தமிழினத்தை மீண்டும் அடக்கியாள நினைப்பது அரசுக்கு ஆபத்தானது – இரா.சம்பந்தன்

407

தமிழீழ விடுதலைப்புலிகளினால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உரு வாக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் அரச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருப்பதானது தமிழ் மக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கும் அதேநேரம், தான் தமிழரசுக்கட்சி எனவும் தந்தை செல்வாவினுடைய வழிநடத்தலில் செயற்படுத்தப்பட்டேன் எனவும் அந்த செவ்வியில் தெரிவத்துள்ள இரா.சம்பந்தன் அவர்கள், அரசு தமிழ் மக்களை மீண்டும் அடக்கியாள நினைத்தால் அது பாரதூரமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்றும் தெரிவித்திருக்கின்றார். இது வேடிக்கை விநோதமாக இருந்தாலும் அவர் குறிப்பிடுகின்ற விடயங்களைப் பார்க்கின்றபொழுது ஒரு ஜனநாயக ரீதி யில் தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அவரது அரசியல் காய்நகர்த்தல்கள் செயற்படுத்தப்படுகின்றது. குறிப்பாக தேர்தல்கள் என வரும்பொழுது மாத்திரமே சம்பந்தனும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏனையவர்களும் இது எங்கள் தேசம், விடுதலைக்காகப் போராடிய மாவீர்கள் உறங்கும் மண், எமது ஒற்றுமையை நாம் சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்தவேண்டும். விடுதலைப்புலிகளது போராட்டத்திற்கு நாம் செய்யும் கடமையாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். தேசியத்தலைவரினால் உருவாக்கப் பட்டதே இந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றெல்லாம் பேசுவது வழக்கம். இதனையும் மக்கள் கேட்டு வாக்களிப்பதும் வழக்கம். ஆனால் இம்முறை ஒரு தெளிவான முடிவுடனே மக்கள் இருக்கின்றார்கள்.

இதுவரை காலமும் இந்த நாட்டிற்காகப் போராடி தம்முயிர்களை எத்தனையோ மாவீர்கள் அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த பல வருட காலங்களாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசி யல் கைதிகளின் விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள் ஆழமாக அழுத்தம் வழங்காதிருப்பது கவலையளிக்கிறது. நல்லாட்சி எனக்கூறிக்கொண்டு மைத்திரிபால அவர்களுடன் கைகோர்த்திருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், அதன் உயர்மட்டத் தலைவர்களும் நவம்பர் 07ம் திகதிக்குள் தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் விசார ணைகள் துரிதமாக்கப்படும் என்றும் சம்பந்தன் அவர்கள் வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றார். இதற்கிடையில் மனோ கணேசன் அவர்கள் தமிழ் அரசி யற் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

