”தமிழின அழிப்பை சர்வதேசம் நிறுத்தவேண்டும்’ ஜெனிவாவில் அனந்தி, சிவாஜி, கஜன்.

445

இலங்கையில் 67 வருடங்களாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இன வழிப்பை ஐக்கிய நாடுகள் சபையில் அனைத்துலக சுயாதீன விசாரணைகள் என நடைபெற்றுவருகிறது. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தமிழ் மக்களுக்கெதிராக இனவழிப்பு பாரிய அளவில் உருவெடுத்தது. இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்பதற்கான ஆதாரங்களைப் பார்க்கின்ற பொழுது, 1956-2001 வரையும் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்த 1948ம் ஆண்டின் பின்னர், சனத்தொகையில் சிங்கள மக்களை அதிகமாகக்கொண்டிருக்கின்றது. இனப் படுகொலை என்பது ஒருகுழுவின் தேசிய அடையாளத்தை அழித்து வன்முறையாளர்களின் அடையாளத்தை திணிப்பதாகும். அதுமட்டுமல்லாது அவர்களின் நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதும், ஒருபகுதியினரை அழிப்பதும் இனப்படுகொலையாகும். அதுமட்டுமல்லாது ஒரு இன மக்களின் உடல் நிலைமையையும், மனோநிலை மையையும் கடுமையாகப் பாதித்தலும் இனப்படுகொலையே.

இனப்படுகொலையென்பது ஒருகுழு வின் வாழ்வாதாரத்தை முழுமையாக அல்லது பகுதியாக, வலுக்கட்டாயமாக அழித்தல் ஆகும். ஒருகுழு வின் பெண்களை அவர்களின் விருப்பத்திற்கெதிராக கருத்தடைக்கு உள்ளாக்குதல். இவ்விடயம் தொடர்பாக அனந்தி சசிதரன் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஒரு குழுவை அவர்களது பாரம்பரிய நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றுதல். சிறுவர் துஷ்பிரயோம் தொடக்கம் பாலியல் வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

யுத்தத்தின்பொழுது அதாவது 2009ம் ஆண்டு சரணடைந்த சுமார் 300 தமிழ்மக்கள், மிகக்கொடூரமான முறை யில் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள். இதிலொரு விடயம் என்னவென்றால், பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இடம்மாற்றி, மாறுபட்ட கலாசாரத்தோடு வளர்த்தலும் இனப்படுகொலைக்கு ஒப்பானதாகும். சரணடைந்த இளம்வயதினரை முகாம்களுக்கு அழைத்துச்சென்று, பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளது. முக்கியமான விடயம். 2002-2009 வரையான காலப்பகுதிக்குள் சமாதான காலமும் நிலவியது. இந்த காலகட்டத்திற்குள் மனித உரிமை குழுக்கள் பல்வேறான குற்றச் சம்பவங்களை சேகரித்துக்கொண்டிருந்தனர்.

சமாதான காலகட்டத்தினுள்ளும் சுமார் 100 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இதற் கான ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 1977இல் நடைபெற்ற தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புக்கள் இழைக்கப்பட்டது. அதன் பின்னர் அக்காலகட்டத்தில் 1000பேர் வரையில் கொல்லப்பட்டனர். அதிகமானவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் உடைக்கப்பட்டு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.

இதேவேளை அநுராதபுரம் மாவட் டத்தில் 75,000 வரையான தமிழ் மக்கள் முடக்கப்பட்டனர். இதுதொடர்பாக அக்காலகட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அதற் குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. துரதிஷ்ட வசமாக 1975ம் ஆண்டுகளின் பின்னர் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே பிரச்சினைகள் ஆரம்பிக்கப்பட்டு, தமிழ் மக்களின் சொந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. தமிழ் மக்கள் தமது நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தொடர்ச்சியாக 1983ம் ஆண்டில் மீண்டும் 3000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் மக்களுடைய உடைமைகள் அழிக்கப்பட்டன. இதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

