தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை

1276

 

 

வேதபிரகாஷ்

இடைக்கால சரித்திர நூற்கள்

இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள்: பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதிலும், முதல் பத்து மற்றும் பத்தாம் பத்து பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. ஐப்பெரும்காப்பியங்களில் வளையாதி, குண்டலகேசி போன்ற நூற்கள் காணப்படவில்லை. ஓலைச்சுவடிகளில் பல சரித்திரப் புத்தகங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் ஐரோப்பிய கிருத்துவ மிஷினரிகள், ஆட்சியாளர்கள் முதலியோர் எடுத்துச் சென்று விட்டனர். இடைக்காலத்தில் கவிதையாக இருந்தாலும், வரையப்பட்ட வரலாற்று நூல்கள் என்ற நிலையில் கீழ்கண்டவைக் காணப்படுகின்றன:

  1. கலிங்கத்துப் பரணி
  2. விக்கிரமசோழனுலா
  3. வீரசோழியம்
  4. தண்டியலங்காரம்
  5. நந்திகலம்பகம்
  6. பின்பழகிய ஜீயர் குருபரம்பராபிரபவம்
  7. கோயிலொழுகு
  8. சோழன் பூர்வ பட்டையம்[1] (17-18ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது)
  9. சுந்தர பாண்டியம்[2]
  10. பாண்டியசரித்திரம் (436, 437)[3]
  11. கேரளவுற்பத்தி (392) –
  12. குலோத்துங்கன் சோழனுலா (273)
  13. கிரீகருணர்சரித்திரம் (399, 400,401, 402)
  14. சிவமதமடாதிபகள் சரித்திரம் (404, 404)
  15. தமிழ் நாவலர் சரித்திரம் (355)
  16. ஆழ்வார்கள் சரித்திரம் (1987)
  17. குருபரம்பராக்ரமம் (1109, 1110)
  18. குருபரம்பராப்ரபாவம் (1111, 1112, 1113, 1114, 1115, 1116,1117)

ஓலைச்சுவடி நூல்களில் கூட எழுதிய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பஞ்சாங்கம் என்ற முறையில் யுகம், வருடம், மாதம், தேதி, நாள், நட்சத்திரம் முதலியவைக் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. தமிழில் இவற்றை பதிவு செய்யும் போது, நேரம், காலம், இடம் முதலியவற்றை நன்றாக அறிந்துதான் அவற்றைப் பதிவு செய்துள்ளார்கள்.

History palm leave book in Tamil

ஓலைச்சுவடி சகாப்தம் குறிப்பிட்டுள்ளது நடப்புஆண்டு வரிசைஎண் இருக்குமிடம்
குலோத்துங்கன் கோவை சித்திரபானு வருடம்,கார்த்திகை மாதம்,

21ம் தேதி, பூச நட்சத்திரம், மங்கள வாரம், பஞ்சமி அன்று வெங்கடாசல முதலியார் எழுதியது

223, ப.180 A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Lubrary, Madras, 1912
விஷ்ணுபுராணவசனம் சாலிவாகன சகம் 1726, கலியுகாத்தம் 4904 1803 465, ப.432
கேரளவுற்பத்தி கலி 3446 குறிப்பிடப்பட்டுள்ளது 345 392, ப,352
பரத்தையர் மாலை பராபர வருடம், சித்திரை மாதம், 3ம் தேதி எழுதி  முடிக்கப்பட்டது.. 191, ப.152
பழனிக்காதல் பிலவங்க வருடம்,மாசி, சனிவாரம்

அவிட்ட நட்சத்திரம்

திருவரங்க அந்தாதி பிலவ, புரட்டாதிமுதல் தேதி 256, ப.212
திருவாவினன்குடிப் பதிற்றுப்பத்தந்தாதி கீலக, தை, 21, சுக்ர,உத்தராட

உதாரணத்திற்காக இவை கொடுக்கப் பட்டுள்ளன. இவைத்தவிர, நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், வானவியல் மூலமாக, இத்தேதிகளை கண்டறிதல் போன்றவற்றில் தமிழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுவதில்லை. உடனே அவற்றை “பழப்பஞ்சாங்கம்” என்று சொல்லி ஒதுக்கிவிடுகின்றனர். பிறகு எப்படி சரித்திரம் அறிய முடியும்?

Aihole inscription mentioning the date of Mahbharat 3102 BCE-with text

மேனாட்டவர்கள் எடுத்துச் சென்ற ஓலைச்சுவடி புத்தகங்கள்: காலெனல் மெக்கன்ஸி என்பவன் பெரும்பாலான மூல ஓலைச் சுவடி நூல்களை எடுத்துச் சென்றான். பிறகு, காகிதத்தில் எழுதப்பட்ட பிரதிகள், இரண்டிற்கும் மேலாக உள்ள ஓலைச்சுவடிகள் என்ற நிலையில், சென்னை நூலகத்திற்குக் கொடுக்கப்பட்டது. பலமுறை அவை இந்தியாவிலிருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திரும்பியதால், சேதமடைந்த நிலை, முதலில்-ஆரம்பத்தில், நடுவில் சில ஓலைச் சுவடிகள் காணாமல் போன நிலைகளுடன் தான் உள்ளன. பெஸ்கி போன்ற பாதிரிகள் தமிழ் நூல்களை அபகரித்து எரித்துள்ளனர். முகமதியர்களும், முகமது நபி, கதீஜா  பற்றிய பிள்ளைத்தமிழ், உலா போன்ற நூல்களை மறைத்துள்ளனர். இஸ்லாத்திற்கு ஒவ்வாதது என்று அழித்துள்ளனர். இவர்கள் தங்களது குற்றங்களை மறைக்க, ஆற்றுபெருக்கில் ஓலைச்சுவடி நூற்களை போட்டு விட்டார்கள், பலவற்றை அழித்து விட்டார்கள் என்றேல்லாம் கதைகட்டி விட்டனர். ஆனால், நிச்சயமாக, ஒவ்வொரு குருகுலத்திலும், மடாலயத்திலும், கோவிலிலும் ஓலைச் சுவடி நூல்கள் லட்சக்கணக்கில் இருந்திருக்கின்றன. அவற்றைத்தான் ஐரோப்பியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர், அவை, கோடிக்கணக்கில், இன்றும் அந்தந்த நாட்டு அருங்காட்சியகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் சேகரிப்புகளில் காணப்படுகின்றன.

Copper plate records - history embossed

தாமிரப் பட்டயங்களில் காணப்படும் சரித்திரம்: சரித்திர நூல்கள், புத்தகங்கள் என்றால் காகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவில் நெடுங்காலத்திற்கு அழியாமல் எப்படி அறிவை, ஞானத்தைப் பாதுகாத்து வைப்பது என்ற முறையைக் கண்டுபிடித்து அதற்கேற்றபடி, பல ஊடகங்களை உபயோகப் படுத்தி வந்துள்ளார்கள். மரப்பட்டை, இலைகள், ஓலைகள், துணி மட்டுமல்லாது கல், உலோகம் முதலியவற்றையும் சரித்திர மூல அவணங்களாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில், சரித்திர விவரங்கள் மட்டுமல்லாது, உலோக தொழிற்நுட்பம், உலோகக்கலவை தயாரிப்புமுறை முதலினவும் அறியப்படுகின்றன. அப்பொருட்களின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை ஆயும்போது, அவற்றின் சரித்திரம், தொன்மை முதலியனவும்  வெளிப்படுகிறது. அதாவது, தாமிரப்பட்டயங்கள் உள்ளன, ஆனால், அவற்றின் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பத்துறைகளை எடுத்துக் காட்டும் நூற்கள் கிடைக்கப்படவில்லை. அவற்றால் உருவான பொருட்கள் ஆதாரமாக இருக்கும் போது, அந்நூற்கள் இல்லை என்றாகாது, உபயோகப்படுத்திய மக்கள் அறிவற்றவற்றவர்கள் என்றாகாது. அவை அக்காலக்கட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும், சரித்திரத்தை மறைத்திருக்க வேண்டும்.

Nammalwar born tamarind-tree dated to 3102 BCE

கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் சொல்லும்சரித்திரம்: இங்குதான் இந்தியர்களின் தலை சிறந்த சரித்திரம் காக்கும் முறை வெளிப்படுகிறது. காகிதம், மரப்பட்டை, ஓலை முதலியவற்றால் உண்டாக்கப் படும் புத்தகங்கள், ஆவணங்கள் 500-1000 வருடங்களில் அழிந்துவிடும், மறைந்து விடும்.. உலோகத்தினால் செய்யப்படும் தாமிர பட்டயங்கள், நாணயங்கள் முதலியனவும், அதன் மதிப்பிற்காக உருக்கப்படலாம், அழிக்கப்படலாம். ஆனால், கற்களில் உள்ள சரித்திரத்தை அழிக்கமுடியாது அல்லது அழிப்பது கடினமானது. அதனால் தான், இந்தியர்கள் கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் முதலியவற்றிலும் சரித்திரத்தை பதிவு செய்து வைத்தார்கள். அங்கும், அவற்றின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை அறிந்து மற்றவர்கள் வியக்கிறார்கள்.

Alexander was defeated by the Indian King

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] C. M. Ramachandra Chettiar, Colan Purvapattaiyam, Government Oriental manuscript Library, Madras, 1950.

