தமிழீழப்போராட்ட வரலாறு மூன்று தசாப்தங்களைக் கடந்துள்ள நிலையிலும் விடுதலைப்புலிகளின் தலை வரான பிரபாகரனது போராட்ட உத்திகள் காலத்திற்குக்காலம் மாற்றப்பட்டு போராட்டம் பெரும் வளர்ச்சி கண்டது. இவ்வாறான சூழ்நிலையில் தான் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்தொழிக்கவேண்டும் என சர்வதேச நாடுகள் கங்கணம்கட்டி, போராட்டத்திற்கு முற்றுப்புள்ளியினை வைத்தன. பிரபாகரனது போராட்டத்தின் ஆழத்தை அறிந்துகொண்ட சர்வதேசம், நாளடைவில் வல்லரசு நாடுகளுக்கு இப்போராட்டம் சவாலாக அமைந்துவிடும் என்கின்ற காரணத்தினால் பிரபா கரனது போராட்டத்தை இலங்கையில் இருந்து முற்றாக அழித்தொழிக்கத் தீர்மானித்தன. யுத்தத்தின் தந்தி ரோபாயங்கள் மாற்றப்பட்ட நிலை யில் விடுதலைப்புலிகளுடைய கடல், வான், தரை என்ற மும்முனைகளையும் சர்வதேச நாடுகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தன.
போராட்ட வரலாற்றில் ஆரம்ப கட்டங்கள் காட்டிக்கொடுப்புக்கு மத்தியில் அமைந்தபோதும், தொடர்ச்சியான வெற்றிகளைக் கண்டுவந்தனர் விடுதலைப்புலிகள். ஒரு பலம்வாய்ந்த இயக்கமாக இருந்ததன் காரணமாக அவ்வப்போது இடம்பெற்ற தேசத்துரோகப் பிரச்சினைகளையெல்லாம் பிரபா கரன் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்திருந்தார். டொமினிக்- விடுதலைப்புலிகளின் நிதிப்பொறுப்பாளர், யோகி – விடுதலைப்புலிகளின் அரசியற் துறைப்பொறுப்பாளர், மாத்தையா- வன்னி மாவட்ட கட்டளைத்தளபதி, கிட்டு – விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி, விக்ரர்-மன்னார் மாவட்ட கட்டளைத்தளபதி ஆகியோர் விடுதலைப்புலிகளின் முக்கிய தள பதிகளாக இருந்த காலகட்டத்தில் இவர்களுக்கிடையில் பிரிவினை வாதங்கள் தோற்றுவிக்கப்பட்டது. இதன் காரணமாக இவர்களுக்கு பிரபாகரனால் தண்டனை வழங்கப்பட்டு அவர்களது பதவிகளும் பறிக்கப்பட்டது. தேசத்துரோக நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவிற்குப் பேச்சுவார்த்தைக்காகச் சென்ற குமரப்பா புலேந்திரன் உட்பட 12 போராளிகள் தமது உயிரை நீத்;தனர். சர்வதேச கடற்பரப்பின் ஊடாக வந்த கிட்டுவை இந்தியாவின் ரோவிற்கு மாத்தையா காட்டிக்கொடுத்தார். அன்பழகன், ரெஜினோல்ட், பழனி போன்றவர்கள் கடற்தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இதில் தளபதி கிட்டு கப்பலைத்தகர்த்து தன்னைத்தானே தற்கொலை செய்துகொண்டார். அதனால் விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகங்கள் முற்றாகத் தடைப்பட்டன. 2000ம் ஆண்டிற்குப் பின்னர் போராட்டம் வளர்ச்சிபெற்று விமானப்படையினைக் கொண்டிருக்கும் அளவிற்கு பரிணாம மடைந்தது. இது சர்வதேசத்திற்கு சவாலாக விளங்கியபோதும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை சீர்குலைப்பதற்காக நோர்வே அரசாங்கம் இலங்கையில் தனது மூக்கினை நுழைத்துக்கொண்டது. நோர்வே அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு நாட்டிலும் தனது சமாதானப்பேச்சுக்களை முன்னெடுத்து அந்நாடு முழுமையான சமாதானத்தினை அடைந்த வரலாறுகள் இல்லை. சமாதானப்புறாவாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு ஒரு நாட்டிற்குள் நுழைகின்ற நோர்வேயரசு போராட்டத்தின் களநிலைகளை மழுங்கடிப்பதற்காக செயற்படும் அமெரிக்கரசின் ஒரு முகவராகும்.