1977-1983 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள், தமிழ் மக்கள் மீதான மோசமான இனவழிப்பினை மேற்கொண்டார். தமிழ் மக்கள் டயர் எரிப்பிற்கு உள்ளாகிய காலம் இதுவாகும். இக்காலகட்டத்தில் முக்கியமாக 10 இனவழிப்புக்கள் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டமை பதிவாகியுள்ளது. 2009ம் ஆண்டு யுத்தத்தின்போது சுமார் 70,000இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், சுமார் 146,000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் காணாமற்போயுமுள்ளனர் என ஆதாரங்களின் மூலம் பதிவாகியுள்ளது. இலட்சக்கணக்கான தமிழ் மக்களது உடைமைகள் அழிக்கப்பட்டு அனாதைகளாக்கப்பட்டனர். இவ் விடயம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுமார் 23 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரப்பகுதி குண்டுவீச்சின் மூலம் தரைமட்டமாக்கப்பட்டது. இதன் காரணமாக அந்தப்பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு இடங்களில் வசித்ததன் காரணமாக, இளம் வயதி னர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவ்விடயம் தொடர்பாகவும் அரசி னால் எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இப்பகுதியில் வசித்த 6000 தமிழ் மக்களின் நிலை மோசமடைந்திருந்தது. இப்பகுதிகள் முற்றாக இராணுவத்தினரின் முகாம்களாக்கப்பட்டது.

தொடர்ச்சியாக 03 டிவிசன் இராணுவத்தினர் இப்பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கான ஆதாரங்கள் 1963-2002 வரையான ஆவணங்களில் பதிவாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஜெயவர்த்தனா கேட்டறிந்தாரே தவிர, உத்தியோகபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. உண்மைகள் மூடிமறைக்கப்பட்டன. இதுதொடர்பான சர்வதேச அமைப்புக்கள் விசார ணைகளை மேற்கொண்டபோதிலும், அவையணைத்தும் பயனற்றுப்போயின. இதைப்போன்று பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. இவ்விடயங்கள் தொடர்பாக இலங்கையரசு உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள காத்திருக்கின்றது.

அதேநேரம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள், யுத்தம் நிறைவடைந்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் இனவழிப்புக்கள் பற்றி முதலில் நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். இராணுவக்கட்டுப்பாட்டின் காரணமாக சிவில் நிர்வாகத்திற்குள் வரவேண்டிய சில வேலைவாய்ப்புக்கள், வாழ்வாதார உதவிகள் வழங்கல் தொடர்பாக இராணுவத்தின் தலையீடு காரண மாக, எங்களது தமிழ் பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதும், வன்முறைக்குள்ளாக்கப்படுவதும் தொடர் ந்தும் தெரியப்படுத்தப்படுகின்றது. விவசாய பண்ணைகளாக இராணுவத்தினரால் நிறுவப்பட்டிருக்கும் இந்தப் பண்ணைகளில், கணவனை இழந்த பெண்கள், காணாமற்போனோரின் மனைவிமார், போரினால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் முன்னாள் போரா ளிகள் என அவர்களின் வறுமை, ஆதரவற்ற தன்மை போன்றவற்றை காரணங்காட்டி, அவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக் கப்படுவதும் தொடர்ந்தும் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

எனக்கு கிடைத்த முறைப்பாடுகளின் படி வட்டக்கச்சி, சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு, தேவிபுரம் போன்ற பகுதிகளில் இருக்கும் பண்ணைகளில் மிகமோசமான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றது. அவர்கள் தமிழ் பெண்களாக இருப்பதனால் மாத்திரம் இவ்வாறான கொடுமை களுக்குள்ளாக்கப்படுகின்றார்கள். இலங் கையில் வடபகுதியில் மாத்திரம் 05 வருடகால கர்ப்பத்தடை என்ற முறை அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த முறை கிளிநொச்சியின் வேரவில், கிறாஞ்சி போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக வீட்டில் அவர்கள் கலந்து ஆலோசிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் 05 வருடகால கர்ப்பத்தடை இடம்பெற்றிருக்கின்றது.