[2] T. Chandrasekharan, Sundarapandiyam, Government Oriental manuscript Library, Madras, 1955.

[3]  அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

[4] அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் மற்றும் பக்க எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – திராவிட சித்தாந்த சார்புள்ள நூல்கள் (3)

மார்ச் 21, 2016

 

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைதிராவிட சித்தாந்த சார்புள்ள நூல்கள் (3)

வேதபிரகாஷ்

திராவிட சித்தாந்தம், சரித்திரவரைவியலை மாற்றியது

திராவிட சித்தாந்த சார்புள்ள நூல்கள்: திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்த பிறகு, அதன் சித்தாந்திகள், சித்தாந்தத் தாக்கத்தில் உருவானவர்கள், திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு, சரித்திரத் துறைகளில் பதவிக்கு வந்தவர்கள் முதலியோர்களால் எழுதப் பட்ட புத்தகங்கள் சித்தாந்த சார்புடையதாக இருந்தன. ஆதாரங்களை விட, உணர்ச்சிகளுக்கு அதிக மதிப்பு அளிக்கப் பட்டது. மூலங்கள், கல்வெட்டு ஆதாரங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை விட “கல்தோன்றி மண் தோன்றா காலத்தேத் தோன்றிய மூத்தக் குடிதமிழ்குடி” என்ற கொள்கைதான் திராவிட வரலாற்று வரைவியலில் கடைப்பிடிக்கப்பட்டது. சித்தாந்த ரீதியில் மறைமலை அடிகள் போன்றவர்கள் கூட சைவத்தை உயர்த்திக் கட்ட வேண்டும் என்ற நிலையில், வேத-புராணங்களை விமர்சித்து எழுதினார். அதனால், இது திராவிட சித்தாந்திகளுக்கு ஏற்புடையதாக இருந்தது. கடவுள் இல்லை என்று மறுத்தவர்களும், இத்தகைய கடவுள் ஏற்கும் உரையாசிரியர்களும் சேர்ந்து கொண்டு குழப்பவாத புத்தகங்களை எழுதினர். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதை விட்டு, புதிதாக ஒன்றையும் கண்டுபிடித்து காட்டிவிடவில்லை[1].

Kumarikandam - myth making in Tamil

ஆரியதிராவிட கருதுகோளை எதிர்க்கும் குமரிக்கண்டம்கருதுகோள்: தமிழ் மொழி தொன்மையானது என்பதனை எடுத்துக் காட்டுவதற்கு பல புத்தகங்கள் எழுதப்பட்டன. ஆரிய-திராவிட இனவாத சித்தாந்தங்களில் மிக்க நம்பிக்கைக் கொண்டவர்களே, தமிழரின் தாயகம் இப்பொழுதைய தமிழகத்திற்குத் தெற்கே இருக்க வேண்டும் என்று நம்ப ஆரம்பித்தனர். அதாவது, ஆரியர்கள், சிந்துசமவெளியிலிருந்து திராவிடர்களை 2250-1950 BCE காலத்தில் விரட்டியெடித்ததை மறக்கும் வகையில் இச்சித்தாந்தம் இருக்கிறது. சிந்துசமவெளி குறியீடுகள் தமிழ் தான் என்று வாதாடும் எவரும், ஏன் சங்க இலக்கியங்கள் அங்கு தோன்றாமல், இப்பொழுதைய தமிழகத்தில் தோன்றியது என்பதை விளக்கவில்லை. மேலும், தங்களது இலக்கியத்தில், தென்னிந்திய பூகோள இடங்களைக் குறிப்பிடுகிறார்களே தவிர சிந்துசமவெளி பற்றி எதையும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் தான் “குமரிக்கண்டம்” கருதுகொள் உருவாக்கப்பட்டது. கருதுகோளை மெய்பிக்கும் வகையில் ஆதாரங்களை சேர்கவில்லை. “குமரிக் கண்டம்” அவர்களின் கருத்துச் செரிமைக்கு, எண்ண ஊற்றிற்கு, சிந்தனை மகிழ்விற்கு எல்லைகளைக் கடந்து இன்றும் ஆளுமை செய்து வருகிறது. இதைத் தவிர, பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, போன்றோரது பேச்சுகள்-எழுத்துகள் புத்தகங்களாக வெளியிடப்படுகின்றன. அவற்றில் சித்தாந்தத்துடன் அரசியலும் கலந்துள்ளது. ஆனால், சரித்திராசிரியர்கள், இந்த சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்வதில்லை. சரித்திரமற்ற இனவாத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டே அத்தகைய புத்தகங்கள் அதிகமாகி உருகின்றன. அதனால், இத்தகைய சரித்திரப் புத்தகங்கள் புழக்கத்தில் இருந்தாலும், அவை சதாசிவப் பண்டாரத்தார் தரத்திற்கு இருப்பதாகக் கருதப்படவில்லை.

Iraiyanar Agapporul - mentions about Three Sangams, chronology etc

இறையனார் அகப்பொருள்காலக்கணக்கீடு: இடைக்காலத்தில் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலுக்கு முன்னுரை எழுதிய ஆசிரியர், காலக்கணக்கீடு முறையைப் பின்பற்றி, தமிழகத்தின் தொன்மையை, மூன்று சங்கங்கள் இருந்ததை,  பாண்டியர்களின் வம்சாவளியோடு இணைத்து சில தகவல்களை தந்துள்ளார்[2]. உண்மையில், இப்பொழுதைய குமரிக்கண்டம் சித்தாந்தம், கருதுகோள், புனையப்பட இதுதான் ஆதாரமாக இருந்துள்ளது. உரையாசிரியர், நிச்சயமாக அக்காலத்தில் வழக்கிலிருந்த கலியப்த / கலிசகாப்த / கலியுக காலக்கணக்கீட்டு முறையைப் பின்பற்றி அத்தகைய ஆண்டுகளைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சரியாகக் குறிப்பிடாதலால், 1:2:3:4 என்ற விகிதங்கள் ஒத்துவராமல் இருக்கின்றன. கலியுக காலக்கணக்கீட்டின் படி, இப்பொழுதைய உலகம் தோன்றி முறையே கிரேத, த்ரேத, துவாரப மற்றும் கலி என்ற யுகங்களில் முறையே 1,08,000, 2,16,000, 3,24,000 மற்றும் 4,32,000 ஆண்டுகள் இருக்கும்.

சங்கம் புலவர்களின்எண்ணிக்கை முக்கியமானபுலவர்கள் காலம் பாண்டிய மன்னன்
ஆரம்பம் முடிவு
முதல் 4449 549 4440 காய்ச்சினவழுதி கடுங்கோன்
இரண்டு 3705 59 3700 வெண்தேர்செழியன் முடத்திருமாறன்
மூன்று 449 49 1850 / 1950 முடத்திருமாறன் உக்கிரப்பெருவழுதி

வருடங்கள் இருந்த கணக்கு பலவிதமாக பரிசோதித்துப் பார்க்கும்போது, 1:2:3:4 விகிதத்தை அடையாமல், மூன்றாக குறுக்கிவிட்டதால், கணக்கில் ஏதோ தவறு ஏற்பட்டிருக்கிறது:

வருடங்கள் பெருக்குத்தொகை 37ன்பெருக்கு 360ன்பெருக்கு தெய்வீகவருடங்கள் ஜோதிவட்டத்தின்படி
1850 1 x 2 x 5 x 5 x 37 37 x 50 360 x 5.138 1200 + 650 1480 x 1.25
3700 1 x 2 x 2  x 5 x 5  x 37 37 x 100 360 x 10.278 2400 + 1300 1480 x 2.5
4440 1 x 2 x 2  x 5 x 6 x 37 37 x 120 360 x 12.33 3600 + 840 1480 x 3

இன்று சங்ககாலம் என்பது 300 BCE – 300 CE அல்லது 500 BCE – 500 CE என்று கொள்ளப்படுகிறது. இதன்படி, பின்னோக்கிக் கணக்கிட்டால், ஒவ்வொரு சங்கம் இருந்த காலம் இவ்வாறுப் பெறப்படும்:

300B CE 300 CE 500 BCE 500 CE ஒவ்வொரு கடல்கோளிற்கும்இடையே 1000 ஆண்டுகள்மீள்வதற்கு என்று எடுத்துக்கொண்டால்
  300 BCE1850

2150 BCE

3700

5850 BCE

4440

10,290 BCE

– 300 +1850

1550 +

3700

5250 +

4440

9690 BCE

  500 +1850

2350 +

3700

6050 +

444o

10,490 BCE

 5001850

1350 BCE

3700

5050

4440

9490 BCE

 

   300 BCE1800

2150

1000

3150

3700

8850

1000

7850

4440

12,290 BCE

   500 BCE1800

2350

1000

3350

3700

7050

1000

8050

4440

12,490 BCE

இவையெல்லாம் “குமரிக் கண்டம்” சித்தாந்திகளுக்கு மகிழ்சியளிப்பதாக இருக்கும். ஆனால், அந்த ஆசிரியர் சரியான கணக்கீட்டு முறையைப் பின்பற்றவில்லை என்று தெரிகிறது. ஒருவேளை ஓலைச்சுவடியில் நகலை எழுதும் போது எண்களில் ஏதாவது ஒரு தவறாஇச் செய்திருக்கலாம். இருப்பினும், ஏதோ ஒரு காலக்கணக்கீட்டைப் பின்பற்றவேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெளிவாகிறது. மேலும், இன்றைய நிலையில், வானியல், கணிதம் முதலியவற்றையும் சரித்திரத்திற்க்கு உபயோகப் படுத்த வேண்டியுள்ளது.