கடந்த பல வருட காலங்களுக்கு மேல் சிறைச்சாலைகளில் இந்த அரசியல்கைதிகள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்றே குறிப்பிடவேண்டும். மீண்டும் அவர்கள் சமூக மயப்படுத்தப்பட்டு வருகின்றபொழுது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனால் இவர்களது வழக்கு நிறைவடைந்து வெளியேறும்பொழுது வௌ;வேறு சிக்கல்கள் இல்லாது அவர்கள் சமூகத்தில் வாழக்கூடிய நிலை மைகள் உருவாக்கப்படும். பிணையில் விடுதலை எனக்கூறும்பொழுது விசாரணைக்காக மீண்டும் புலனாய்வுத் துறையினால் அழைக்கப்படுவதும், கண்கானிக்கப்படுவதுமான நிலை மைகள் தோன்றும். ஆகவே இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதென்பது சிறந்ததொன்றாகும். அல்லது தண்டனையைப்பெற்று சிறை வாசம் அனுபவித்துவிட்டு விடுதலை யினைப் பெறுவதும் சிறந்தது. பிணையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு நம்பிக்கைக்குரியவர்களே. பிணையில் விடுதலையாகும்போது அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குவது யார்? போதைப்பொருள் கடத்தல்காரர்களை கட்டுப்படுத்தும் ஒரு திட்டத்தை அரசாங்கம் கடந்த காலங்களில் கையாண்டது. நேரடி யாகவே சிறைச்சாலைகளுக்கு சென்று இராணுவத்தினரை அனுப்பி அங்கு தாக்குதல்களை நடாத்தியது. இந்நிலையில் தமிழ் அரசியல்கைதிகள் பிணையில் விடுத லையாகி வழக்குகளுக்கு சென்று வரும்போது பெருஞ்சிரமங்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆகவே உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்வதென்பது நல்லாட்சிக்கான சிறப்பாகும்.
விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்து 06வருடங்களைக் கடந்துள்ள நிலையில் இன்னமும் இந்த தமிழ் அரசியல்கைதிகளை சிறையில் வைத்திருப்பது சிறந்ததொன்றல்ல. பயங்கரவாத தடைச்சட்டமானது தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருவதா னது மீண்டும் ஒரு போர்ச்சூழலை உருவாக்கும் சந்தர்ப்பமாகவே கருதப்படுகிறது. போராட்டப்பாதையைக் கடந்துவந்துள்ள தமிழினம் இன்று ஒரு சமத்துவமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திடம் பேச்சுக்களை நடாத்தி வருகின்றது. தமி ழினம் படுகொலை செய்யப்பட்ட வரலாறு மாற்றியமைக்கப்பட வேண்டுமாக விருந்தால் தமிழ் மக்கள் கேட்கின்ற நடைமுறை சாத்தியமற்ற தீர்வுகளை அவர்களுக்குக் கையளிக்கவேண்டும். தமிழினம் ஆயுதமேந்திப்போராட சிங்கள துவேச அரசியல்வாதிகளே காரணமாக அமைந்தார்கள். மீண்டும் அவர்கள் நாட்டைப் பிளவுபடுத்த முனைகின்றார்கள். நாம் இன்று தேசிய அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாக இருக்கின்றோம். இலங்கையின் ஒட்டுமொத்த நன்மை கருதியே எமது செயற்பாடுகள் அமையவேண்டும். மீண்டும் தமி ழினம் ஏமாற்றப்படுமாகவிருந்தால் எமக்குத் தரப்பட்ட பதவிகளைத் துறந்து நாம் அறவழிப்போராட்டங்களை நடத்தவேண்டிய சூழ்நிலை உருவாக்கப்படும். இந்த அறவழிப் போராட்டங்களே அன்று ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது. இதனை அரசு நன்கு புரிந்துகொள்ளவேண்டும். விடுதலைப்புலிகளின் தலை வர் பிரபாகரன் அவர்கள் மூன்று தசாப்த காலங்கள் இலங்கை அரசுடன் போராடி வந்தார். பல்வேறு கோணங்களில் விடுதலைப்புலிகளுக்கும், அரசுக்கு மிடையிலான பேச்சுக்கள் இடம்பெற்று அவையணைத்தும் தோல்வியடைந்த நிலையில் இன்று மக்களின் சக்தியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு திகழ் கின்றது. இந்த மக்கள் சக்தியினைக் கொண்டே நாம் எமது அரசியல் செயற்பாடுகளை காய்நகர்த்தி வருகின்றோம். எந்தவொரு சர்வதேச நாடும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதுதான் என வெளிப்படையாகக் கூறிக்கொண்டாலும் ஒரு தீர்மானம் என வரும்போது இழுத்தடிக்கும் செயற்பாட்டையே அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதனை நாம் காலம்தாழ்த்தி எமக்கு இதில் தீர்வு கிடைக்கும் என்று அல்லது ஐ.நா சபை எமக்கான தீர்வுகளை வழங்கும் என நாம் கனவு காண்பது முட்டாள்தனம். இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதற்கான ஆதாரங்களை நாம் நிறுத்தினாலும் எமக்கான தீர்வுகள் அபிவிருத்திகள் மாத்திரமே.
யுத்தப்பிரதேசங்களில் மீண்டும் மக்கள் குடியேற்றங்கள், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் போன்றவை மாத்திரமே தீர்வாக மிஞ்சும். நாட்டில் அனைவரும் சமாதானமா கவும், இலங்கையின் அனைத்துப் பாகங்களுக்கும் சென்றுவரக்கூடிய நிலை மைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்தோடு சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு இலங்கையரசு மண்தூவும் ஒரு பேச்சுக்களாகவே இவை அமையப்பெறும் என்பது எமக்கு நன்கு தெரியும். மூன்று தசாப்த கால அரசியல் நிலைமைகளை புரிந்துகொண்டவனாகவே நான் செயற்படுகின்றேன். இதனைப் பலர் தவ றான வழியில் புரிந்துகொண்டுள்ளார்கள். விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் உள்ளதை உள்ளபடிக் கூறுவதற்கான சுதந்திரம் எமக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் கூறியதை நாம் செய்துகொண்டிருந்தோம். அப்பொழுது தமிழ் மக்களுக்கான ஆயுத பலமும் இருந்தது. இன்று அப்பலம் எம்மிடம் இல்லை. ஆகவே அஹிம்சைப் பலத்தினை மாத்திரமே பிரயோகித்து அரசியலில் ஒரு இராஜதந்திர நகர்வுகளை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அனைத்து உண்மைகளையும், இரகசியங்களையும் ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கான தேவை எமக்கில்லை. அவ்வாறு இரகசியங்களை வெளியிடுவதன் ஊடாக அரசு அதற்கு மாற்றீடான வழிமுறைகளைக் கையாளும்.

