாக்கப் பட்டதாக தோழர் எழுதி உள்ளார். தவறான சுலோகங்களை பல வலதுசாரிய இளையோர் – குறிப்பாக தமிழரசுக் கட்சி ஆதரவாளர் முன் வைத்தனர் என்பது உண்மையே. இந்தச் சிறு பான்மைக்காக ஒட்டு மொத்த ஊர்வலத்தையும் கண்டனம் செய்வது கட்சியின் மேலோட்டமான பார்வை – நடவடிக்கையை காட்டுகிறது. ஊர்வல முடிவில் பேச முயற்சித்த தமிழரசுக் கட்சி தலைவர்கள் பேச அனுமதி மறக்கப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பல இளையோர் பின் நாட்களில் பல ஆயுதம் தாங்கிய கட்சிகளில் இணைந்து செயட்பட்டிருக்கிறார்கள். பலர் தம்மை இடதுசாரிகளாக தமிழ் தலைமை – மற்றும் இலங்கை அதிகார சக்திகளுக்கு எதிராக நிறுத்தி போராட்ட அரசியலை தொடர்ந்திருக்கிறார்கள். மா.லெ கட்சி இந்த நடைமுறை எவ்வாறு நடந்தது எனவும் தாம் எப்படி இந்த இளையோரின் நகர்வை கோட்டை விட்டனர் எனவும் இன்றுவரை புரிந்து கொள்ளாத நிலையிலேயே செயற்படுகிறது.
முழுமையான மார்க்சியவாதிகளாக இளையோர் இடதுசாரி கட்சி நோக்கி வருவதில்லை. பல்வேறு காரணங்களுக்காக அதிகாரத்துக்கு எதிராக திரும்பும் இளையோர் போராட்ட அரசியலை நோக்கி மட்டுமே திரும்புகின்றனர். அவர்களை புறந்தள்ளாது, போராட்ட அரசியற் திட்டமிடல் –அதன் ஆழமான அறிதல் நோக்கி நாம் இவர்களை நகர்த்த வேண்டும். தேசியம் என்ற முட்டைக்கோதை மெதுவாக தட்டி உடைத்தால் ஒரு போல்சுவிக்கை பெற்றும் கொள்ள முடியும் என லெனின் ஒருமுறை இது பற்றி விளக்கி இருப்பார். சுய நிர்ணய உரிமை கோரிக்கையை முன்வைப்பதும் விடுதலை அரசியலுக்கான திட்டமிடலை முன் வைப்பதும் இதன் பகிதிகள் தான். ஆனால் கட்சி தன்னை விடுதலை அரசியலுக்கு எதிராக நிறுத்தி எல்லா இளையோரையும் கட்சிக்கு வெளியில் தள்ளி விட்டது. இது மட்டுமின்றி அவர்களை நேரடியாக தாக்கி கட்சி எதிர்ப்பு நிலைக்கு உயர்த்தியது. போராட்டம் நோக்கி வந்த இளையோருக்கு -கோட்பாட்டு ரீதியாகவும் – செயற்பாடு ரீதியாகவும் ஒரு தளத்தை வழங்க கட்சி தவறி விட்டது. ஜே.வி .பி க்கும் மா.லெ கம்யுனிஷ்ட் கட்சிக்கும் தேசிய கோரிக்கை சார்பாக அக்காலத்தில் என்ன வித்தியாசம் இருந்தது என்பதை தோழர்கள் எமக்கு தெரியப் படுத்துங்கள்.