இவ்வாறு சமாதானப் பேச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டு இடைக்கால நிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்பட்டபோது அந்த இடைவெளிக்குள் நோர்வே அரசா னது தனது இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறைகளை விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டது. பலம்வாய்ந்த ஒரு இராணுவ அமைப்பாகவிருந்த விடுதலைப்புலிகள் திடீரென அவர்களின் கட்டமைப்புக்கள் அனைத்தும் மழுங்கடிக்கப்படுவதற்கான காரணம் என்னவென்று பார்க்கும்போது, விடுதலைப்புலிகளின் ஒட்டுமொத்த இராணுவப் படையணிகளுக்கும் கருணா அம்மான் அவர்களே பொறுப்பு வகித்தார். அவரது போராட்ட நிலைமைகளை பார்க்கும்போது அதிகமாக வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் வெற்றி கண்டுள்ளார்.
இலங்கையரசும், நோர்வேயும் இவரை விடுதலைப்புலிகளிடமிருந்து பிளவுபடுத்துவதன் ஊடாக வெற்றிகாண இயலும் என்பதை தீர்மா னித்துக்கொண்டன. 2003,2004,2005ஆம் ஆண்டுகளில் ஒஸ்லோ – டோக்கியோவில் இடம்பெற்ற பேச்சுக்களின்போது கரு ணாவைப் பலவீனப்படுத்தும் நோக்கோடு அவர் தங்கியிருந்த விடுதி அறைக்கு வெளிநாட்டிலே பாலியல்தொழில் புரியும் பெண்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். பேச்சுவார்த்தைகளின்போது தனியாக கவனித்துக்கொள்வதற்கும் ஒரு பெண் நியமிக்கப்பட்டார். அவர் இன்றுவரையும் கருணாவுடன் இருக்கின்றார். இராணுவ வீரராக, ஒரு பலமிக்க போராளியாகத் திகழ்ந்த கருணாவை விபச்சார விடுதி மற்றும் ஆடல் நிலையங்களில் பங்குபெறவைத்து அவரது மனம் திசைதிருப்பப்பட்டது.
இதன் விளைவாக போராட் டத்தினுடைய கட்டுக்கோப்பிலிருந்து கருணா அவர்கள் விலகிச்செல்ல ஆரம்பித்தார். இதன்போது தேசியத்தலைவர் பிரபாகரனுக்கும் இவர் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றபோதும் கருணாவின் போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட அவர் ஏனையவர்கள் கருணா தொடர்பாகக்கூறும் அவதூறானப் பேச்சுக்களைக் கண்டுகொள்ளவில்லை. இக்காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தின் ஆழஊடுருவும் படையினர் விடுதலைப்புலிகளின் பிரதேசங்களில் உள்ள தளபதிகளை தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான போர்முனைத் தளபதி கடாபி, விடுதலைப்புலிகளின் வான் படைத்தளபதியாகவிருந்த சங்கர், விடுதலைப்புலிகளின் உள்ளகப் புலனாய்வுப்பொறுப்பாளர் மகிந்தி, போர்முனைத்தளபதி மதன், அரசியற் துறைப்பொறுப்பாளர் கௌசல்யன், இராணுவப் புலனாய்வு கிழக்கு மாகாணத் தளபதி ரமணன் போன்றோரும் இதனால் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் பிரபாகரன் கருணாவை கிழக்கு மாகாணத்தில் இருந்து வரும்படி அழைத்திருந்தார். ஆனால் கருணா வரவில்லை. இதனிடையே ஊடகங்களிலும், இராணுவ வட்டாரங்களில் இருந்தும் பிரபா-கருணாவின் பிளவு தொடர்பாக செய்திகள் வெளிவரத்தொடங்கின. நாளடைவில் இப்பிளவு உண்மையென நிரூபிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கும், கிழக்கு மாகாணப்போராளிகளுக்கும் இடையில் கடுமையான யுத்தம் இடம்பெற்றது. இதன்போது இலங்கையரசு எந்தவொரு செயற்பாட்டையும் வெளிப்படுத்தாது வேடிக்கை பார்த்து நின்றது. விடுதலைப்புலிகள் தமக்கிடையே யுத்தங்களை மேற்கொண்டு அதன் ஊடாக அழிந்துபோகட்டும் என்பதை எதிர்பார்த்த சர்வதேசமும், சிங்கள அரசும் ஒருகட்டத்தில் அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. விடுதலைப்புலிகள் அவர்களைத் தோற்கடித்து அவ்வணியினரை தமது கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டுவந்தனர். நிரந்தரப் பிரிவினை ஏற்படுத்திவிட்டோம் எனக்கூறி கருணா அணியினரை அரசு தம்பக்கமாக இணைத்துக்கொண்டது. இங்கேதான் தமிழினத் துரோகியாக கருணா சித்தரிக்கப்படுகின்றார்.