ஒருவேளை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால்தான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது எனவும் அதனது நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே நாம் செயற்படுகின்றோம் என நான் வெளிப்படையாகக் கூறும்போது எமக்குக்கிடைத்த எதிர்க்கட்சிப் பதவிகூட இல்லாமல்போகும். இவர்கள் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என எம்மை ஓரங்கட்டப்படும் நிலைமைகள் தோன்றும். விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ற பதிலை நான் கூறுவேன் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இதனது பின்விளைவுகள் பற்றியும் இவர்கள் தெரிந்திருக்கவேண்டும். அரச ஊடகம் என்ற நிலையிலேயே நானும் இவ்வாறான பதிலைக் கூறினேன். இதனை ஒரு புரட்சிகர தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு உட்பட்ட ஒரு ஊடகம் கேட்டிருந்தால் அதற்கும் எவ்வாறு பதில்கூற வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்.

சமாதான காலத்தில் ஏற்பட்டிருந்த அரசியலின் மாற்றம் தமிழினத்திற்கு சாதகமான தன்மையினை தோற்றுவிக்கும் என அனைவரும் எண்ணியிருந்தோம். இதன்காரணமாகவே விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு, இராணுவப் புலனாய்வு மற்றும் சர்வதேச புலனாய்வினராலும் சிதறடிக் கப்பட்டது. இவ்வாறிருக்க இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற் றும் அங்கத்துவக் கட்சிகளின் ஒற்றுமையினை சிதைக்க பலர் முயற்சி எடுத்து வருகின்றார்கள். எவ்வாறான முயற்சிகள் எடுத்தாலும் உண்மை எதுவென்று தமிழ் மக்களுக்குத் தெரி யும். வீராவேசம் பேசி தமிழ் மக்களை உணர்ச்சி வசப்படுத்தி போராட்ட பாதைகளுக்கு அனுப்பிய தலைவர்களின் முடிவுகள் தமிழினத்திற்கு ஒரு தீர்வினைப் பெற்றுக்கொடுத்ததா? என்றால் இல்லை. அஹிம்சை வழி யில் போராடிய போராட்டங்கள் வெற்றிபெற்றிருக்கினற்து என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. தமிழ் மக்களது போராட்டம் சர்வதேச மட்டத்தை எட்டிப்பிடித்திருக்கின்றது எனக்கூறுவது மிகையாகாது. அதில் பிரபாகரனின் பங்கும் அளப்பரியது. அன்றைய அரசியல் சூழ்நிலை வேறு. இன்று வேறு. அந்த அரசியல் சூழ்நிலைக்கேற்ற பாதையிலேயே நாமும் பயணிக்கவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். அதற் காக நாம் அரசிற்கு அடிபணிந்து செல்கின்றோம் என அர்த்தமல்ல.

இன்று ஆனந்த சங்கரியின் தலைமையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு புதிய கூட்டமைப்பை உருவாக்குவோம் என பலர் கூறுவதைக் கேட்கின்றோம். அணுகுண்டின் மூலம் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை யாராலும் அசைக்கமுடியாது என்று நான் கூறுகின்றேன். அதுமட்டுமல்லாது ஜேவிபியினருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்கள் அரசியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அவ் வாறு அவர்களுக்குச் செய்ய முடியுமாகவிருந்தால், ஏன் தமிழ் மக்களுக்காகப் போராடிய தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யமுடியாது என்பதையும் நான் இவ்விடத்தில் கேட்கின்றேன். மீண்டும் இந்த அரசாங்கம் தமிழினத்தையும், சர்வதேசத்தையும் ஏமாற்ற முனைவார்களாகவிருந்தால் ஒரு சர்வதேச நாட்டின் உதவி யுடன் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முதற்கட்டம் நகர்த்தப்பட்டிருகின்றது. இதற்கும் இலங்கையரசு முக்காடு போடுமாகவிருந்தால் நாம் சர்வதேச நாடுகளின் உதவிகளைக் கோர வேண்டிய சூழ்நிலை உருவாகும். எம்மிடமும் தமி ழினம் தொடர்பில் முழுமையான திட்டம் இருக்கின்றது. அது வன்முறையற்ற ஒரு அரசியல் தீர்வினையே நோக்கி பயணிக்கும் திட்டமாகும். இதற்கும் அரசு தலைசாய்க்காது போனால் மிகவும் பார தூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதேயாகும்.

நெற்றிப்பொறியன்

SHARE