the paradox of scientific history

பார்ப்பன ஆதரவுஎதிர்ப்புப் போலித்தனம்: இதிலும், திராவிட சித்தாந்திகளின், இரட்டை வேடங்கள் வெளிப்படுகின்றன. ஒருபக்கம், யாரோ ஒரு பார்ப்பனர் “நக்கீரர்” என்ற பெயரில், இந்த கதையைக் கட்டி நுழைத்து விட்டான் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. பெருந்தேவனாரும் குற்றஞ்சாட்டப்படுகிறார், அதாவது, அவர்தாம் கடவுள் வாழ்த்தை எழுதி சேர்த்து விட்டார் என்று. இல்லையென்றால், சங்க நூற்கள் எல்லாமே கடவுள்-மறுப்பு நூற்கள் ஆகிவிடும் போன்ற திரிபு விளக்கத்தைக் கொடுத்துள்ளனர். மறுபக்கமோ, அதே காலக்கணக்கீட்டை வைத்துக் கொண்டு “கல்தோன்றி மண் தோன்றா காலத்தேத் தோன்றிய மூத்தக் குடி தமிழ்குடி”, குமரிக் கண்டத்தில் தான், முதல் மனிதனே தோன்றினான் என்றும் பேசி, எழுதி வருகின்றனர். ஆனால், சரித்திராசிரியர்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், இன்றும் இது திராவிட சித்தாந்திகளால் ஆதரிக்கப் பட்டு வருகிறது, புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஆனால், சரித்திரப் புத்தகங்களாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ரோமிலா தாபர் போன்ற மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள், இராமாயணத்தை விமர்சிக்கும் போது, இவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள், அதே நேரத்தில் ஆரிய இனவாதம், குமரிக்கண்டம் முதலியவை சரித்திர ஆதாரமற்றவை என்று அவர் எடுத்துக் காட்டியதை மறைக்கவே விரும்புகின்றனர். இந்நிலையில் தான், ஐராவதம் மகாதேவன் போன்றோரின் ஆய்வுக்கட்டுரைகள் முரண்படுகின்றன.

date-of-thiruvalluvar-400-500-ce

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] கா. அப்பாதுரை சொன்னதைத் தான், இன்றும் சொல்லி வருகின்றனர். முன்பு கோடுகளினால் போட்டப் படத்தை, இன்று வண்ணங்களுடன், கணினி உதவியுடன், மாற்றி வெலியிடுகிறார்களே தவிர புதியதாக ஒன்றையும் செய்துவிடவில்லை.

[2] K. V. Ramakrishna Rao, Iraiyanar Agapporul Chronology – Myth or Reality?, a paper presented at the 8th annual session of the Taminadu History Congress held at Madras University on 13th and 14th 2001.

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – முகமதியர் மற்றும் ஐரோப்பியர் எழுதி வைத்த வரலாறுகள் (2)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைமுகமதியர் மற்றும் ஐரோப்பியர் எழுதி வைத்த வரலாறுகள் (2)

வேதபிரகாஷ்

Col Colin Mackanzie 1754-1821

தமிழ் வரலாற்றுப் பாரம்பரியம், எழுதும் முறை: தமிழகத்து வரலாறு மற்ற மாநிலங்களைப் போல, பெரும்பாலும் புராணங்களினின்றுதான் பெறப்படுகிறது. புராணங்களில் கீழ்க்கண்ட வகைகள் உள்ளன:

  • பாரம்பரிய 18 புராணங்கள்.
  • 18 உப-புராணங்கள்.
  • ஸ்தலப் புராணங்கள்.
  • வம்சாவளி / குல புராணங்கள்.
  • ஜாதி வரலாறுகள்

ஓலைச் சுவடிகளாக இருந்த, அப்புத்தகங்கள் இக்காலத்தில் தான், அச்சிடப்பட்டு இக்காலப் புத்தகங்களாக வெளியிடப் பட்டன. கீழ்திசை ஓலைச்சுவடி நூலகம், பல சரித்திர நூல்களை புத்தகங்களாக வெளியிட்டன. இப்புராணங்கள் எக்காலத்தில் எழுதப்பட்டாலும், பிரம்மா இவருக்குச் சொன்னார், இவர் அவருக்குச் சொன்னார்,…..இப்படித்தான் இவ்விவரங்கள் இன்னாரிடத்திலிருந்துப் பெறப்பட்டன என்று ஆரம்பிப்பது வழக்கம். அதனால், அந்நூல் பிரம்மா சொல்லி எழுதப்பட்டது அல்லது பிரம்மா காலத்தில் எழுதப்பட்டது என்றாகாது. வரலாற்றுவரைவியல் (Historiography) என்று இன்று சரித்திரம் எப்படி எழுதப்பட வேண்டும் என்று ஒரு படிப்பே உள்ளது. மூலங்களைப் பார்த்து எழுத வேண்டும் என்கிறது. அவ்வாறு எழுதுபவருக்கு சார்பு கருத்து (bias), தப்பெண்ணம் (prejudice), முன்பே கருத்துருவாக்கம் (preconceived notions) செய்து கொண்ட மனநிலை (mindset) முதலியவை இருக்கக் கூடாது என்கிறது. சுருக்கமாக சொல்வதானால், பொய் சொல்லக் கூடாது, நடந்ததை நடந்தபடி எழுதவேண்டும் என்று போதிக்கிறது.  இதற்கு கார்[1] (E. H. Carr) போன்றோர் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

ECI officials - turned historians

முகலாயர்கள், ஐரோப்பியர்கள் எழுதிய சரித்திரம் இந்தியர்களிடம்எடுபடவில்லை: முகலாயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் சரித்திரம் எழுதி வைத்தது இந்தியர்களுக்கு என்றாலும், இந்தியர்களுக்கு உதவுவதாக எழுதப் படவில்லை, அதனால்தான், அவை பொது மக்களிடம் எடுபடவில்லை. ஆனால், இந்திய மக்களுக்காக எழுதப்பட்ட இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் இன்றளவும் படிக்கப் பட்டு வருகின்றன. ஊடகங்கள் மாறினாலும், மக்களுக்கு காண்பிக்கப்படும் முறைகள் மாறினாலும், அவற்றை மாற்ற முடியவில்லை. மாயை / கட்டுக்கதை என்றால், அவற்றின் பாரம்பரியமே 3000-5000 வருடங்களுக்கு முன்பாக, பலநாடுகளில் வழங்கி வந்திருக்க முடியாது. பொது மக்களுக்கு, நடைமுறைக்கு உதவுவதாகும். ரோமிலா தாபர், பணிக்கர், சர்மா, என்று “பிரபலமான சரித்திராசிரியர்கள்” இன்று பேசப்படலாம், ஆனால், வால்மீகி, வியாசர், கம்பர், ஒட்டக்கூத்தர், இறையனார் என்றும் இன்றும் பேசப்படுகின்றனர். ஏனெனில், சரித்திரம் மனிதனுக்கு உதவுவதாக இருக்க வேண்டும், எல்லாவிதங்களிலும் உதவுவதாக இருக்க வேண்டும். படித்தால் நுழைவு தேர்வில் வெற்றிப் பெறலாம், வேலை கிடைக்கும் என்றோடு நின்றுவிடாமல், எல்லாவற்றிற்கும் உதவுவது உண்மையான சரித்திரம், சரித்திரப் புத்தகம் ஆகும்.

Biased, prehudiced, Marxist histories

ஆனால், இக்கால சரித்திரவரைவியல் ஆசிரியர்கள், சரித்திராசிரியர்களுக்கு குறிப்பான நோக்கம், தெளிவான பார்வை மற்றும் பாரபட்சமற்றத் தன்மை (objectivity) முதலியவை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற நிலையில் கூட வாதிடுகிறார்கள். அதாவது, மூன்று பேர், மூன்று இடங்களில் உட்கார்ந்து கொண்டு, மூன்று கோணங்களில் ஒரே நிகழ்வை பார்த்து, அவரவர்களுக்கு தாங்கள் கண்டபடி, புரிந்தபடி, தெரிந்தபடி, மூன்று சரித்திரங்கள் எழுதலாம். மூன்றும் சரித்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படும் என்கிறார்கள். உறுதியான, முழுமையான, உண்மையான சரித்திரத்தை யாராலும் எழுத முடியாது, அதனால், அத்தகைய சரித்திரன் என்பது இல்லவே இல்லை என்பது அவர்கள் வாதம். அந்நிலையில் மற்றவர்கள் எழுதுவதை சரித்திரம் இல்லை என்று அவர்கள் எவ்வாறு விமர்சிக்கின்றனர், தீர்மானிக்கின்றனர், அதிகாரத்துடன் செயல்படுத்துகின்றனர் என்பது, அரசியல் ஆதிக்கத்தின் மூலம்தான் என்று தெரிகிறது. அதேபோல, விஞ்ஞானப் பூர்வமான சரித்திரம் என்று, இவர்களே சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால், விஞ்ஞானத்திலும், சில விஷயங்கள் தத்துவங்களாக இருக்கின்றன. ஆகவே, “விஞ்ஞான பூர்வமான சரித்திரம்” எந்த அளவிற்கு உறுதியான, முழுமையான, உண்மையான சரித்திரமாக இருக்கும் என்று யாராலும் வாக்குறுதி தரமுடியாது. அதாவது அவர்களது கடைபிடுக்கும் முறையே (methodology) முரண்பாடாக உள்ளது என்றாகிறது.