தமிழ் மக்களது மூன்று தசாப்த போராட்டத்தினை காட்டிக் கொடுத்ததுடன் அவர்களை அழித்தொழிப்பதை நோக்காகக் கொண்டும் சிங்களக் கூலிப்படைகளுடன் செயற்பட்டார். இதற்கு முன்னரும் இவ்வாறான காட்டிக்கொடுப்புச் சம்பவங்கள் இடம்பெற்றபோதும் அவை பலனளிக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் தேசியத்தலைவர் தமது சகாக்களுடன் மீண்டும் காட்டிற்குள் பிரவேசித்தார். இறுதிவரை எதிரிகளுடன் போரிட்டார். 2005 ஆரம்பித்த யுத்தம் 2009 வரை நீடித்தது. விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு தளங்களையும் அழித்தொழிப்பதற்கு சர்வதேசமும், இலங்கை இராணுவத்தினரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். விடுதலைப்புலிகளுக்கு உக்ரைன், ரஷ்யா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுக ளில் இருந்து வந்த ஆயுதக்கப்பல்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு மூழ் கடிக்கப்பட்டன. இதில் 08 ஆயுதக்கப்பல்கள் அடங்கும்.
இவ்வாறான சூழ்நிலையில் சர்வ தேசத்தில் ஆயுதக்கொள்வனவிற்குப் பொறுப்பாகவிருந்த குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கேபி போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் சூத்திரதாரியாக மாறினார். சர்வதேசத்திலும், உள்ளூரிலும் மிக முக்கிய புள்ளி களாகவிருந்தவர்கள் கருணாவும், கேபியும் தான். இவர்களினால் சர்வதேச மட்டத்திலான விடுதலைப்புலிகளின் வர்த்தகம், ஆயுதக்கொள்வனவு போன்ற செயற்பாடுகள் காட்டிக் கொடுக்கப்பட்டது. முப்பரிமாணங்ளையும் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டது. கொத்துக்கொத்தாக வன்னியில் சிறு வர்கள் முதல் பெரியோர்கள் வரை கொலைசெய்யப்பட்டபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் கொண்ட இலட்சியத்தில் இருந்து சிறி தளவேனும் மாறவில்லை. அங்கு ஒரு விடயத்தை அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அதாவது தமிழீழ இலட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால், என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக்கொள்வான் என்பதாகும். அது மட்டுமல்லாது நான் சாகலாம், நாம் சாகக்கூடாது என்பதே அவரது கருப்பொருளாகும். 30 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் 15 ஆட்சியாளர்களுடன் போரிட்டு வரலாறு படைத்த ஒரு தலைவராக பிரபா கரன் அவர்கள் திகழ்கின்றார். அதிலும் குறிப்பாக னு.ளு.சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, ஜோன் கொத்தலாவல, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, விஜயானந்த திசாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, வில்லியம் கொபல்லாவ, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரே மதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, தி.மு.ஜெயரட்ண, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, 2009 காலப்பகுதிகளில் சிறிதுகாலம் பாதுகாப்பு அமைச்சராகவிருந்தவரும், தற்போதைய ஜனாதிபதியும் அதில் உள்ளடக்கப்படுவார். 1948-2009வரை இலங்கை வரலாற்றில் தடம்பதித்த ஒரு தலைவராக பிரபாகரன் திகழ்கின்றார். கட்டம் கட்டமாக சிங்கள பேரினவாத அரசு தமிழ் மக்களுடைய உரிமைகளை மறுத்துவந்த நிலையில் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இன்றும் கூட சமாதானம் என்ற போர்வையில் தமிழ் மக்களிடையே பிரிவினைவாதத்தினை தோற்றுவிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது. மீண்டும் ஒரு பிரிவாக த.தே.கூட்டமைப்பு மற்றும் வடமாகாண சபையின் உறுப்பினர்கள் என தற்போதும் பிரித்தாளப்படுகின்றது. எதிர்க்கட்சித் தலைவரும், த.தே.கூட்டமைப்பின் தலை வருமான இரா.சம்பந்தனுக்கும், வட மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கும் இடையில் நல்லுறவு காணப்படவில்லை. இவ்விடயம் அரசிற்கு ஒரு சாதகத்தன்மையினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலைமைகள் தோற்றம் பெறும் போதெல்லாம் த.தே. கூட்டமைப்பின் சிலர் தேசியத்தலைவர் பிரபாகரனின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கின்றனர். தேர்தல் காலங்கள் வருகின்றபோது பிரபா கரன் தான் தேசியத்தலைவர் எனவும் தமிழ் மக்களது விடுதலைக்கான ஆரம்பம் இவர்தான் என்றெல்லாம் கூறுகின்றனர். பதவிகளைப் பெற்றவுடன் தங்களை மறந்து, மக்கள் நலனில் அக்கறை கொள்ளாது, தேசியத்தலைவரின் அறி வுரைகள், சிந்தனைகளில் இருந்து விலகி, த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களை தவறான பாதையில் திசைதிருப்ப முயற்சிக்கின்றது என்கின்ற குற்றச்சாட்டுக்களும் தமிழ் மக்களால் முன்வைக்கப்படுகின்றது.
