தமிழின அழிப்பில் ரணசிங்க பிரேமதாசா, சஜித்தை நம்புவது எப்படி?

760

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை ரணசிங்க பிரேம தாசாவின் (1989-1993) ஆட்சிக் காலத்தில் ஏராளமான தமிழினப் படு கொலைகள் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான் தற்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா அவர்களை ஜனாதிபதியாக ஆக்குவதற்கான முயற்சிகளை பல அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது எனலாம்.

எனினும் இன விடுதலைப் போராட்டத்தில் இவருடைய தந்தையை தமிழ்த் தரப்பு கொலை செய்துவிட்டது என்று சிங்களப் பேரின வாதிகளால் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது. 1993ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாசா அவர்கள் தமி ழீழ விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டார். எனவே தமிழ் மக்களை பழிவாங்கும் நடவடிக்கையாகவே சஜித் பிரேமதாசாவின் ஜனாதிபதி வருகை அமையப்போகிறது எனலாம். ரணசிங்க பிரேமதாசாவின் படு கொலைக்கான காரணம் என்ன? அவர் தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் செய்த துரோகங்கள் என்ன? என்பது பற்றியும் நாம் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆரின் தமிழின விரோதப் போக்கைத் தொடர்ந்து இவர் காலத்தில் இந்திய இராணுவம் வடகிழக்கில் இருந்து தமிழ் மக்களைக் கொன்று குவிக்க காரணமாக இருந்தார். அதேநேரம் இதில் வடகிழக்கில் ஊர்காவற் படையினை வைத்து சிங்களக் குடியேற்றங்களை தமிழர் பிரதேசங்களில் ஏற்படுத்தி னார்கள். தமிழர்களின் சொந்த நிலங்களில் இருந்து அவர்களை அகதியாக்கியதுடன் மேலும் பல தமிழர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். நூற்றுக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளின் பட்டியலைப் பார்க்கின்றபோது, சத்துருக்கொண்டான் படுகொலை, நெத்பிட்டி படுகொலை, வந்தாறு முனை படுகொலை, வந்தாறுமூலை படுகொலை, ஒட்டுசுட்டான் படு கொலை, புல்லுமலை படுகொலை, புதுக்குடியிருப்பு சந்தை விமானக் குண்டுத்தாக்குதல், உருத்திரபுரப் படு கொலை, வங்காலை படுகொலை, வட்டக்கச்சி படுகொலை என அனைத்தும் இவரது காலத்தில் தான் நடந்தது. கிண்ணியடி படுகொலை, வற்றாப்பளை அம்மன் கோவில் எறி கணை வீச்சு, தௌ;ளிப்பளை கோவில் மீதான தாக்குதல் என படுகொலைகள் தொடர்ந்தது.

கிழக்குப் பல்கலைக்கழக படு கொலைகள், சொந்த இடங்களில் இருந்து வெளியேறி பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த 226க்கு மேற்பட்ட மக்கள் 1990.05.23,24ஆம் திகதிகளில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். சம்மாந்துறை படுகொலை, 10.06.1990 அன்று சிங்கள இராணுவத்தால் சம்மாந்துறை பிரதேச மக்கள் 37பேர் படு கொலை செய்யப்பட்டனர்.

வீரமுனை படுகொலையானது 20.06.1990 மற்றும் 15.08.1990 ஆகிய திகதிகளில் சிங்கள இராணுவத்தினரால் 230க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சித்தாண்டி படுகொலை, 1990 ஜூலை மாதம் 20, 21 ஆம் திகதிகளில் சிங்கள இராணுவத்தால் 137க்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பரந்தன் சந்தைப் படுகொலை, 24.07.1990 அன்று இலங்கை இராணுவத்தால் பரந்தன் கிராமத்தில் வசித்து வந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.பொத்துவில் படுகொலையானது காவல் நிலையத்தில் வைத்து 30.07.1990 அன்று சிங்கள இராணுவத்தால் 125க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

திராய்க்கேணி படுகொலையானது 06.08.1990ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தின் சிறப்புப் படையினால் திராய்க்கேணி கிராமத்தில் வாழ்ந்த 90க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டு நெருப்பில் வீசப்பட்டார்கள். கல்முனை படுகொலை யில் 11.08.1990 அன்று கல்முனையில் சிங்கள இராணுவத்தினாலும் சிறப்பு படை யினாலும் 62க்கும்; மேற்பட்ட பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதும் பெண்கள் பாலி யல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகினர்.

