தமிழ்மக்களுக்கான அர சியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமாகவிருந்தால், தமிழினத்தினை சுத்திகரிப்புச் செய்த அரசுடன் பேசுவது பயனற்றது. மீண்டும் ஒரு இனச்சுத்திகரிப்பினையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆகவே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும். இவ்விடயம் பற்றி முன்னாள் ஐ.நா. உதவிச் செயலர் ஹோம்ஸ் தெரிவிக்கையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புக்கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சமூகமும், ஐ.நாவும் இன்னும் அதிகமாக பணியாற்ற வேண்டும் என்று எழும் கருத்துக்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இதைவிட அதிகமாக என்ன செய்ய முடியும் என்று கூறுவது தற்போதைக்கு கடினமாக இருக்கிறது. ஐ.நா பொதுச்செயலர் நியமித்த வல்லுநர்கள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. அது வெளிப்படையாக பொதுமக்கள் பாவனையில் இருக்கிறது.
இப்போது மேலதிகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு இலங்கை அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பது தான் இப்போதுள்ள பிரச்சினை. இந்த விசாரணைகள் மூலம் அனைத்துலக நாடுகள் தன்னைக் குறிவைப்பதாக இலங்கை அரசு நம்புகிறது. அவர்களை இதில் யாரும் குறிவைக்கவில்லை. ஆனால் அவர்களின் கடந்தகால நடவடிக்கைகள் தான் இந்த விசாரணைகள் கவனம் செலுத்தும் கருப்பொருள். எனவே அவர்கள் இந்த முயற்சிகளுக்கு, அதாவது ஒரு புதிய விசாரணைக்கு, முழுதாக ஒத்துழைக்கமாட்டார்கள்.
எனவே நாம் இந்த அரசு மாறும் வரை பொறுத்திருக்க வேண்டும். அதன் பின்னர் வரும் புதிய அரசில் இருப்பவர்கள் இதற்கு ஒத்துழைத்தால் தான் நாம் உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம். ஆட்சியில் இருக்கும் அரசு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக, அனைத்துலக சமூகம் அமைதியாக இருந்து விடவில்லை. ஐ.நா வல்லுநர் குழு இது தொடர்பாக தனது அறிக்கையை சமர்பித்தது. பல தன்னார்வக் குழுக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஒரு அறிக்கை தந்திருக்கிறது. சனல் 4 தொலைகாட்சியின் விவரணப்படம் கூட இதன் ஒரு அங்கம் தான். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை இதை ஒருமுறை ஆராய்ந்திருக்கிறது. எனவே அனைத்துலக கவனம் இதில் இருக்கிறது. இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் இந்தப் பிரச்சினைகள் நடந்த இடத்தில் இருக்கும் அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. இது கவலையளிக்கும் ஒரு விடயம். ஆனால் அதுதான் தற்போதைய யதார்த்தம்.ஒரு இறையாண்மை பெற்ற அரசை அந்த அரசின் விருப்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா வற்புறுத்த முடியாது.
இலங்கை விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு சபையில் கருத்தொற்றுமை இல்லை. ரஷ்யாவும், சீனாவும் இந்த விடயத்தில் பாதுகாப்புச்சபையை கூட்டுவதற்கு தயாராக இல்லை.
ஐ.நாவின் உறுப்பு நாடுகளிடையே கருத்தொற்றுமை இல்லாத நிலையில், ஐ.நாவால் நடவடிக்கை எடுக்க முடியாது.பொதுமக்களின் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில், இலங்கை அரசை, அந்த யுத்தப்பகுதியில் கனரக போர் ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஐ.நா வற்புறுத்திக் கொண்டிருந்தது.
இலங்கை அரசோ அந்தப் பகுதியில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றே கூறிக் கொண்டிருந்தது. ஆனால் அது உண்மையல்ல. அதேசமயம், விடுதலைப்புலிகளிடமும், சாதாரண பொதுமக்களை விடுவியுங்கள் என்று ஐ.நா கூறிக்கொண்டிருந்தது, ஏனென்றால் அதுவும் ஒரு அடிப்படையான பிரச்சினை. சாதாரண மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு எதிராக அங்கே பிடித்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
ஐ.நா தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டிருந்தது. ஆனால் ஐ.நாவிடம் ஒரு அதிசயத் தீர்வு இருந்தது என்ற கருத்து உண்மையான கருத்தல்ல. ஐ.நா தமிழ் மக்களுக்கு பெரிய அள வில் உதவியிருக்கிறது. ஐ.நா தான் இலங்கை அரசிடம் பேசி, போர் நடந்த பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களுக்கு நிவாரண முகாம்களை அமைக்குமாறு வலியுறுத்தியது.