கொள்கை என்பது ஒரு இலக்கினை நோக்கியது. இவ் விலக்கிலிருந்து தவறினால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை எக்காலத்திலும் பெற்றுக்கொள்ளமுடியாது என தீர்க்க தரிசனமாக பிரபாகரன் அவர்கள் அன்றே கூறியிருக்கிறார். அதுவே இன்று நடைபெறுகின்றது. மாற்றுவழிகள் என்கின்றபோது எதனைக்கையாண்டு தமிழ் மக்களுக்கான விடுதலையை த.தே.கூட்டமைப்பு பெற்றுக்கொடுக்கப் போகின்றது. தமிழ் மக்களின் விடுதலைக்காகப்போராடி உயிர்நீத்த மக்களுக்கும், மாவீரர்களுக்கும் த.தே.கூட்டமைப்பினர் எதனைப்பெற்றுக் கொடுக்கப்போகின்றார்கள். தமிழ் மக்களது பாரம்பரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகின்றன. இனப்படுகொலைகள் மூடிமறைக்கப்பட்டு போர்க்குற்றங்கள் என தற்போது பேசப்படுகின்றது. இவ்வாறான நிலை மைகள் இருக்கின்ற நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கப்பெறுமா? சமஷ்டியை கேட்கின்றோம் என்கிறது த.தே.கூட்டமைப்பு. அவ்வாறு வழங்க முடியாது என்கிறது இலங்கையரசு. உள்ளக விசாரணை வேண்டாம் சர்வதேச விசாரணையே இலங்கைக்குப் பொருத்தம் என்கிறது த.தே.கூட்டமைப்பு. இதனி டையே சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்கு வரவழைக்கப்போவதில்லை என்கிறது அரசு. இந்நிலையில் மீண்டும் தமிழ் மக்களை ஆயுதமேந்திப்போராடும் நிலைக்கு அரசு கொண்டுசெல்கின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது. அடக்குமுறையே போராட்டம் ஆரம்பிக்க காரணமாகவிருந்தது. இன்று சிங்ஹலே என்ற இனவாதத்தைத்தூண்டும் விதமான ஒரு வார்த்தை நாடளாவிய ரீதியில் பரப்பப்படுகின்றது.
தமிழ் மக்களது உரிமை களை வென்றெடுக்க தமிழ்க்கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டாலே அது சாத்தியமாகும். பிரபாகரனின் போராட்டத்தை சிதைக்கும் வகையில் காட்டிக்கொடுப்புக்கள் இடம்பெற்றன. அதனது விளைவு என்னவென்பது அனைவருக்கும் தெரியும். அரசினது சூழ்ச்சிகளுக்கு எம்மினம் அகப்பட்டுப்போகாத வகை யில் எமது அரசியலை முன்னெடுத்தால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள இயலுமே தவிர, அரசின் பேச்சுக்கெல்லாம் தலையாட்டினால் நாம் மீண்டும் ஒரு அடிமை இனமாக வாழக்கூடிய நிலைமைகள் உருவா கும். இதனைக்கருத்திற்கொண்டு த.தே. கூட்டமைப்பு செயற்படவேண்டும். இதற்கு உதாரண புருஷராக விடுதலைப்புலிகளின் தலைவர் செயற்பட்டார் என்பது சான்றாகும். அதனாலேயே அவர் இறுதிவரை தனது இலட்சியத்திலிருந்து மாறவில்லை என்பதேயாகும்.
இரணியன்