தமிழினியை கணவன் சதீஸ் தீ வைத்து எரித்தானா? அதிர்ச்சித் தகவல்கள்!

8

 

தமிழினியை கணவன் சதீஸ் தீ வைத்து எரித்தானா?
அதிர்ச்சித் தகவல்கள்!
கடந்த 9ம் திகதி அதிகாலை 3 மணியளவில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு பெண் ஒருவரும் இரு ஆண்களும் ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கினர். குறித்த பெண் தனது உடலின் முன் பகுதி எரிந்த நிலையில் ஆடைகள் மாற்றப்பட்டு வேறு ஆடை அணிந்து கொண்டும் அவருடன் வந்த இன்னொரு ஆணும் சிறு தீக்காயங்களுடனும் கோப்பாய் பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீக் காயங்களுக்கு உள்ளான பெண் சாவகச்சேரி பிரதேசசெயலகத்தில் உதவிப் பிரதேசசெயலராகக் கடமையாற்றும் சதீஸ் தமிழனி ஆவார். அவரது கணவன் கோப்பாய் பிரதேசசெயலகத்தில் விதானையாகக் கடமையாற்றி வரும் புத்துார் வாதரவத்தையைச் சொந்த இடமாகக் கொண்ட அசோகதாசன் சதீஸ் என்பவராவார்.
சதீஸ் மற்றும் தமிழினி இருவரும் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் ஒரே ஆண்டில் கல்வி கற்று வந்தவர்கள் எனவும் அங்கு கற்கும் போதே காதலர்களாக இருந்து திருமணம் முடித்தவர்கள் எனவும் தெரியவருகின்றது. தமிழினி வவுனியாவைச் சேர்ந்தவர். அவர் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் தெரிவு செய்யபட்டிருந்தாலும் அரசநிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நிர்வாக அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டவர்.
இருவரும் காதலித்து 2018 ம் ஆண்டு திருமணம் முடித்து 2019ம் ஆண்டு ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோராகவும் பதவியேற்றனர். சதீஸ் காதலிக்கும் போதே பார்ட்டி என்ற போர்வையில் மதுப்பிரியனாக இருந்துள்ளான். இது தமிழினிக்கு தெரிந்திருந்தாலும் பார்ட்டிகளில் மட்டும்தான் குடிக்கின்றார் என எண்ணி அதனை பெரிதுபடுத்தவில்லை போல் தெரிகின்றது. ஆனால் திருமணம் முடித்த பின் சதீஸ் முழு நேர குடிகாரனாக திரிந்துள்ளான். அத்துடன் நீர்வேலிப் பகுதியில் வசித்து வந்த போது பெண் ஒருவருடன் அந்தரங்கத் தொடர்பைப் பேணி வந்ததாகவும் அவனுடன் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. இவற்றால் தமிழினி சதீசை கடுமையாக எச்சரித்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். சதீசின் நடவடிக்கைகள் தொடர்பில் தனக்கு நெருக்கமான சில பெண் உத்தியோகத்தர்களுடன் தமிழினி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவருகின்றது. தமிழினி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையானவள் இல்லை என அவளுடன் நெருங்கிப் பழகியவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில் தமிழினி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இருந்தும் சதீஸ் தனது குடியைக் கைவிடும் நிலையில் இல்லாமல் இருந்ததாலும் பெண்ணுடன் அந்தரங்கத் தொடர்பை தொடர்ச்சியாகப் பேணி வந்ததை நிறுத்தாமல் இருந்ததாலும் தமிழினி தான் கடமையாற்றும் சாவகச்சேரி பிரதேசசெயலகத்திலிருந்து தனது சொந்த இடமான வவுனியாவுக்கு இடமாற்றம் பெற்று செல்ல ஆயத்தமானதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. அத்துடன் சதீசையும் விவாகரத்து செய்யவும் சில