அங்கே அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது போன்ற பிரச்சினைகள் இருக்கத் தான் செய்தன. அந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு சில மாதங்களில் தீர்வு காணப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளுக்கு இப்போது திரும்பி விட்டார்கள் என்று மேலும் தெரிவித்தார் ஜோன் ஹோம்ஸ்.
இதேவேளை நாட்டிற்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை வெற்றிகொள்வதற்கு உள்நாட்டில் ஆட்சிமாற்றம் வேண்டும். நாட்டிற்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின் உள்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். இதற்கான விஸ்தரிக்கப்பட்ட செயற்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம் என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு மற்றும் பொருளா தார வீழ்ச்சி உட்பட இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு போதும் தீர்வை வழங்க முடியாது. எனவே அனைத்து தரப்புகளும் ஒன்றிணைவதே தற்போது சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் நாடு பெரும் ஆபத்துக்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக நாட்டிற்கு எதிரான சர்வதேச நாடுக ளின் முன்னெடுப்புகளானது மிகவும் ஆபத்தான சூழலையே ஏற்படுத்தியுள்ளது.ஆனால் அரசாங்கமோ தமது ஏமாற்று வேலைகளையும், போலி நடிப்புகளையும் உள்நாட்டில் மேடையேற்றி வருகின்றது. அரசாங்கத்திற்கு நாட்டின் மீதோ, மக்களின் மீதோ அக்கறையில்லாத நிலையே உள்ளது. எனவே நாட்டை பாதுகாக்க வேண்டியது தற்போதைய அத்தியாவசிய கடமையாகிவிட்டது. தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள் என பலரும் ஒன்றிணைந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த செயற்படவேண்டும். ஜே.வி.பி. தனது துணை அமைப்புகளுடன் இணைந்து அரசிற்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது.
பொது மக்களை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து மீட்க தற்போதைய அரசாங்கத்திடம் செயற்றிட்டங்கள் எதுவும் கிடையாது. மாறாக மேலும் பொதுமக்களை துன்புறுத்தியும், சர்வதேசத்திற்கு நாட்டை காட்டிக்கொடுத்துமே ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே இவ் அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபட ஒன்றிணைந்த போராட்டங்களே அவசியமாகும் என அவர் தெரிவித்தார்.
இலங்கையில் ஆட்சிமாற்றம் என்பதே சர்வதேசத்தின் விருப்பம். தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை இன்று அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நலன்களுக்கான பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் எம்மைப் பொறுத்தவரையில், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக் கான தீர்வாக, இம்மக்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட்டு சுய நிர்ணயத்துடன் நிம்மதியாக அவர்கள் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்ப தேயாகும் என தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை யானது சர்வதேச விவகாரம் என்று வரும் போது அது உடனடியாக தீர்க்கப்படக் கூடிய பிரச்சினையாக அமையாது. இன்று தமிழ் மக்களின் பிரச்சினை தமிழ் மக்க ளுக்கான பிரச்சினையாக பார்க்கப்படாது இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நலன்கள் சார்ந்த தாகவே பார்க்கப்படுகின்றது.
இப் பிரச்சினையில் இலங்கையின் நலன்களும் அதிகளவில் முக்கியத்துவப் படுத்தப்படுகின்றது. இவ்வாறு எமது தமிழ் மக்களின் இனப்பிரச்சினையானது இன்று பல்வேறு தரப்பினருடைய நலன்கள் சார்ந் ததாக, பல்வேறுபட்ட பிரச்சினைகளை உள்ளடக்கியதாக மாற்றமடைந்துள்ளது. ஆகவே இப்பிரச்சினைக்கு வௌ;வேறு தரப்புக்களினால் வௌ;வெறு வகையான பொருள்கோடல்கள் கூறப்படுகின்றன.
அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில், இப்பிரச்சினைக்கு வௌ;வேறு வகையான விளக்கங்களும், வௌ;வேறு வகையான பொருள்கோடல்களும் கொடுக்கப்பட்டு இப்பிரச்சினை வௌ;வேறு வகையாகக் கையாளப்படுக்கூடும். ஆனால் எம்மைப் பொறுத்தவரையில், இந்த நாட்டில் வாழு கின்ற தமிழ் மக்கள் வடகிழக்கு இணைந்த பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையுடன் நிம்மதியாக வாழக்கூடிய நிலையை உரு வாக்கவேண்டும் என்பதாகவுள்ளது. இதனை ஏற்படுத்துவதற்காக நாம் பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரு வதுடன் இதனை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது தொடர்பாகவும் சிந்தித்து வரு கின்றோம்.