சுகாதார அமைச்சினால் நடை முறைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த முறை தென்னிலங்கையின் சிங்கள வைத்தியர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. பெண்களுக்கு அதன் விளைவு, தார்ப்பரியங்கள் கூறப்படாது அது கட்டாயப்படுத்தப்பட்டு, இந்நிலை பெண்களால் மறுக் கப்படுகின்ற நிலையில், சிங்கள வைத்தியர்களினால் ”இனிமேல் ஏதாவது நோய்கள் வருகின்றபொழுது இங்கு வரவேண்டாம்’ எனக்கூறிய விடயங்களும் பதிவாகியுள்ளது. சிங்களவர்களுக்கு 05 பிள்ளைகளுக்கு மேல் பிறந்தால் தலா ஒரு இலட்சம் பணத்தினை வழங்கும் முறை காணப்படுகின்றது.

இதேவேளை 2ம் மற்றும் 3ம் பிள்ளைகளைப்பெறும் இராணுவ குடும்பங்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுகிறது. இறுதியுத்தத்தில் நூற்றுக்கணக்கானோர் சரணடைந்த போதும் அவர்கள் இன்றுவரை என்னவானார்கள் என்பது தெரியாத நிலை யில், இலங்கை இராணுவத்தினரிடம் அவர்கள் இருப்பதாகவும், கொல்லப்பட்டதாகவும் நாங்கள் அறிகி றோம். இலங்கை அரசிடம் இரகசிய தடுப்பு முகாம்கள் இருப்பதாக மனித உரிமை குழுக்கள் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
தொடர்ந்தும் இவர்கள் தொடர்பாக போராட்டங்களை நடாத்திவருகின்றோம். ஆட்சி மாறி னாலும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு மத்தியில் வாழ்கின்றோம். யுத்தத்தின் இறுதியில் 1000இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் தென்னிலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டதை பலர் கண்டிருக்கின்றார்கள். இதனைக் கொண்டு இந்தப்பிள்ளைகளை இலங்கை படையினர் மதமாற்றம் மேற்கொண்டு தங்கள்வசம் வைத்துள்ளதாக தெரியவருகின்றது. எனவே நாம் அவர்களை எங்கே சென்று தேடுவது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. சிறுவர்களாக இருந்தவர்கள் தற்போது 05 வருடங்களைக் கடந்துவிட்ட நிலை யில், அவர்களைத் தேடுவது கடின மானது. இவர்கள் பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும் நாங்கள் அறிகி றோம் என்றும் அனந்தி சசிதரன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கூட்டத்தொடரில் கலந்து கொண்டு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கும் சனத்தொகையில் 75சதவீதமானவர்கள் சிங்கள மக்கள். வடகிழக்கில் வாழக்கூடிய தமிழ் மக்கள் 12.5 சதவீதமானவர்கள். இப்படியாக வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையின் சனத்தொகையில், அரசி யல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. 75 சதவீதமாக இருக்கக்கூடிய இந்த சிங்கள மக்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும். சிங்கள மக்களும் கிறிஸ்தவர்களை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இரு மதங்களைச் சார்ந்தவர்களாக இருப்பினும் எந்தவித தடைகளுமின்றி அவர்கள் செயற்படவேண்டும்.

அவர்களின் நோக்கம் என்னவென்றால் தமது மதத்தினருக்கு மாத்திரமே உரிமை இருக்கிறது என நினைக்கிறார்கள். ஏனையவர்களை எந்தவித அச்சுறுத்தல்களுமின்றி சுதந்திரமாக செயற்படுவதற்கு இவர்கள் இடமளிப்பதில்லை. இதனை அவர்கள் புரிந்துகொள்ளாததுதான் பாரிய பிரச்சினை. மறுபக்கத்தில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. அதாவது இலங்கை தீவாகவும், சிங்கள, தமிழ், முஸ்லீம் இனத்தவர்களின் நாடாகவும் இருக்கின்ற நிலையில், தேசியத்தினை பாதுகாக்கவேண்டிய தேவை இருக்கின்றது. வடகிழக்கில் வாழக்கூடிய தமிழ் மக்கள் அதிகமாக இலங்கையில் இருக்கும் சிங்கள மக்களுடன் சகோதரத்தன்மையை ஏற்படுத்தாத நிலைமை காணப்படுகிறது. தேசியம் என்பது அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் உரிமை. மொழி, கலாசாரம், மத அனுஷ்டான முறைகள், தனிப்பட்ட பொருளா தாரம், முக்கியமாக அவர்கள் எந்தவித பிரச்சினைகளுமின்றி பரம்பரை பரம்பரையாக தனிப்பட்ட தங்களது சொந்த இடங்களில் வசிப்பதுமாகும்.