தமிழ் ஈழக் கோரிக்கை என்பது மேலிருந்து எழுந்த ஒன்றல்ல. மாறாக இளையோரின், மாணவர்களின், இளம் தொழிலாளர்களின் பக்கம் இருந்து பலப்பட்ட ஓன்று. பத்தாயிரம் பேருக்கு மேலான இளையோரை யாழில் ஒரு ஊர்வலத்தில் கொண்டுவரும் சக்தி அன்று எந்த அரசியற் சக்திக்கும் இருக்கவில்லை. தரப்படுத்தல் மற்றும் பொதுவான தேசிய ஒடுக்குமுறை எதிர்ப்பு இவர்களைத் திரட்டியது. அவ்வாறுதான் தமிழ் ஈழக் கோரிக்கை பலப்பட்டது. இளையோர் ஆதரவை கவரவும் தமது வாகு வங்கியை பாதுகாக்கவும் இந்த இளையோர் இயக்கத்தை கைப்பற்ற தமிழரசுக் கட்சியும் மற்ற கட்சிகளும் முயன்றன. அதற்காக அவர்கள் பேசிய இன வாதத்திற்கும் இளையோர் மத்தியில் எழுந்த தேசிய வாதத்திற்கும் வித்தியாசங்கள் இருந்ததை ம.லெ கட்சி கண்டு கொள்ளவில்லை. வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு முன்பே ‘தமிழர் தரப்பு’ ஓன்று பட வேண்டும் என்ற கோரிக்கையும் உணர்வும் இளையோர் மத்தியில் ஓங்கி இருந்தது. அவர்கள் மேல் இருந்த நம்பிக்கையால் அன்றி அவர்களை வழிக்கு கொண்டு வர முடியும் என்ற நப்பாசையால் இந்த உணர்வு பலப்பட்டு இருந்தது. இந்த நப்பாசை உடைந்தமை ஆயுதப் போராட்டம் நோக்கி தீவிர இளையோரைத் திருப்பியது. அவர்கள் புரட்சிகர கட்சி நோக்கித் திரும்பும் சாத்தியம் எதையும் கட்சி உருவாக்கி இருக்கவில்லை.
இந்த அர்த்தத்தில் 1975ம் ஆண்டு நடந்த காங்கேசன்துறைத் தொகுதி இடைக்கால தேர்தல் மிக முக்கியமானது. இந்தத் தேர்தலில் பல இளையோர் முமுரமாக செல்வநாயகம் வெல்வதற்கு வேலை செய்தனர். செல்வநாயகம் பதவியை இராஜினாமா செய்துவிட்டு வந்ததற்கு ஏராளமான ஆதரவு அவருக்கு இருந்தது. அதனால் அவர் தூக்கப்பட்டார். இளையோரின் பங்களிப்பு இன்றி இந்த தேர்தலில் செல்வநாயகம் பெரும் வெற்றியை அடைந்திருக்க முடியாது. இத்தகைய இறுகிய நிலையிலும் அவரை எதிர்த்து நின்ற கம்யுனிசக் கட்சி ஆயிரக்கணக்கான வாக்குகளை வென்றது. அதற்கு அக்கட்சியின் அரசியல் நிலைப்பாடு காரணமல்ல. இந்தக் கட்சிக்கு சம சமாஜிகள் உட்பட சுய நிர்ணய உரிமையை ஆதரித்தோரும் ஆதரவளித்தனர். இடதுசாரிய வாக்கு வி . பொன்னம்பலத்துக்கு என்ற அடிப்படையில் உடைவு இருந்தது. இத்தருணத்தில்கூட இடதுசாரியத்துக்கு எத்தகைய ஆதரவு மாக்கள் மத்தியில் இருந்தது என்பதை இந்த தேர்தல் எடுத்துக் காட்டியது. அந்த வாக்குகளை ‘தமிழ் ஈழத்துக்கு எதிரான வாக்குகள்’ என தோழர் செந்தில்வேல் சுருக்குவது மிகத் தவறு. இத்தருனத்தில் அவர் கட்சி என்ன செய்தது? தாம் அந்த தேர்தலில் ‘அக்கறை கொள்ளவில்லை’ என தட்டிக் கழித்துக் கொண்டு செல்கிறார் தோழர். அப்போது கொந்தளித்துக் கொண்டிருந்த நிலவரம் பற்றி கட்சி என்ன அறிதலுடன் இயங்கியது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?