History books how written, lies, myth etc

சரித்திரம் பொது மக்களுக்கு, நடைமுறைக்கு உதவுவதாகும்: இந்நிலையில் தான் மக்களால், மக்களுக்காக எழுதப் பட்ட சரித்திரங்கள் இந்தியாவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கீழே காண்பது, பக்ஷாலி என்ற இடத்தில் கண்டெடுக்கப் பட்ட சுமார் 1800-2000 ஆண்டுகளுக்கு முந்தையதான, ஒரு மாணவனின் கணக்கு நோட்டுப் புத்தகம். இதே மாதிரி தமிழகத்திலும் மாணவர்கள் நோட்டுப் புத்தகங்கள் வைத்திருப்பார்கள், கணிதம் போன்ற படிப்புகளைப் படித்திருப்பார்கள். ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதனால், அவர்களுக்கு கணாக்கேத் தெரியாது என்று சொல்லமுடியாது. ஆனால் சரித்திரத்தைப் பொறுத்த வரைக்கும், இது – கிடைத்துள்ள நோட்டுப் புத்தகம் முதன்மை ஆதாரமாகிறது (primary evidence). அது அக்காலத்தில் இருந்த இந்தியர்களின் படிப்புமுறை முதலியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளமுடிகிறது. இது மக்களின் சரித்திரம், சரித்திர ஆதாரம். இங்கு உறுதியான, முழுமையான, உண்மையான சரித்திரம் உள்ளது. இதை யாரும் மாற்றி விளக்கம் அளிக்கமுடியாது. இந்தியர்களைப் பற்றி, மற்றவர்கள் என்ன எழுதி வைத்தார்கள் என்பது சரித்திரம் ஆகாது, ஆனால், பொதுமக்கள் என்ன எழுதி வைத்தார்க்கள் என்பதுதான் சரித்திரமாகிறது.

Bhakshali mathematics mss c.2000 years old

தமிழில் மேனாட்டு சரித்திரவரைவியலைப் பின்பற்றி எழுதப்பட்டநூல்கள்:  சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய “பிற்கால சோழ சரித்திரம்” தமிழில் எழுதப் பட்ட பிரபலமான சரித்திரப் புத்தகம் ஆகும். து. அ. கோபிநாதராவ் எழுதிய “சோழவமிச சரித்திரச் சுருக்கம்” 1910ல் மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ளது[2]. பி. எஸ். சுப்ரமணிய ஐயரின் “வடநூல் வரலாறு” முதலிய பிரசித்திப் பெற்ற புத்தகங்கள் ஆகும். மு. இராகவ ஐயங்காரின் “ஆராய்ச்சித் தொகுதி” இன்றளவிற்கும் குறிப்புதவும் புத்தகமாக உபயோகப் படுத்தி வருகின்றனர். “செந்தமிழ்” இதழ்களில் வந்த சில ஆராய்ச்சிக் கட்டுரைகள், “ஆராய்ச்சித் தொகுதி” போன்று தரமாக உள்ளன.  கல்கியின் “பொன்னியன் செல்வன்”, சாண்டில்யனின் “கடல் புறா”, “யவன ராணி” முதலியவை சரித்திர நாவல்களாக இருப்பினும், சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு பலவிதத்தில் உதவும்படி அவர்கள், அடிக்குறிப்புகளில் பல ஆதாரங்களைக் கொடுத்துள்ளார்கள். பல புத்தகங்களின் குறிப்புகளையும் கொடுத்துள்ளார்கள். தாங்கள் எழுதுவது “சரித்திர நாவல்களாக” இருந்தாலும், சரித்திர ஆதாரங்கள் இல்லாமல் எழுதவில்லை. அதனால் தான், அவை இன்றளவிலும் படிக்கப் பட்டு வருகின்றன. பொதுவாக ஜே. சோமசுந்தரம் பிள்ளை, கே. கனகசபா பிள்ளை, கே. என். சிவராஜ பிள்ளை, என். சுப்ரமணியம் முதலியோர் ஆங்கிலத்தில் எழுதி வந்தார்கள். அவர்களது புத்தகங்கள் “சரித்திரப் புத்தகங்கள்” வகையில் இருந்தாலும், தமிழில் இல்லாதிருந்தாலும், இங்கு குறிப்பிடப்படுகிறது.

KAN and Sadasiva Pandarattar writing history in Tamil

கல்லூரிகளில் தமிழில் சரித்திரம் படிக்கும் மாணவர்களுக்குவெளியிடப்பட்டுள்ள புத்தகங்கள்: தமிழில் சரித்திரப் பாடம், பட்டப்படிப்பிற்காக எடுத்துக் கொண்டு படிக்கும் மாணவர்களுக்காக, தமிழில் சரித்திரப் புத்தகங்கள் எழுதப் பட்டன. ஆனால், இவை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப் பட்டவையாக இருந்தன. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அத்தகைய பல புத்தகங்களை 1980களினின்று வெளியிட்டுள்ளது. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியின் “தமிழ்நாட்டைப் பற்றி குறிப்புகள்” என்ற புத்தகம் பிரபலமானது. கே. வி. ராமனின் “சோழர் வரலாறு”, தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மங்கள முருகேசன் போன்றோரும் அதே முறையப் பின்பற்றியுள்ளனர். ராஜு காளிதாஸ் போன்றோர் சிறிது மாறுபட்டுள்ளனர். மயிலை சீனி வெங்கடசாமி என்பவர் சில புத்தகங்களை எழுதியிருந்தாலும் அவை பெரும்பாலும் உணர்ச்சிப் பூர்வமான நிலையில் உள்ளன. சதாசிவப் பண்டாரத்தார் போன்று எழுதப்படவில்லை. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள புத்தகங்களும் குறிப்புப் புத்தகங்கள் போலத்தான் உள்ளன. இப்பொழுது தமிழ் வவளர்ச்சிக் கழகம் சில புத்தகங்களை வெளியிட்டுள்ளாலும், அவை தமிழ்மொழி தொடர்புடவையாக உள்ளன. திராவிடப் பல்கலைக் கழக நூல்களும் அவ்வாறே உள்ளன.

The Bower mss medical work in Sanskrit

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] இன்றைய சரித்திராசிரியர்கள் இப்பெயர்களை அதிகமாக உபயோகப் படுத்துவார்கள். இல்லையென்றால், அப்படி செய்யாதவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றும் எடைபோடுவர்.

[2] சென்னை பல்கலைக்கழக பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகமாக நியமிக்கப்பட்டிருந்தது. மு.. இராகவைங்காரின் “நூலாசிறியரின் வரலாறு” சேர்க்கப்பட்டு இரண்டாம் பதிப்பாக மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது. தஞ்சைப் பல்கலைக்கழகம் 1994ல் நிழல்பட பிரதியாக வெளியிட்டுள்ளது.

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – சரித்திர எழுதப்படும் முறை (1)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைசரித்திர எழுதப்படும் முறை (1)

வேதபிரகாஷ்

No history without sources, evidence, proof

No history without sources, evidence, proof

இதிகாசம்” – “இது இப்படி நடந்தது: எல்லா இந்திய மொழிகளிலும் சரித்திர நூல்கள் இருந்து வந்துள்ளன[1]. இந்தியாவைப் பொறுத்தவரையில் சரித்திரம் “இதிகாசம்” எனப்படுகிறது. அதாவது “இது இப்படி நடந்தது” என்று அதன் சுருக்கமான பொருள் மற்றும் விளக்கம் ஆகும். “இது இப்படி நடந்தது” எனும்போது, சொல்பவர், எழுதுபவர் தான்,  “பார்த்தது இப்படித்தான்” என்று உறுதியாகச் சொல்கிறார். எழுதுபவரும் “நடந்தது இப்படித்தான்” என்று எழுதுகிறார்.

ஆகவே, இப்படி –

  • நடந்துள்ளது,
  • நடந்திருக்கக் கூடும்,
  • நடந்திருக்க வேண்டும்

என்றெல்லாம் சொல்லாமல், “இது இப்படி நடந்தது” என்பதில் இந்திய சரித்திராசியர்கள் (Indian historians) எந்த அளவிற்கு சரித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்[2]. மஹாபாரதம் எழுதப்பட்ட முறையில் “இந்திய சரித்திரவரையியல்” (Indian Historiography) கொள்கைகளைக் காணலாம். வியாசர் சொல்ல விநாயகர் மாகாபாரதம் எழுதினார் மற்றும் விதுரர் திருதராஷ்டிரனுக்கு, போரே நேரிடையாகத் தெரியும்படி செய்கிறார், அதனால், விதுரர் கண்களாள் பார்த்து, பார்க்க முடியாத குருடனான திருதராஷ்டிரனுக்கு போர் நிகழ்ச்சிகளை பார்த்து சொல்கிறான் என்றும் உள்ளது. அதாவது, அந்நிலையும்

  1. பார்ப்பவர் (the persond who sees the historical event),
  2. சொல்பவர் (the personal who narrates the historical event),
  3. கேட்பவர் (the person who listerns to the historical event),
  4. எழுதுபவர் (the person who actually writes the historical event)

முதலிய நிலைகளில் மனிதர்கள் மாறினாலும், விசயம் மாறக்கூடாது என்ற நிலையில் எழுதப்பட்டது மகாபாரதம் என்றாகிறது. மூலங்களுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது சரித்திரவரைவியல் எப்படியிருக்க வேண்டும் என்பது அப்பொழுதே எடுத்துக் காட்டப்பட்டது.