இதற்காக எங்களுடைய மக் களின் நலன்களுக்கு ஏற்றவகையில் சர் வதேச சமூகத்தை எவ்வாறு கையாள் வது என்பது தொடர்பாகவும், அவ்வாறு சர்வதேச சமூகத்தின் உதவிகளை பெற் றுக்கொள்கின்ற போது அவர்கள் தெரி விக்கின்ற அல்லது அவர்களால் முன் வைக்கப்படுகின்ற சகல விடயங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் விடுவது மற்றும் சர் வதேச சமூகத்தை எதிர்க்காமல் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கமுற்ப டுவது போன்ற விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி வருகின்றோம்.
இதுவே இன்றைய சூழலில் முக்கியமான விடயமாகக் காணப்படு கின்றது. இதனை ஒருவராலோ இருவ ராலோ சுயமாகச் சிந்தித்து செய்து விட முடியாது. இதனை செய்து முடிப் பதற்கு கூட்டுப்பொறுப்பும், கூட்டுச் சிந்த னையும் எமக்கிடையில் இருக்கவேண்டும். இதற் காக பல்வேறுபட்ட நிபுணர்களிட மிருந்து செய்திகளையும், விடயங்க ளையும், ஆலோசனைகளையும் பெற்றுச் செயற்படவேண்டும். இவ்வாறான பிரச்சி னைகளுக்கு தனிநபர்கள் அல்லது ஒரு சிலர் எடுத்திருக்கின்ற முடிவுகள் சில சம யங்களில் தோற்றுப்போயுள்ளன. ஆனால் சில சமயங்களில் வெற்றிகளும் கிடைத்தி ருக்கின்றன.
இந்த வகையில் கூட்டுப்பொறு ப்பு, கூட்டுக் கருத்துப் பரிமாற்றம் என்பதே முக்கியமான விடயமாக அமைகின்றது. இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த முயற்சியில் எமக்கு வெற்றிகளும் தோல்விகளும் கிடைக் கலாம். ஆனால் வெற்றி கிடைக்கின்ற போது ஒருவர் தலையிலும், தோல்விய டைகின்ற போது தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் மீதும் போடுவது அழகான செய லாக அமையாது. தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பானது கூட்டாக இயங்குவதற்கான சூழல்களையும், நிலைமைகளையும் உரு வாக்கவேண்டும் என்பதே இங்கு முக்கிய மான விடயமாகக் காணப்படுகின்றது.
எதிர்வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாக பெரும்பாலhனவர்களால் கணிக்கப்படுகின்றது. இது பாராளுமன்றத் தேர்தலாகவோ, ஜனாதிபதித் தேர்த லாகவோ இருக்கலாம். இவ்விடயங்கள் தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சிக் குள்ளும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் பேசப்படுகின்றது. தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இவ் விடயம் தொடர்பாக ஆங்காங்கே பேசப் பட்டு வருகின்றது. இவ்வாறு பேசுகின் றவர்கள் அமெரிக்கா, இந்தியா போன்ற சர்வதேச நாடுகள் இங்கு ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படவேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.
இந்த வகையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படலாம் அல்லது ஏற்படா மலும் போகலாம். ஆனால் தனிநபர் ஒருவர் பொது ஜனாதிபதியாக வந்தால் அல்லது சரியான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டால் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். இங்கு ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படவேண்டும் என்பது சர்வதேச சமூகத்திற்கு தேவையாக இருக்கலாம். ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
எனவே இங்கிருக்கின்ற தமிழ் இளைஞர், யுவதிகள் அனைவரும் அரசி யல் மயப்படுத்தப்பட்டு எமது அரசியல் அபி லாஷையான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தினை தொடர்ந்தும் அரசி யல் ரீதியாக முன்னெடுக்க வேண்டும் அதற்கு கட்சிகளும் ஒன்றிணைந்து ஒத்துழைக்கவேண்டும். இதற்காக மலையகத்திலும், இந்தியாவிலும், சர்வதேச நாடுகளிலும் வாழ்கின்ற சகல தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து செயற்படுவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அதேசமயம் இலங்கையின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. மேற்குறிப்பிடப்பட்டவர்களின் கருத் துக்களை பார்க்கின்றபொழுது, ஆட்சிமாற்றத்தினைக் கொண்டுவருவது தமிழ்மக்களினுடைய விடயத்தில் சிறந்ததொன்றாகவே அமையும் எனலாம்.
– நெற்றிப்பொறியன் –