கட்சியின் நிலைப்பாடு இப்படி இருக்க, இளையோர் மத்தியில் இடதுசாரிய கருத்துக்கள் பரவுவதை தடுக்க தமிழ் தலைமைகள் கட்சியை தாக்குவதை முதன்மைப்படுத்தின. குறிப்பாக அமிர்தலிங்கம் மா.லெ கட்சியை அவ்வப்போது தாக்கியதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வேலையை செய்ய முயன்றார். ஒரு பக்கம் இடதுசாரிய இளையோரை ஒதுக்கி தமது கட்டுப்பாட்டில் இளையோர் இயங்குதலைக் கொண்டு வருதல் – மறுபக்கம் இக்கட்சியின் தமிழ் ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டை பயன்படுத்தி இடதுசரியத்தின் செல்வாக்கை உடைத்தல். ஆனால் அமிர்தலிங்கம் இந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை. வட்டுக்கோட்டையில் நிறைவேறிய தீர்மானம் ‘சோஷலிச தமிழ் ஈழ’ கோரிக்கையை முதன்மைப் படுத்தியது. இந்தக் கோரிக்கை கீழிருந்து மேல் எழுந்தது.
தமிழ் ஈழம் சாத்தியமில்லை எனவும் –அவாறு சாத்தியப்படுவதுகூட ஒரு ‘அந்நிய’ சக்தியின் உதவியுடனே நிகழும் எனவும் மா.லெ கட்சி திட்டவட்டமாக வாதிட்டு வந்தது – வருகிறது. தேசிய விடுதலைப் போராட்டத்தில் எந்தப் போராடம் ‘சாத்தியப்பாடு’ இருந்ததால் தொடங்கியது என்பதை கட்சி இன்றுவரை விளங்கப் படுத்தவில்லை. காஷ்மீர் தொடங்கி பாலஸ்தீனியம் வரை ‘விடுதலை’ சாத்தியமில்லை என்பதை அதிகாரத்தின் பக்கம் இருந்து பார்ப்பவர்கள் சொல்வர். அதற்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கப் போவதில்லை. தேசியக் கோரிக்கை என்பது மக்களின் சனநாயக – பொருளாதார கோரிக்கைகளுடன் பின்னிப் பிணைந்தது. மக்களின் பல்வேறு அபிலாசைகள் தேசியக் கோரிக்கையில் திரளும். இதற்கு எதிர் திசையில் நின்று ‘புரட்சி கட்டுகிறோம்’ எனப் பேசுவது வெறும் வெற்றுப் பேச்சாக மட்டுமே இருக்க முடியும். தேசிய எழுச்சிக் கூர்வாள் அந்தப் ‘புரட்சிகர’ திரட்சியை அறுத்துச் செல்ல வல்லது. தெற்கிலும் வடக்கிலும் அவ்வாறு நிகழ்ந்ததை நாம் பார்க்கிறோம்.
‘வேளாள மேட்டுக்குடி’ என்பதை ஒரு கட்சியின் அரசியல் எல்லைகளை –யாழ் மைய நீரோட்டத்தோடான அதன் தொடர்பை குறிக்க சொல்லலாம். அதையே அமைப்பின் அரசியற் பண்பாக தருவித்து தாண்டிச் செல்வது தவறான பார்வை. ஏனெனில் தேசிய அடிப்படையில் திரட்சி செய்யும் (செய்ய முயலும் ) கட்சிக்கு பல தளங்கள் இருக்கும். அடி மட்டத்தில் மேற்சொன்ன சாதிய பண்புக்கு எதிரானவர்களின் திரட்சி இருக்கும் வாய்ப்புண்டு. இந்த தெளிவுடன் தான் நாம் இக்கட்சிகளை அணுக வேண்டும். இது தவிர புரட்சிகர கருத்துக்களை நோக்கி நகர்வோரை நட்புச் சக்தியாக பார்த்து அவர்களை தொலை நோக்கு அரசியல் முன்னோக்கு பக்கம் நகர்த்துவது நமது கடமை. முடிந்த முடிவோடு எதிர் நிலையில் நிற்பது அரசியல் திட்டமிடல் குறைபாட்டையே காட்டி நிற்கிறது. இதனால்தான் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வெளியே எதிர்திசையில் நின்றது மா.லெ கட்சி.