How Mahabharat written- Vidur told Dridhrastra

How Mahabharat written- Vidur told Dridhrastra

மூலம், ஆதாரம், சான்று முதலியவை இல்லாமல் சரித்திரம்எழுதப்படாது [मूल लिखयते ॱकिॱचित]: இந்திய எழுத்தாளர்கள் பொதுவாகவே மூலம், ஆதாரம், சான்று இல்லாமல் எதையும் எழுதும் வழக்கம் கொண்டிருக்கவில்லை. தொல்காப்பியத்திலேயே, எதைச் சொன்னாலும், முன்னோர், சான்றோர், உயர்ந்தோர்……“என்ப”, அதாவது கூறினர் என்று தான் சூத்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. எழுத்து, சொல், இலக்கணம், சமூகம் முதலியவற்றைப் பற்றி எழுதும் போதே அத்தகை உணர்வு, கடமை, பொறுப்பு முதலியவை இருந்தன, கடைப்பிடிக்கப்பட்டன. அதாவது படித்தவர்கள், படித்ததை உண்மையா-இல்லையா என்பதனை தாராளமாக சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம். அதனால், சரித்திரம் மிக்கப்பொறுப்பு, கடமை, பாரப்படசமின்மை முதலிய கொள்கைகளுடன் எழுதப்பட்டன. ஆனால், முகமதியர் மற்றும் ஐரோப்பிய எழுத்தாளர்கள் அவ்வாறு எழுதவில்லை. தம்மை உயர்த்தி எழுதிக் கொண்டது மற்றுமன்றி, பாரத மக்களை குறைவாகவே, தாழ்த்தி, இழிவுபடுத்தியே எழுதி வைத்தனர்[3]. அதனால் தான், இந்திய சரித்திரத்தில் ஒவ்வாதவை என்று பல விசயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சரித்திரம் என்பது என்ன எழுதப்பட்டுள்ளது, என்ன எழுதப்படுகிறது அல்லது என்ன எழுதப்படப்போகிறது என்பதல்லா, ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது தான் சரித்திரம் ஆகும்[4]. அதில் எந்தவித பாரபட்சமும் இருக்கக் கூடாது.

How Mahabharat written

How Mahabharat written

சரித்திரத்தின் தந்தைகளும், தாத்தாக்களும்: ஐரோப்பியர்களுக்கு தமக்குச் சொந்தமாக இருப்பது மிகவும் குறைவே, ஏனெனில், அவர்கள் தனித்தனியாகப் பிரிந்து நாடுகளாக உருவான நிலையில் ஒவ்வொரு சமய, தத்துவ, சமூக, பொருளாதார காரணிகளுக்கு  வெவ்வேறான பழமையான நாகரிகங்களிலிருந்து பெற வேண்டியதாகியது. பைபிளை சார்ந்து பொதுவாக ஐரோப்பிய சரித்திராசிரியர்கள் எழுதி வந்ததால், –

  • மதத்திற்கு, மத்தியத்தரைகடல் பகுதி,
  • தத்துவத்திற்கு கிரேக்கம்,
  • வானவியலுக்கு பாபிலோனியா,
  • கணிதத்திற்கு அசிரியா,
  • காலக்கணக்கீடுத் தொன்மைக்கு எகிப்து

என்று பலவிடங்களிலிருந்து பெற்று, பைபிள் காலக்கணக்கீடு (Biblical chronology) என்பதனை உருவாக்கினர். அதை வைத்துக் கொண்டு சரித்திரம் எழுத ஆரம்பித்தனர். பெரும்பாலும் கிரேக்க-ரோமானிய மூலங்களை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டதால், வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் முதலியன அவற்றைச் சான்றதாகவே இருக்கும். கிரேக்க நூற்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால், அதற்கு அதிகாரம், மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளப் படும் தன்மை என்பவற்றை மனத்தில் கொண்டு “ஹெரோடோடஸ் சரித்திரத்தின் தந்தை” (Herodotus is the Father of History) என்று சொல்ல ஆரம்பித்தார்கள். உண்மையில் ஹெரோடோடஸ் ஒன்றும் இப்பொழுதுள்ள  சரித்திரம் போன்று எழுதிவிடவில்லை.

Herodotus and his history

Herodotus and his history

ஹெரோடோடஸ் சரித்திரம் ஒன்றும் சரித்திரம் இல்லை: ஹெரோடோடஸின் புத்தகத்தைப் படித்தால், அவருடைய உலகத்தின் ஞானம் மற்றும் இந்தியாவின் அறிவு முதலியவற்றைக் காட்டும் மாதிரி வரைப்படம் முதலியவற்றை அறிந்து கொள்லலாம்.குறிப்பாக இந்தியா, இந்தியர்களைப் பற்றி குறிப்பிடும் போது,

  • அவர்களுக்கு இரண்டு தலைகள், மூன்று கண்கள்,
  • நான்கு கைகள் இருந்தன,
  • உடைகள் அப்படியே மரங்களில் காய்த்துத் தொங்கின,
  • எறும்புகள் நாய் உருவில் பெரியதாக இருந்தன,
  • அவை பூமிக்கடியில் சென்று தங்கப்பொடியை அள்ளிக் கொண்டு வந்தன

என்றெல்லாம் எழுதியுள்ளதாக, அவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். இதில் சரித்துவத்துவம் (Historicity) என்று சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஏதோ “சிந்துபாத்” மற்றும் “ஆயிரத்தொரு இரவுகள்” கதைகளில் வரும் விஷயங்களைப் போல் உள்ளது. பிறகு எப்படி, ஹெரோடோடஸ் “சரித்திரத்தின் தந்தை” என்றாகிறார் என்று தெரியவில்லை!

Indians according to Herodotus and his history on India

Indians according to Herodotus and his history on India

கிரேக்க சரித்திரம் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது: இந்தியா எப்படி இருக்கும் என்று தெரியாது, இந்தியர்கள் எப்படி இருப்பார்கள் என்று அறியாது, இந்தியர்களின் தன்மயினையும் புரியாது ஹெரோடோடஸ் எழுதியிருக்கிறார். அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்த நிகழ்ச்சியிலிருந்து தான் இந்திய சரித்திரமே ஆரம்பிக்கிறது என்ற முடிவுசெய்த, ஆதாரமில்லாத சருதுகோளின் மீது ஆதாரமாக இந்திய சரித்திரம் எழுதப்பட்டது. பிரச்சினை என்னவென்றால், சமகாலத்தைய இலக்கியச் சான்றுகளை (contemporary literary evidences) நோக்கும் போது, இந்திய புராணங்கள் “சரித்திரப் புத்தகங்களை”ப் போன்றுள்ளன. ஆகவே, எங்களிடத்தில் “தாத்தாக்கள்” இல்லையென்றாலும், “தந்தைகள்” இருக்கிறார்கள் என்று காட்டிக் கொள்ள அவ்வாறு கூறிக்கொண்டார்கள். அதே நேரத்தில் இந்திய புராணங்கள் பற்றி கேவலமாக “அவை மாயை (myth), மாயாஜாலக் கதைகள் (fables), கட்டுக் கதைகள் (legends)” எழுதி வைத்தார்கள். ஆனால், வம்சாவளிகள் (geneologies), ராஜப்பரம்பரைகள் (royal dynasties), வரிசைக்கிரம ஆட்சியாளர்கள் (successive rulers), அவர்களது ஆட்சியின் காலம் (period of reign), முதலிய விவரங்களைப் புராணங்களிலிருந்து தான் பெற்றுக் கொண்டார்கள். உண்மையில் புராணங்கள் இல்லாமலிருந்தால், வில்லியம் ஜோன்ஸ் (William Jones), ஜான் பைத்புல் பிளீட் (John Faithful Fleet), வின்சென்ட் ஸ்மித் (Vincent Smith) முதலியோரால் இந்திய சரித்திரமே எழுதியிருக்க முடியாது.

Herodotus and his history on India

Herodotus and his history on India

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] “தமிழில் சரித்திர நூல்கள்” என்ற தலைப்பு நண்பர் சுப்பு அவர்களால் எனக்குக் கொடுக்கப்பட்டு, ஒரு கட்டுரை எழுதி தருமாறு 2013ல் கேட்டுக் கொள்லப்பட்டதால், இத்தலைப்பில் எழுத வேண்டியதாயிற்று. உண்மையில் இதனை misnomer எனலாம், ஏனெனில், இந்தியாவில் என்றுமே சரித்திரம் மொழிவாறு பிரித்துப் பார்க்கப்பட்டதில்லை.

[2] சரித்திரத்தில் மற்றும் சரித்திரவரவியலில் (historiography) நோக்கம் குறிக்கொள், கருத்து, இலக்கு (objectivity) இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இன்றைய சரித்திராசிரியர்கள் கூற ஆரம்பித்துள்ளார்கள்.

[3] Conquerer and conquered, victor and defeated, ruler and ruled and such concepts were involved in writing their histories. And thus, they never recorded their defeats or the victories of their opponents.