துறைநீலாவணை படுகொலையானது பல்வேறு இடங்களில் இடம்பெற்றது. 12.06.1990இல் 60க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஏறாவூர் மருத்துவமனை படுகொலையானது 12.08.1990 அன்று 10 அப்பாவி மக்கள் மருத்துவமனையில் வைத்து சிங்கள இராணுவத்தால் படு கொலை செய்யப்பட்டார்கள்.

மட்டக்களப்பு கோராவெளி படுகொலையா னது பல்வேறு இடங்களில் இடம்பெற்றது. 14.08.1990 அன்று சிங்கள இராணுவத்தால் 15 தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். சேனகன் படுகொலை 26.08.1990 அன்று சிங்கள இராணுவத்தால் 04 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

நெல்லியடி சந்தை படுகொலையானது சிங்கள இராணுவத்தால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது. 29.08.1990 அன்று 16 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

சத்துருக்கொண்டான் படுகொலை யானது 09.09.1990அன்று பல்வேறு இடங்களில் சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு 200க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு ஆண்கள், பெண்கள் என வேறுபாடின்றி கைகள் கட்டப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, சில பெண்கள் பாலி யல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படு கொலை செய்யப்பட்டார்கள்.

நற்பிட்டிமுனை படுகொலையானது 10.09.1990 அன்று சிங்கள இராணுவம் மற்றும் ஊர்காவற் படையினரால் 23 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

வந்தாறுமூலை படுகொலையானது 1990.09.05 மற்றும் 23 ஆம் திகதி யில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு 124க்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர். ஒட்டுசுட்டான் படு கொலை, 27.11.1990 அன்று பல்வேறு தமிழ் மக்கள் வாழும் இடங்களில் சிங்கள வான் படையினரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைக ளில் 12 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு சந்தைப் படுகொலையா னது 30.01.1991 அன்று சிங்கள வான் படை யினரால் 28 தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இதில் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க பதுங்கு குழியில் குதித்தவேளை குழந்தை வெளிவந்து பின்னர் அவர் உடல் ஊனமுற்றார். உருத்திரபுரப் படு கொலை, 1991.02.17 அன்று சிங்கள வான்படையினரால் 09 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவம் ஒரு இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து வங்காலை படு கொலை, தள்ளாடி இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தால் 17.02.1991 அன்று 05 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து 1991.02.28 அன்று சிங்கள காடையர்களினால் வான் படைகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 09 பேர் படு கொலை செய்யப்பட்டனர். வந்தாறு மூலையில் 09.06.1991 சிங்கள இராணு வத்தால் தெருவில் பயணித்த 10 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கொக்கட்டிச்சோலை படுகொலை, 12.06.1991 அன்று இடம்பெற்றது. இதில் 220க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள வான் படை யால் படுகொலை செய்யப்பட்டார்கள். இதில் தமிழ் மக்களின் தலை வெட்டி படு கொலை செய்யப்பட்டதுடன் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே பலர் கொலை செய்யப்பட்டதுடன், இரண்டு குழந்தைகளை காலில் பிடித்து சுவரில் அடித்துக் கொலை செய்திருந்தனர்.கிண்ணியடிப் படுகொலை, 12.07.1991 அன்று சிங்கள காடையர்களினால் அப்பாவி தமிழ் மக்கள படுகொலை செய்யப்பட்டனர். கரப்போழை முத்துக்கல் படுகொலை, சிங்கள இராணுவத்தால் 97 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