இந்த தீர்மானம் மத சார்பற்ற சோஷலிச அரசு உருவாகவும் – சாதியத்தை முற்றாக அழிக்கவும் – தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு வெளியால் தள்ளி நின்றது கட்சியின் அரசியல் பலவீனம் அன்றி வேறென்ன? அந்த அலையை எப்படி அணுகுவது என்பது கட்சிக்குத் தெரிந்திருக்கவில்லை. தங்களால் கட்டுப்படுத்த முடியாத எல்லாவித போக்குகளையும் ஏதோ ஒரு பெயர் சொல்லி ஒதுக்க முயல்வதும் – ஒதுங்கி நிற்பதும் – இத்தகைய செக்டேரியன் (குருங்குழுவாத) அமைப்புக்களின் பொதுப் பண்பாக இருந்துவருகிறது. இத்தகைய கோரிக்கைகளுக்கு வடக்கு –யாழ் மத்திய தர வர்க்கத்திடம் மட்டும்தான் ஆதரவு இருந்தது என்ற புரிதல் நகைப்புக்குரியதன்று வேறென்ன? என்றைக்கு வடக்கு மைய வாதம் சாதி ஒழிப்பை முதன்மைப் படுத்தி இருக்கிறது? இந்த தீர்மான கொள்கைககளை ‘தமிழ் தலைமைகள்’ கொண்டு வந்தது எனப் பார்ப்பதும் – ‘மன்குதிரைக் கொள்கைகள்’ என விளாசித் தள்ளுவதும் மிக மோசமான குறுங்குழு வாத பண்பைத்தான் எடுத்துக் காட்டுகிறது. ‘சாத்தியம், யதார்த்தம், எதிர்காலம்’ போன்றவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார் தோழர். அந்த அடிப்படையிலா நீங்கள் சோஷலிசத்துக்கான கோரிக்கையை முன்வைக்கிறீர்கள்? சோஷலிச தமிழ் ஈழம் வேண்டாம் – சோஷலிச இலங்கை வேண்டும் என இனவாதத்தை மார்க்சிய சொல்லாடலால் மூடி மறைத்த ஜே வி பி க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? லெனினிச கட்சி என்று எந்த அர்த்தத்தில் உங்களை நீங்களே கூறிக் கொள்கிறீர்கள் எனத் தெரியவில்லை. ‘கொள்கை ரீதியான’ எதிர்ப்பை முன் வைத்ததாக கூறும் நீங்கள், அந்த கொள்கை என்ன – அது எவ்வாறு லெனின் கொகையுடன் உடந்படுகிறது என்பதையும் எழுதுங்கள்.
76 ல் தொடங்கிய இளையோர் நடவடிக்கைகள் மிக துரித கதியில் கூர்மைப் படத் தொடங்கி விட்டது. அதன் பிறகு உருவான அனைத்து ஆயுதம் தாங்கிய இயக்கங்களும் ஏதோ ஒரு வகையில் சோசலிச கொள்கைகளை ஏற்றுக் கொண்டவைகளாக இருந்தன. சோசலிசம் என்பதை அவர்கள் எவ்வாறு புரிந்து வைத்திருந்தனர் – அல்லது அவர்களின் அரசியற் திட்டமிடல்களில் எத்தகைய தெளிவு இருந்தது என்பது சரியான கேள்வியே. ஆனால் அவர்கள் வலதுசாரிய கொள்கை அடிப்படையில் விடுதலை அரசியலை முன்னெடுக்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதை அவதானிக்க வேண்டும். இளையோரின் நெருக்கடி தாங்க முடியாது இத்தகைய இடதுசாரிய கொள்கைகள் நோக்கி ஒட்டு மொத்த தமிழ் அரசியல் தளத்தையும் திருப்பிய வட்டுக்கோட்டை தீர்மானத்தை திட்ட வட்டமாக எதிர்த்து நின்ற மா. லெ கட்சி தாம் பலவீனப்பட்டதற்கு அடுத்தவரில் மட்டும் குற்றம் சாட்டுவது தவறு. முதற் குற்றம் உங்கள் தவறான கொள்கையும் செயற் திட்டமுமே.