[4] History is not what had been written or being written or would be written, but, it is actually what had happened in the past.

712 CE வரையிலுள்ள சரித்திரத்தை பாரசீகப் புராணங்களில் வைத்து-திரித்து, அதற்குப் பிறகுள்ள சரித்திரத்தை மறைத்தது!

ஜூலை 7, 2015

712 CE வரையிலுள்ள சரித்திரத்தை பாரசீகப் புராணங்களில்வைத்துதிரித்து, அதற்குப் பிறகுள்ள சரித்திரத்தை மறைத்தது!

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (17)].

Arab invasion of sind

Arab invasion of sind

இந்திய சரித்திரத்தை முகலாயர் சரித்திரமாக மாற்றிய விதம்: இந்திய சரித்திரத்தில் ஹர்ஷருக்குப் பிறகு (606-647 CE) ராஜபுத்திரர்களின் சுமார் 700 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தை (650-1200 CE) சுருக்கமாக முடிக்கப்படுகிறது. தெற்கில் உள்ள ஆட்சியை சில பக்கங்களில் முடக்கிவிடுகின்றது. 7ம் நூற்றாண்டில் தோன்றிய இஸ்லாம் கத்தியேந்திய முகமதியர்களால் மத்திய ஆசிய நாடுகளில் பரவி, அதற்குப் பிறகு தான் 712ல் சிந்துதேசத்தில் நுழைந்தனர். மொஹம்மது தோன்றி, முகமதியம் தோன்றி, இஸ்லாமாக வளர்வதற்கு முன்னால் அப்பகுதிகளில் யார் ஆண்டனர், எம்மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதனை சரித்திராசியர்கள் விளக்குவதில்லை. இந்துகுஷ், பிரமாணபாத் போன்ற இடங்களும், “ஸ்தான்” என்று முடியும் பல பகுதிகளும், அங்கு கிடைத்துள்ள அகழ்வாய்வு ஆதாரங்களும், இந்திய தாக்கத்தைத்தான் காட்டுகின்றன. குறிப்பாக முகமதிய சித்திரங்களில் பௌத்த தாக்கத்தைக் காணலாம். ஏனெனில், ஆரம்பகாலத்தில் அதிக அளவில் பௌத்தர்கள் முகமதிய மதத்திற்கு மாற்றப்பட்டார்கள்.

Sasanid, Kushan, Uygur empires

Sasanid, Kushan, Uygur empires

சரித்திரத்தன்மை இல்லாத “சிந்துவின் மீதான படையெடுப்பு” என்றதைத் திணித்தது: ராய் ஷாசி II க்குப் பிறகு, சச் (c. 610-671 CE) என்ற பிராமண அரசர் சிந்தை ஆண்டுவந்தார், இவரைப்பற்றி தான் சாசா நாமா என்ற நூலில் சொல்லப் பட்டிருக்கிறது. சந்தர் என்ற சச்சின் சகோதரர் பிறகு  ஆண்டார். மொஹம்மது பின் காசிம் 711 CEல் சிந்தின் மீது படையெடுத்தான். அப்பொழுது ஆண்ட தாஹிர் என்ற அரசனுக்கு பௌத்தர்கள் உதவவில்லை. இதனால், ராஜா தாஹிர் தோற்கடிக்கப்பட்டார், அலோர், தேபால் பகுதிகள் ஆக்கிரமிக்கப் பட்டன. இங்கும் சச் அரசரைப் பற்றி முரண்பாடான விவரங்கள் சொல்லப்படுகின்றன. நவீன சரித்திர ஆசிரியர்கள் அவரை பௌத்தர் என்கிறார்கள். பிறகு பௌத்தர்கள் அவருக்கு உதவாமல், அரேபியர்களுக்கு என் உதவினார்கள் என்று விளக்கவில்லை. பிராமணர் எப்படி ஆளமுடியும் என்பதும் முரண்பாடானது, அதாவது, அக்காலத்தில், சத்திரியர்கள் ஏன் அப்பகுதிகளை ஆளவில்லை என்று நோக்கத்தக்கது. இவ்வளவு நடந்தும் இபின் ஹவ்கல் [Ibn Hawqal] என்ற அரேபிய பிரயாணி 967 CEல் அங்கு வந்தபோது, மக்கட்தொகை மிக்க 24 நகரங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளான்.

Hajj discrimination shia and gender

Hajj discrimination shia and gender

அரேபியர்களும், அரேபியர்-அல்லாதவர்களும்: சிந்தின் முக்கிய மக்கள் ஜாட், சோதா, ஜரேஜா, மெட்ஸ் என்ற ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஜாட் மக்கள் பெருமளவில் அடிமைகளாக்கி இராக்கிற்கு அனுப்பப் பட்டனர்[1], என்று ஒரு புறம் சொல்லப்படுகிறது. இன்னொருப் பக்கமோ, சச் அரேபியப் பெண்களை சரியாக நடத்தவில்லை அதனால், மொஹம்மது பின் காசிம் அனுப்பப்பட்டான் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இவற்றிற்கு சரித்திர ஆதாரங்கள் இதுவுமே இல்லை. பொதுவாக பாரசீக நூல்களின் படி, இப்பொழுதுள்ள முகமதியர்கள் எல்லோருமே அரேபியர்களின் சந்ததியர், வாரிசுகள், வழிவந்தவர்கள் என்றுதான் உறுதியாக சொல்லிக் கொள்கின்றனர். அதிலும், குறிப்பாக இரான் அல்லது புகராவிலிருந்து வந்த ஒரு பெரிய வீரன் அல்லது சந்நியாசி மூலங்களிலிருந்து வந்தார்கள் என்றுதான் அறிவித்துக் கொள்கின்றனர். ஆனால், உண்மையில் அரேபியர்கள் ஒப்புக்கொள்வதில்லை[2]. சவுதியில் வேலை, திருமணம், ஹஜ் போன்ற விசயங்கள் வரும் போது, அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று தான் நடத்தப்படுகிறார்கள்.

Khilji, Lodi etc ruled India

Khilji, Lodi etc ruled India

முகமதியர் மற்றும் ஆங்கிலேய எழுத்தாளர்கள் சரித்திரத்தை திரித்தது: இஸ்மயிலி குழுக்கள் வந்து மதமாற்றங்களில் ஈடுபட்டன. இது சூபிக்களின் வேலை போல உள்ளது. சிந்து மற்ற பகுதிகளை ஆண்டு வந்த இந்து அரசர்களின் விவரங்களை சச் நாமா அல்லது ஃபடே நாமா அல்லது தாரிக்-இ-ஹிந்த் வ சிந்த் என்ற நூலிலிருந்து தான் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது, ஆனால், அவற்றிற்கு சரித்திர ஆதாரம் எதுவும் இல்லை[3]. இதை எழுதியது யார் என்று தெரியாது, மேலும், அரேபியத்திலிருந்து பாரசீகத்தில் மொழிபெயர்த்துள்ளது என்கிறார்கள். புராணக்கதை, கட்டுக்கதை, ரோமாஞ்சனக் கதை என்றெல்லாம் கருதப்பட்டது[4]. ஆனால், மவுன்ட்ஸ்டௌர்ட் எல்பின்ஸ்டோன் என்பவர் சொல்லித்தான், அவ்விவரங்களை சரித்திரத்தில் சேர்த்துக் கொண்டார்கள்[5]. இந்திய புராணங்கள் என்று வரும்போது, அவையெல்லாம் கட்டுக்கதை, பொய், சரித்திர ஆதரம் இல்லை என்றது கவனிக்கத்தக்கது. எனவே, முகமதியர் மற்றும் ஆங்கிலேய எழுத்தாளர்கள் சரித்திரத்தை இவ்வாறு பாரபட்சத்துடன், ஓரவஞ்சனையுடன், தீர்மானித்துள்ள திட்டத்தின்படி திரித்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

Hajj women and Jain women

Hajj women and Jain women

ஜைனர்களால் ஏன் முகமதியர்களை எதிர்க்க முடியவில்லை?: மத்திய ஆசியப்பகுதிகளில் ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் அதிகமாக இருந்தனர். ஸ்வேதேம்பர ஜைனர்கள் அப்படியே மதம் மாற்றப்பட்டனர், திகம்பரர்கள் தப்பியோடினர். மற்றவர்களில் பெரும்பாலோர் இஸ்லாத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல், மதம் மாற்றப்பட்டனர். அஹிம்சை தவிர பௌத்தம் மற்றும் இஸ்லாத்திற்கு பெருமளவில் வித்தியாசம் இல்லாமல் இருந்தது. எல்லா கடவுளர்களையும் மறுத்தது (லா இல்லாலஹ) பௌத்தம், ஆனால், முகமதியம் எல்லா கடவுளர்களையும் மறுத்தது அதற்கு (லா இலா இல்லல்லாஹ) அல்லா என்று பெயரிட்டு, கூட (மொஹம்மது ரசுரல்லாஹ) நபியையும் சேர்த்துக் கொண்டனர். சுமார் 300 ஆண்டுகள் காலம் அமைதியாகவே இருந்தது, அதாவது இந்துக்கள் தாம் ஆண்டுகொண்டிருந்தனர். ஆனால், இச்சரித்திரமும் இந்தியர்களுக்குச் சொல்லப்படுவதில்லை.  சிந்து பகுதிகளில் இடிபாடுகளுடன் இருக்கும் கோவில்கள், ஜைனத்தைச் சேர்ந்தது என்கிறார்கள். அப்படியென்றால், ஜைனர்கள் எப்பொழுது அதிகாரத்துடன் ஆட்சி செய்து கொண்டிருந்தனர் என்றும் விளக்கப் படுவதில்லை. இடைக்காலத்தில் சைவர்களுடன் தென்னிந்தியாவில், மேற்குக்கடற்கரைப் பகுதிகளில், இந்துக்களை மதமாற்றிருக்கிறார்கள். பிறகு, முகமதியர்களுடன் அவர்களால் ஏன் ஒன்றும் செய்யமுடியவில்லை?