இத்தனை தகைமைகளும் சர்வதேச சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. உண்மையில் பார்க்கின்றபொழுது, தமிழ் மக்களுடைய தேசியம் என்பது, சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மீதான அச்சுறுத்தல்களாலேயே தங்கியுள்ளது. ஒழுங்கானமுறையில் தேசியம் பாதுகாக்கப்படாது திட்டமிட்ட முறையில் நாளுக்குநாள் ஒடுக்குமுறைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் இனவழிப்புக்களை மேற்கொண்டுவந்தன. இடசுவீகரிப்பு, பொருளாதாரம் சீர்குலைக்கப்படல், ஒவ்வொருவரும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.தற்போதைய அரசானது தேசியத்தினை சரியான முறை யில் நடாத்துவதற்கான நடைமுறை சாத்தியமுடைய செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
08ஆம் பக்கம் பார்க்க…
06ஆம் பக்கத் தொடர்ச்சி…

அதனையே இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலும் சுட்டிக்காட்டுகின்றது. ராஜபக்ஷ அரசு தோற்கடிக்கப்பட்டது. தற்போதைய மைத்திரிபால சிறிசேன பல சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றார். அவரை தோற்கடித்ததிலிருந்து பாரிய திட்டங்களை அமுல்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. இராணுவக்குறைப்பு தொடர்பாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஐ.நா சபையின் தீர்மானங்கள் பிற்போடப்பட்டமையானது சாதகமான தன்மையை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது.

அதாவது இதனை அரசாங்கம் புரிந்துகொண்டு செயற்படுத்துவதற்கான கால அவகாசம் என்றே கூறப்படுகின்றது. 75 சதவீதமாக இருக்கக்கூடிய சிங்கள மக்களுக்குள், வடபகுதியில் வாழக்கூடிய தமிழ் மக்களது பிரச்சினை பிற்போடப்பட்டுள்ளமையானது ஆச் சரியமானதொரு விடயமாக இருந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை. இருந்தாலும் தமிழ் மக்களுக்கு சாதகமான தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. எத்தனையோ தடவைகள் அரசுடன் நாம் மோதியிருக்கின்றோம்.

இதுவொரு உண்மையானவிடயம். இதனால் தமிழ் மக்களது தேசியம், இனவழிப்பு இல்லாமல் போய்விடுமோ என்ற கேள்வியும் இருக்கின்றது. எடுத்துவரும் ஒவ்வொரு முயற்சிகளும் ஒரு தேசியம் நோக்கி தமிழ், சிங்கள மக்கள் பிரச்சினைகள் இன்றி வாழ வேண்டும் என்றும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்க ஜெனிவா பேச்சுக்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் கலந்து தமிழ் மக்களது பிரச்சினைகளை எடுத்தியம்பாத நிலை விசனத்திற்குள்ளாகியுள்ளது. கஜன், அனந்தி, சிவாஜிலிங்கம் போன்றோர் தமிழ் மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படும் அதேநேரம், தமிழ்த்தேசி யக்கூட்டமைப்பிலுள்ளவர்கள் மௌனித் திருக்கின்றார்களோ என்கின்ற கேள்வியும் எழுகின்றது. இனப்படுகொலை மற்றும் ஜெனீவா மாநாடுகள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் ஜெனீவா சென்று குரல் கொடுப்போரின் நிலைகள் ஓங்கி எதிரொலிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

– மறவன் –

 

SHARE