கீழிருந்து உந்தப்பட்டு ‘சந்தர்ப்பவாத’ காரணங்களுக்காக சில கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கூட்டணி ஒரு வருடத்துக்குள்ளேயே தமது பழைய வலது சாரியக் கொள்கைகளுக்குத் திரும்பி விட்டனர். இவர்கள் ஒருபோதும் இடதுச்சாரியம் பக்கம் நின்றதில்லை. மிகுந்த ஆர்வத்துடன் 1977 தேர்தலில் வேலை செய்த இளையோர் அம்போ எனக் கைவிடப்பட்டனர். ஆயுதப் போராட்டம் முனைப்பு பெற்றது. அது தமிழ் தலைமைகளின் உயிரை எடுப்பதில் இருந்து ஆரம்பித்தது. இந்த தேர்தலை புறக்கணித்த கட்சி வழமை போலவே ‘நாட்டு நடப்புக்கு’ வெளியில் நின்றது. தமிழ் ஈழத்தை மறுத்து பேசுவது ஒரு பக்கம் – பாராளுமன்றத்தால் தேசிய பிரச்சினையை வெல்ல முடியாது என எனப் பேசுவது மறுபக்கம் – பின்பு அரசதிகார வலதுசாரிய ஒப்பந்தத்தை தீர்வாக ஆதரிப்பது இன்னொரு பக்கம் – என குழப்பமான நிலைப்பாட்டுக்கு எப்படி பெரும்பான்மை ஆதரவை வென்றெடுப்பது? ஏராளமானோர் வாக்களித்து அமிர்தலிங்கத்தை எதிர்கட்சி தலைவராக்கினர்! இதை வெறும் உணர்ச்சி அரசியல் என கடந்து சென்றுவிட முடியாது. அத்தேர்தலில் எதிரொலித்த தமிழ் மக்களின் தேசிய அபிலாசை – தெற்கில் நிலவிய வர்க்க உடைவு – மிக கூர்மைப் பட்டிருந்த தேசிய ரீதியிலான பிளவு – அதை பாவித்து தனது அதிகாரத்தை தக்க வைக்க முனைப்புக் கொண்டிருந்த முதலாளித்துவ ஐக்கிய தேசய கட்சி அரசு – என விசயங்களை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இவை எதையும் கட்சி ஒரு பொருட்டாக எடுக்கவில்லை.
தொழிலாளர் போராட்டங்களில் கூட்டணியோ அல்லது தமிழ் தலைமைகளோ பங்குபற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் இளையோரின் பங்களிப்பையும் அதோடு சேர்த்து வரலாற்றில் புதைக்க முடியாது. குறிப்பாக 1980 வேலை நிறுத்தத்தின் போது வடக்கு கிழக்கு எங்கும் நிகழ்ந்த நடவடிக்கைகளை சுட்டிக் காட்ட முடியும். வர்க்க நடவடிக்கைகளில் இறங்கிய இளையோர் நோக்கிக் கூட சரியான திசையில் நிற்க முடியாமல் போன வரலாறுதான் மா.லெ கட்சி வரலாறு. இந்த வேலை நிறுத்தம் உடைக்கப்ப படத்தன் வரலாற்று முக்கியத்துவமும் தோழர் எழுத்துக்களில் காணக் கிடைக்கவில்லை. பல்வேறு இடதுசாரியக் கட்சிகளின் (ஜே வி பி உட்பட) நடவடிக்கைகளும் இந்த தோல்விக்கு காரணம் என்பதும் அந்த தோல்விதான் தொழிலாளர் முதுகெலும்பை ஜே,.ஆர் உடைக்க உதவியது என்பதும் தோழர் கண்டு கொள்ளவில்லை. இது தவிர இதற்குப் பிறகு நடந்த விசயங்களுக்கு மக்கள் மேலும் குற்றச் சாட்டை வைக்கிறார் தோழர். ‘கொலைகளையும் கொள்ளைகளையும்’ மக்கள் விமர்சித்த சந்தர்ப்பங்கள் குறைவு என்கிறார் தோழர்!