Muslim Comparison Chart for HAJJ

Muslim Comparison Chart for HAJJ

712 முதல் 1026 வரை சரித்திரம் என்ன சொல்லப்படவில்லை: பிறகு 1000 முதல் 1026 CE வரை மொஹம்மது கஜினி 17 முறை பாரதத்திற்குள் நுழைந்து கொள்ளையடித்துச் சென்றான்.  ஜாட் அரசர்கள் அவனை பலமுறை துரத்தியடித்திருக்கிறார்கள். ஜெயபால் ஒரு லட்சம் வீரர்களுடன், கஜினி வரை சென்று, மொஹம்மதுவைத் துரத்தியடித்திருக்கிறான். மொஹம்மது கோரியின் தாக்குதல்கள் 1175-1206 காலகட்டத்தில் ஏற்பட்டன. “அடிமை வம்சத்தின் ஆட்சி” 1206 முதல் 1290 வரை இருந்தது. இக்காலத்தில் தில்லி மற்றும் தில்லியைச் சுற்றியுள்ள கோவில்கள் தாக்கப்பட்டன, கொள்ளையடிக்கப்பட்டன. கில்ஜி வம்சம் 1290 முதல் 1320 CE வரை ஆண்டது. இதில் அலாவுத்தின் கில்ஜி காலத்தில் வடவிந்தியாவில் பற்பல குரூரங்கள், கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. துக்ளக் ஆட்சி காலம் 1320 முதல் 1414 CE வரை இருந்தது. பிறகு சையதுகள் 1414 -1451 CE மற்றும் லோடிகள் 1451-1526 காலத்தில் ஆண்டனர்.

Raja Dahir anniversary

Raja Dahir anniversary

350 ஆண்டுகளுக்குப் பிறகு முகலாயர்களின் ஆட்சி ஏற்பட்டதுஎப்படி?: 1290-1526 காலத்திற்கு அதாவது சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு முகலாயர்களின் ஆட்சி ஏற்பட்டது. பாமனி சுல்தான்கள் 1347-1526 CE வரை தெற்கில் சில பகுதிகளை ஆண்டு வந்தாலும், அவர்கள் தில்லியின் பிரதிநிதிகளாக இருந்தனர். 1336-1565 CE வரை, விஜயநகர பேரரசு முகமதியரை தெற்கில் வரவிடாமல் தடுத்து ஆட்சி செய்து கொண்டிருந்தனர்.  அதாவது சுமார் 350-700 ஆண்டுகள், தில்லி மற்றும் தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்ட வரலாற்றை, இந்திய வரலாறு என்றும், அதிலும் 712-1757 காலத்தை முகமதியர் ஆட்சி காலம் அல்லது 700 ஆண்டுகள் முகமதியர் ஆட்சி காலம் என்று வர்ணிக்கின்றனர். ஆனால், மற்ற பகுதிகளில் ஆண்ட இந்திய அரசர்களின் நிலைப் பற்றி மறைத்து விட்டார்கள். 712-1757 CE காலகட்டத்தில் அவர்கள் ஆண்ட இடங்கள் என்று வரைப்படத்தில் காட்டும் போது, விடுபட்டுள்ள அப்பெரிய இடத்தை யார் ஆண்டார்கள் என்பதை எப்படி அவர்கள் மறைத்தார்கள் என்று தெரியவில்லை. இதுவே இந்திய சரித்திரத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய மோசடி என்றாகிறது.

வேதபிரகாஷ்

© 07-07-2015

[1] http://www.dawn.com/news/885796/time-check-mediaeval-india-impact-of-the-arab-conquest-of-sindh

[2] http://tribune.com.pk/story/317619/arab-origins/

[3] Chach Nama (Sindhi: چچ نامو‎), also known as the Fateh nama Sindh (Sindhi: فتح نامه سنڌ‎), and as Tarekh-e-Hind wa Sindh Arabic (تاريخالهند والسند), is a book about the history ofSindh, chronicling the Chacha Dynasty’s period, following the demise of the Rai Dynasty and the ascent of Chach of Alor to the throne, down to the Arab conquest by Muhammad bin Qasim in early 8th century AD.

[4] The Táríkh Maasúmí, and the Tuhfatulkirám are two other Muslim histories of the same period and on occasion give differing accounts of some details. Later Muslim chronicles like those by Nizam-ud din Ahmad, Nuru-l Hakk, Firishta, and the Mir Ma’sum draw their account of the Arab conquest from the Chach-Nama.

[5] It was translated into Persian by Muhammad Ali bin Hamid bin Abu Bakr Kufi in 1216 CE[2] from an earlier Arabic text. At one time it was considered to be a romance until Mountstuart Elphinstone’s observations of its historical veracity. The original work in Arabic is believed to have been composed by the Sakifí family, the kinsmen of Muhammad bin Qasim.

அரேபிய, பாரசீக, துருக்கிய மொழிகளில் கொக்கோக நூல்கள் – ஆண்-பெண் உடலுறவுகள், குடும்ப பிறழ்சிகள், கொக்கோக இன்பங்கள்!

ஜூலை 1, 2015

அரேபிய, பாரசீக, துருக்கிய மொழிகளில் கொக்கோக நூல்கள் – ஆண்பெண் உடலுறவுகள், குடும்ப பிறழ்சிகள், கொக்கோகஇன்பங்கள்

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (16)].

எடுத்தாளப்பட்ட நூல்கள்

எடுத்தாளப்பட்ட நூல்கள்

ஆண்பெண் உடலுறவுகள், குடும்ப பிறழ்சிகள், கொக்கோகஇன்பங்கள்: ஆண்-பெண் உடலுறவுகள் மிகச்சாதாரணமானது, ஆனால், இஸ்லாத்தில் “ஒரு ஆண், ஒரு பெண்” என்ற பந்தம், உடலுறவு, குடும்பம் போன்றவை இல்லாததாலும், பலதார குடும்பம், விவாகரத்து, பெண்களும் பல ஆண்களை திருமணம் செய்து கொள்வது போன்ற பழக்க-வழக்ககளினாலும் உறவுகள் குழப்பமாகின. போர்களில் ஆண்கள் இறந்து விடுவதால், அவர்களது மனைவிகள் தனியாகி விடுவதால், அவர்களுக்கு உதவும் வகையில் தான் “ஒரு ஆண்-நான்கு பெண்கள்” திருமணமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டமாக்கப் பட்டது என்று இஸ்லாம் முல்லாக்கள், காஜிக்கள் மற்றும் உலேமாக்கள் கூறுகின்றனர்.  திருமணம் பற்றி இஸ்லாமியப் பிரிவுகள் தத்தமக்கு ஏற்றமுறையில் சட்டங்களை ஏற்படுத்தியுள்ளன. ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்று சட்டரீதியில் இருந்தாலும், அவர்களை எத்தனை காலத்திற்கு மனைவியாக வைத்திருக்கலாம் என்று உறுதியாகச் சொல்லப்படவில்லை. ஒருவன் ஒரே மனைவியை வைத்துக் கொண்டிருக்கலாம், அல்லது விவாகரத்து செய்து, தொடர்ந்து திருமணம் செய்து கொள்வது, விவாகரத்து செய்வது என்றமுறையைப் பின்பற்றினால், ஆண்-பெண் உறவுமுறைகள் சீரழியும் என்பதுதான் உண்மை. உடல் ரீதியால் மட்டுமல்லாது மனோதத்துவ ரீதியிலும் சிக்கல்கள், குழப்பங்கள், முரண்பாடுகள் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மையாகிறது. “ஒரு ஆண்-நான்கு பெண்கள்” திருமணமுறை, “தலாக், தலாக், தலாக்” என்ற விவாகரத்து, மூத்தா திருமணங்கள், ஹேரங்கள் முதலியன, கொக்கோகங்களுக்கு வித்திட்டு, சிற்றின்ப இலக்கியங்கள் பெருகின. “மது-மாது” என்ற கிளர்ச்சிகொண்ட எண்ணங்கள் கவிதைகளாகி, மக்களை சதாய்த்தது.

Morocco Sex shop

Morocco Sex shop

உடலுறவு கொள்ள மற்றும் நீட்டிக்க கையாளும் முறைகள்.

Persian erotic literature

Persian erotic literature

பாரசீக மற்றும் இதர மொழிகளில் உள்ள நூல்களில் உதாரணத்திற்கு காட்டப்பட்ட சித்திரங்களில் சில.

ope-arab_couple_smoking_bhang_the_spirit_of_cannabis

ope-arab_couple_smoking_bhang_the_spirit_of_cannabis

உக்கா மூலம் போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கம் இருந்தது.