வந்தாறுமூலை படுகொலை, 18.05.1992 அன்று பொங்கல் விழாவின் போது சிங்கள வான்படை தாக்குதலில் 14 தமிழ் மக்கள் படு கொலை செய்யப்பட்டனர். தௌ;ளிப்பளை கோவில் படுகொலை, 30.05.1992 அன்று சிங்கள வான் படை தாக்குதலின் போது 10 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.மகிழந்தனை படுகொலை, 09.08.1992 அன்று பல்வேறு இடங்களில் சிங்கள இராணுவத்தினால் 50க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கிளாலி கடல் நீரேரி படுகொலை, 02.01.1993 அன்று 35 பொது மக்களும், 25.07.1993 அன்று 17 பொது மக்களும் சிங்கள கடற்படையினால் கொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொடூர படுகொலைகள் யாவும் ரணசிங்க பிரேமதாசாவின் அரசினால் நிகழ்த்தப்பட்டது. இந்தப் படுகொலைகள் அனைத்திற்கும் இவரே பொறுப்பாளியாவார். இங்கு தரப்பட்டிருக்கும் தமிழினப் படுகொ லைகளின் விபரம் என்பது முழுமையா னது அல்ல. இதைவிடவும் ஏராள மான படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் கடந்த காலங்களில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

ஆகவே இதிலிருந்து நாம் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறான படுகொலைகளை மேற்கொண்ட சஜித் பிரேமதாசாவின் தந்தையார் தமிழ் மக்களுக்கு எதிராக இரட்டை வேடத்தினையே வெளிப் படுத்தியிருந்தார். இதனாலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்குப் பலியானார் என்பது சுட்டிக்காட்டப்படவேண்டிய தொன்று. ஆகவே இவரது தந்தையைப் படு கொலை செய்த விடயத்தை வைத்து தமிழினத்தை பழி வாங்கும் ஒரு தலை வராகவே சஜித் பிரேமதாசா அவர்கள் எதிர்காலங்களில் ஜனாதிபதியாக வந்தால் செயற்படுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதேபோன்றுதான் 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ராஜீவ் காந்தி அவர்கள் தமிழ் மக்களுக்கு வடகிழக்கு இணைந்த தாயகத்தை அமைத்துக் கொடுப்பதாகக் கூறி விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை ஒப்படைக்கச் செய்து அடக்கியொடுக்கும் இரகசியத் திட்டங்களை மேற்கொண்டார். இதனால் ராஜீவ் காந்தியும் படு கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தை வைத்து சோனியா அரசு தமிழர்களைப் பழிவாங்கியது.

இதேபோல் தான் சஜித் அவர்களும் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பது புலப்படுகின்றது. அரசியலில் நிரந்த நண்பனும் நிரந்தர எதிரி யும் இல்லை என்று கூறுவார்கள். ஆட்சிபீடத்தில் ஏறும் வரை அண்ணன் – தம்பி. அதன் பின்னர் நீ யாரோ, நான் யாரோ என்கிற கதைதான். பௌத்த துறவிகளின் சொல்லைக்கேட்டே இலங்கையின் மாறி மாறி ஆட்சிக்கு வந்த / வருகின்ற அரசாங்கங்கள் இயங்கி வருகின்றது. பௌத்த துறவிகள் தான் தீவிர மாக அரசியல் செய்கிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்தினால் தான் தமிழ் மக்களுக்கானத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்பதை நிபந்தனை அடிப்படையில் தான் தீர்மானிக்கவேண்டும். வேட்பாளர்கள் வழங்குகின்ற வாக்குறுதிகளின் மூலம் தான் தமிழ் மக்களுக்கான அபிலா சைகளை வென்றெடுக்க முடியும் என்கிற நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோமே தவிர, வேறு வழி யில் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாது என்பதே உண்மை.

இரணியன்

SHARE