இக்கால கட்டத்தில் மக்கள் யுத்தம் என பேசிவந்தது கட்சித் தலைமை. எத்தகைய மக்கள் யுத்தம் அது என தெரியவில்லை. இடதுசாரிய கருத்துக்களால் கவரப்பட்ட இளையோர் ஆயுதம் தாங்கிய யுத்தம் என இறங்கிய பொழுது அது வெறும் தேசியவாத பின்னடைவாக தெரிந்தது அவர்களுக்கு. ஆனால் சிங்கள இனவாதத்தை பலப்படுத்திய பண்டாரநாயக்கா ‘மன்னிக்கக்கூடிய சந்தர்ப்பவாதியாக’ தெரிந்தார். ‘தமிழர் பிரச்சினைக்குப் பரிகாரம் ஒன்றை அமுல் படுத்தக்கூடியளவிற்கு போதிய தேசிய அந்தஸ்தும் மக்கள் ஆதரவுமுடய ஓரேயொரு சிங்களத் தலைவர்’ அவர் என வர்ணிக்கப்பட்டார். தேசிய கோரிக்கைக்கு கட்சி இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்குள்தான் முடிவை தேடி நின்றது என்ற முடிவுக்கு நாம் வர முடியும். பாராளுமற்றத்துக்குளால் சாத்தியமில்லை என்ற வறண்ட வெற்றுக் கோசத்தை மக்கள் முன்னும் – கட்சி உறுப்பினர்கள் முன்னும் வைத்து விட்டு பாராளுமற்ற வளதுசாரிகளுக்கூடாக வரும் தீர்வை ஆதரிப்பதை கொள்கையாக கடைப்பிடித்து வந்திருக்கிறது கட்சி.
டட்லி- செல்வா ஒப்பந்தத்தை ‘மிகச் சிறந்த சமரசம்’ என வர்ணிக்கும் கட்சித் தலைமை – வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ‘விரக்தியிலும் ஏமாற்றத்திலும் ஏற்பட்ட கோஷம்’ என்று வர்ணிக்கிறது. இவ்வாறு முற்றிலும் தவறான பாதையில் நின்ற கட்சித் தலைமை கனடாவுக்கு குடி புகுந்த பின் முழுக் குத்துக்கரணம் அடித்துப் பேசிய வரலாற்றையும் நாம் பார்கிறோம். இளையோர் ஆயுதப் போராட்டத்தை தொடங்கியதை பாராட்டியது மாடுமின்றி – அதற்கு தாமும் ஒரு காரணாமாக இருந்த பாவனையிலும் அவர் பேசி இருக்கிறார். தமக்கு கீழ் திரளாவிட்டாலும் தமது செய்தி இளையோரை சென்றடைந்தது என்கிறார்! தோழர் செந்தில்வேல் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை.
மார்க்சிய – லெனினிச கட்சி என்ற பெயரில் இயங்கும் மாவோயிசக் கட்சிகள் எவ்வளவு தூரம் மார்க்ஸ் லெனின் ஆகியோரின் கருத்துக்களுக்கு உடன்பட்ட நிலையில் இயங்குகிறார்கள் என்பது கேள்விக் குறியே. குறிப்பாக தேசிய பிரச்சினை பற்றி தெளிவான நிலைப்பாடு பலரிடம் இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் சமூகம் சார் அவர்கள் புரிதலும் – புரட்சி கட்டுவது பற்றிய தெளிவு மற்றும் திட்டமிடல்களில் இருக்கும் குளறுபடிகளும் என பல காரணங்களைக் கூற முடியும். ஆனால் முக்கியமான ஒரு புள்ளி அமைப்பு சர்ந்ததாக இருக்கிறது. குறுங்குழுவாத போக்கு பல தளங்களில் கண் மறைக்கும் விதமாகவே இருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட கட்சியை முதன்நிலை படுத்திய நடவடிக்கையாக குறுகி நிற்கிறது கட்சி அரசியல். இது மாறும் வரையும் இந்த அரசியல் தன்னை சுற்றி நடப்பதை உள்வாங்கி திட்டமிடும் போக்குக்குக் வந்து சேரப் போவதில்லை.