Arab Erotology books - Perfumed Garden

Arab Erotology books – Perfumed Garden

அரேபிய, பாரசீக, துருக்கிய மொழிகளில் கொக்கோக நூல்கள்: அஹமது அல்-திபாஸி [Ahmad al-Tifashi (1184-1253 CE)], அஹமத் அல்-பலிதா [Ahamad al-Falitha], அப்தல் வஹாப் இபின் சஹ்நுன் [Abdal Wahab Ibn Sahnun (973-1031 CE)], அப்தல் ரஹ்மான் அல்-ஷன்ஜாரி [Addal Rahman al-Shanzari], அஹ்மத் அல்-திஜானி [Ahamad al-Tijani], அப்தல் ஸ்லாம் அல்-லகானி [Abdal Salam al-Laqani] முதலியோரின் நூல்கள் செக்ஸ், பாலியல் பற்றிய விவக்கரங்களைப் பற்றி விவரிக்கின்றன. அவற்றில் மொஹம்மது இபின் மொஹம்மது அல்-நப்ஜாவியின் (Muhammad ibn Muhammad al-Nafzawi) உடலின்பத்திற்கான சுகந்தமான தோட்டம் (الروض العاطر في نزهة الخاطر‎ Al-rawḍ al-ʿāṭir fī nuzhaẗ al-ḫāṭir = The Perfumed Garden) என்ற கொக்கோகப் புத்தகம் அரேபிய வட்டாரத்தில், மொஹம்மதிய சமூகங்களில் மிகவும் பிரசித்தியானது[1]. அது “அரேபிய செக்ஸ் கையேடு” என்றெல்லாம் புகழப்படுகிறது. அதிலுள்ள அத்தியாயங்களின் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன[2]:

Perfumed Garden, Sheikh Neffzaoui

Perfumed Garden, Sheikh Neffzaoui

  1. ஆணின் போற்றக்கூடிய தன்மைப் பற்றியது [Chapter 1: Concerning Praiseworthy Men].
  2. போற்றக்கூடிய பெண்களைப் பற்றியது [Chapter 2: Concerning Women Who Deserve To Be Praised]
  3. வெறுக்கக்கூடிய ஆண்களைப் பற்றியது [Chapter 3: About Men Who Are To Be Held in Contempt]
  4. வெறுக்கக்கூடிய பெண்களைப் பற்றியது [Chapter 4: About Women Who Are To Be Held in Contempt]
  5. வம்சவிருத்திப் பற்றியது [Chapter 5: Relating to the Act of Generation]
  6. உடலுறவு கொள்வதற்கான வசதியான நிலைமை [Chapter 6: Concerning Everything That Is Favourable to the Act of Coition]

    The Perfumed Garden of the Cheikh Nefzaoui- A Manual of Arabian Erotology - 14th Century

    The Perfumed Garden of the Cheikh Nefzaoui- A Manual of Arabian Erotology – 14th Century

  7. வம்சவிருத்தியை பாதிக்கக் கூடிய இசயங்கள் [Chapter 7: Of Matters Which Are Injurious in the Act of Generation]
  8. ஆண்குறியைக் குறிக்கும் மற்றப் பெயர்கள் [Chapter 8: The Sundry Names Given to the Sexual Parts of Man]
  9. பெண்களின் பாலியல் சம்பந்தப்பட்ட உறுப்புகளைக் குறிக்கும் மற்றப் பெயர்கள் [Chapter 9: Sundry Names Given to the Sexual Organs of Women]
  10. மிருகங்ளின் வம்சவிருத்தி சம்பந்தப்பட்ட உறுப்புகளைக் குறிக்கும் மற்றப் பெயர்கள் [Chapter 10: Concerning the Organs of Generation of animals]
  11. பெண்களின் ஏமாற்றும் மற்றும் மோசடி செய்யும் குணங்கள் [Chapter 11: On the Deceits and Treacheries of Women]
  12. ஆண்கள் மற்றும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய உபயோகரமான விசயங்கள் [Chapter 12: Concerning Sundry Observations Useful to Know for Men and Women]
  13. வம்சவிருத்திக்காக செய்யும் செயல்களில் இன்பம் பெறுவதற்கான காரணங்களைப் பற்றியது [Chapter 13: Concerning the Causes of Enjoyment in the Act of Generation]

    Perfumed Garden of the Cheikh Nefzaoui- A Manual of Arabian Erotology - 14th Century- woman depicted Hindu

    Perfumed Garden of the Cheikh Nefzaoui- A Manual of Arabian Erotology – 14th Century- woman depicted Hindu

  14. கர்ப்பம் தரிக்க முடியாத பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது [Chapter 14: Description of the Uterus of Sterile Women, and Treatment of the Same].
  15. ஆண்களுக்கு ஆண்மையற்ற தன்மைக்கான காரணங்களை அறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது [Chapter 15: Concerning the Causes of Impotence in Men]
  16. ஆண்மையற்ற தன்மை மற்றும் பெண்மையற்ற தன்மை குணப்படுத்துவது, நீக்குவது [Chapter 16: Undoing of Aiguillettes (Impotence for a Time)]
  17. உறுப்புகளை பெரிதாக்குவது மற்றும் அழகாக்குவது பற்றிய பரிந்துறைகள் [Chapter 17: Prescriptions for Increasing the Dimensions of Small Members and for Making Them Splendid]
  18. கை-கால் மடிப்புகளில் வரும் துர்நாற்றம் மற்றும் உடலுறவுக்கு முன்னும், பின்பும் ஏற்படும் நாற்றத்தைப் போக்கும் முறைகள் [Chapter 18: Of Things that Take Away the Bad Smell from the Armpit and Sexual Parts of Women and Contract the Latter]
  19. கர்ப்பத்திற்கான விதிமுறைகள் [Chapter 19: Instructions with Regard to Pregnancy]
  20. இந்நூலின் முடிவுரை [Chapter 20: Forming the Conclusion of This Work]
    மற்றும் பின்னிணைப்பு [Appendix]

12ம் நூற்றாண்டில் அத்தகைய பிரச்சினைகள் எல்லாமே அலசப்பட்டுள்ளன எனும்போது, அக்காலத்தில் அவற்றிற்குண்டான நிலைகள் ஏற்பட்டிருந்தன என்றாகிறது. அத்தகைய பாலியல் பிரச்சினைகள், அசௌகரியங்கள், நோய்கள் ஏற்பட்டிருந்து என்றால்,

பொதுவாக இஸ்லாமிய சமூகத்தில் காணப்பட்டப் பிரச்சினைகள்: இஸ்லாம் பரவிய நாடுகளில் எல்லாம், இத்தகைய அமைப்புகளைப் பார்ப்பதால், இவையெல்லாமே அவர்களது குணாதிசயங்களாகத் தெரிகின்றன. ஆண்கள்-பெண்கள் உறவுகள், குடும்பங்கள், போர்களால், மதச்சண்டைகளால், அடிமை வியாபாரத்தினால் சீரழிந்தன.

  1. பெண்களைத் தூக்கிவருதல், கடத்தி வருதல், அடிமைகளாக வாங்குதல்-விற்றல்.
  2. ஹேரத்தை உருவாக்கல் – தனியான கட்டிடம், காவல் முதலியன.
  3. உடலுறவுகள், உடலுறவுகளை நீட்டித்தல், அதற்கான மருந்துகள்.
  4. ஊக்குவிக்க கவிதைகள் பாடுதல், இசை-நடனம் ஏற்பாடு செய்தல்.
  5. கவிஞர்கள், நடன மாதருடன் உறவு கொள்வது.
  6. ஓவியக்காரர்கள், இத்தகைய கொக்கோகக் காட்சிகளை சித்திரங்களில் வடித்தல்.
  7. ஓவியங்களுக்காக, சித்திரக்காரர்கள் உடலுறவுகளைப் பார்ப்பது மற்றும் மாதிரிகளாக பெண்களைப் பயன்படுத்துக் கொண்டது. அப்பெண்களிடம், ஓவியக்காரர்கள் உறவு கொண்டது.
  8. ஆண்-பெண் உறவுகள் சீரழிந்ததால் விபச்சாரம் பெருகுதல்.
  9. உடலுறவுகள், கர்ப்பமாதல், கர்ப்பத்தை அழிப்பது, போன்றவற்றில் ஈடுபடல்.
  10. ஹேரத்தின் பாதுகாப்பு – அலிகளை பாதுகாவலர்களாக வைப்பது, அவர்களைக் கண்டுபிடிப்பது, உருவாக்குவது.
  11. குழைந்தைகள் பிறத்தல், அவர்களை வளர்ததல், ஆவண செய்தல்.
  12. உறவுமுறைகள் அறியாத, பந்தபாசங்கள் அறியாத குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆதல், மனோரீதியில் குரூரக்குற்றவாளிகளாக, கொடுங்கோலர்களாக மாறுதல்.
  13. இவையெல்லாம் காமச்சங்கிலிகளாக, கொக்கோக சுழற்சிகளாக, உடலுறவு வட்டங்களாக, பின்னிப்பிணைந்துள்ளதால், சிக்கிக்கொண்டு தொடர்ந்து நடந்து வந்தன.

இவ்வாறு இஸ்லாம் பரவிய நாடுகளில், இத்தகைய மாதிரிகள், அமைப்புகள், சமூக பிறழ்சிகள், பழக்க-வழக்கக்கள் பரவின, காணப்பட்டன[3].

வேதபிரகாஷ்

SHARE