நடவடிக்கைகளை தமிழினி மேற்கொண்டு வந்ததாகவும் தமிழினியுடன் பழகியவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில் கடந்த 8ம் திகதி இரவு சதீஸ் வீட்டுக்கு வராது பார்ட்டி ஒன்றில் நின்றதாகவும் அதன் பின் குடி போதையில் வீட்டுக்கு வந்ததாகவும் அறிய முடிகின்றது. இதன் பின்னரே தமிழினி தீயில் எரிந்துள்ளார். தமிழினியின் உடலின் முன் பகுதியே தீயில் முழுவதுமாக எரிந்துள்ளது. அத்துடன் தீயில் எரிந்த நிலையில் தமிழினி வேறு ஓர் ஆடை மாற்றப்பட்டே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்போது தமிழினியின் உடலில் மண்ணெண்ணெயில் நாற்றம் வந்ததாக வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
தமிழினியின் வாக்கு மூலத்தில் நுளம்புத்திரி கொழுத்தி வைத்த போது தீ பற்றியதாக கூறியுள்ளார். ஆனால் தமிழினியுடன் படுத்திருந்த 6 வயது மகள் எந்தவித தீக்காயங்களுக்கும் உள்ளாகவில்லை. நுளம்புத்திரி மூலம் தீப் பரவல் ஏற்பட்டிருந்தால் தமிழினியின் உடலின் பல பாகங்களிலும் தீ பற்றியிருக்கும். ஆனால் உடலின் முன் பகுதியே தீயால் முற்றாக எரிந்துள்ளது.
இவற்றைப் பார்க்கும் போது பார்ட்டிக்கு போய் நிறை வெறியில் வந்த கணவனின் கொடுமை தாங்காது தமிழினி மண்ணெணெய் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்திருக்கலாம். ஆனால் மண்ணெண்ணைய் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்தால் முன் பகுதி மாத்திரம் தீயில் எரியுமாறு மண்ணெண்ணை ஊற்றியிருப்பாரா? சில வேளை நிறை வெறியில் வந்த சதீஸை தமிழினி கண்டித்த போது அந்த ஆவேசத்தில் தமிழினிக்கு மண்ணெண்ணை ஊற்றி சதீஸ் எரித்தாரா?
தமிழினி தனது கணவனைக் காப்பாற்றுவதற்காகவோ அல்லது தான் தற்கொலைக்கு முயன்று தீயில் எரிந்த பின் அது தவறு என உணர்ந்து நுளம்புத் திரி கதையை கூறியிருக்லாம் என்றோ கருத வேண்டியுள்ளது. இதே வேளை கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு உருவாகும் சில ஓமோன் செயற்பாடுகள் காரணமாக அவர்களுக்கு உரிய ஆறுதல் இல்லாது அவர்களை கோபப்படுத்தும் அல்லது மன்ச்சோர்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் யாராவது செயற்பட்டாலும் அவர்கள் தற்கொலைக்கு முயலும் அபாயம் காணப்படுவதாக மருத்துவத் தரப்புக்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழினியின் வாக்குமூலத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு பொலிசார் இந்த சம்பவத்தை கைவிட்டு விடுவார்களா? அல்லது தீவிர புலனாய்வில் இறங்கி விசாரணை செய்வார்களா? தமிழினி எரிந்த போது அவளது 6 வயது பெண் பிள்ளை சம்பவத்தை நேரில் பார்த்திருக்க கூடும். ஆகவே விசாரணைகள் தொடர்ந்து மேற்கொண்டு உண்மை நிலையை பொலிசார் கண்டு பிடித்தல் வேண்டும்.
தற்போது ஆறுவயது மகளையும் அநாதையாக விட்டு விட்டு தமிழினி உயிர் பிரிந்தாள். அந்த குடிகார விதானை தனது மகளை இனி வரும்காலம் எவ்வாறு வளர்க்கப் போறார். தமிழினியின் சடலத்தை நீர்வேலிக்கு கொண்டு செல்ல தமிழினியின் உறவுகள் மறுத்துவிட்டதுடன் சதீஸ் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன….
மது, மாது போன்றவற்றால் சின்னாபின்னமாகிய குடும்பங்களில் தமிழினியின் குடும்பம் ஒன்றாகிப் போய் விட்டது.
SHARE