தமிழீழ வான்புலிகள் வானிலே சிறகடித்து பறந்த நாள்.வான்புலிகள் முதலில் உருவாக்கப்பட்ட போது எடுத்த காணொளி

660

 

தமிழீழ வான்புலிகள் வானிலே சிறகடித்து பறந்த நாள்.வான்புலிகள் முதலில் உருவாக்கப்பட்ட போது எடுத்த காணொளி

 

வான்புலிகள் (Tamileelam Air Force – TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு.
வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், ‘வானோடி’ என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர்.
வான்புலிகள் வரலாறு 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்க தொடங்கி விட்டார்கள்.
செப்டம்பர் 27, 1998 – 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில் பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2000 – ‘வான்புலிகள் ஆண்டு’ என தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது கேணல் சங்கர்.
கேணல் சங்கர் 
கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவு தொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.
ஜனவரி 26, 2005 – இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை

 

ஆகஸ்டு 11, 2006 – யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
மார்ச் 26, 2007 – அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 26ம் திகதி மார்ச் 2007 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது.
ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள்வெற்றிகரமான தாக்குதலை நடத்தின.

 

 

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசி தாக்கின.
அக்டோபர் 22, 2007 – எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர் கொல்லப்பட்டனர்.

 

வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது.
இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது. இவைதவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், உலங்குவானூர்திகளும் இருக்கலாம்.
முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள்.
இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.

வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத்தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தொடக்கத்தில், வான்புலிகள் யப்பானிய கமிகாச en:Kamikaze போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கை தாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது.
விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் en:Blitzkrieg முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.
விமானவியல் தொழில்நுட்பமும் விமான ஓட்டுனர் பயிற்சியும்.

வான்புலிகளின் தோற்றத்துக்கு தலைமை ஏற்றவராக கருதப்படும் கேணல் சங்கர் “சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்ற அவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்.”
வான்புலிகள் பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஓட்டுனர் பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் “Intelligence sources” முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கின்றார்.
இந்த தொழில் நுட்பத்தை மலேசியாவில் இலங்கைத் தமிழ் பின்புலத்தைக் கொண்டவரால் இயக்கப்படும் ஒரு விமான பராமரிப்புப் பயிற்சி கல்லூரியிலும் விடுதலைப் புலிகள் பெற்றிருக்கலாம் என கருத்துப்பட The Island பத்திரிகையும் Asia Tribune தகவல்கள் வெளியிட்டுள்ளன
இரணைமடு பகுதியில் பெரிய விமானங்களும் வந்து இறங்கக் கூடிய அளவு ஓடுதளம் ஒன்று இருப்பதை செய்மதிப் படங்கள் மூலம் உறுதி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த விடயம் 2005 ஆண்டளவில் தெரியவந்தது. சிறிய ஓடுதளம் முல்லைத்தீவின் வேறு பகுதிகளிலும் இருக்கலாம்.
வான்புலிகளின் முதல் உருவாக்கம் தேசியத் தலைவர் -காணொளியில்.
 
 
வான் புலிகளின் பாடல் 

 
தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர் சிங்கள அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு இரகசிய அறிக்கை படைத்துறைத் தளபதிகள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக்கூறப்படுகின்றது.

இலங்கையின் முக்கியமான ஒரு நட்பு நாடு (இந்தியாவாக அல்லது அமெரிக்காவாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது) இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்துள்ளது. தனது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினால் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்த இரகசிய அறிக்கையை குறிப்பிட்ட அந்த நேசநாடு தயாரித்திருந்ததாக கூறப்படுகின்றது.

தற்பொழுது இலங்கையின் படைத் துறை தளபதிகள் மத்தியிலும்இ ஒரு சில முக்கிய அமைச்சர்கள் மத்தியிலும் பரபரப் பாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக இந்த அறிக்கை மாறிவிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகளின் விமானங்கள் பற்றியும் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவற்றில் முக்கியமான இரண்டு விடயங்கள்தான் இலங்கைத் தரப்பின் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.

முதலாவது அதிர்ச்சி

அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கும் முதலாவது விடயம்: விடுதலைப் புலிகள் வசம் குறைந்தது பத்து வான் கலங்களாவது இருக்கலாம்; அவற் றில் ஜெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வான்கலங்களும் அடக்கம்” என்பதுதான்.

இலங்கைப் படைத்துறைத் தலைமையினை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள முதலாவது முக்கிய விடயம் இதுதான். ஏனெனில் வான் புலிகள் வசம் அதிகபட்சமாக சுமார் ஆறு வான் கலங்கள் வரையில்தான் இருக்கும் என்றும் அவற்றில் இரண்டு அல்லது மூன்றுவான்கலங்கள் மாத்திரமே தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய அளவிற்கு தரம் வாய்ந்தவை என்று தான் இலங்கை படைத்துறைத் தலைமை கணக் கிட்டிருந்தது. கொழும்பிலும்இ பலாலியிலும் வான் தாக்குதல்களை மேற்கொண்ட வான் புலிகளின் அணிகளில் இரண்டு விமானங் கள் இருந்ததாகவே தெரிவிக்கப் பட்டிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் புத்தளம் வழியாக விடுதலைப் புலிகளின் மூன்று விமானங்கள் பறந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும்இ பின்னர் அந்த மூன்றில் ஒன்று சர்வதேச பயணிகள் விமானம் என்று இலங்கையின் வான்படை அறிவித் திருந்தது. கொழும்பை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த வெளிநாட்டு விமானத்தை பின் தொடர்ந்துஇ வான் புலிகளின் இரண்டு விமானங்கள் கொழும்பில் தாக்குதல் நடத்தச் சென்றதாகஇ பின்னர் இலங்கை படைத்தரப்பால் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதாவது புலிகள் வசம் மூன்று விமானங்கள் இருப்பதாக சிங்களத் தலைமை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

அப்படி இருக்கின்ற நிலையில் விடுதலைப்புலிகள் வசம் பத்திற்கும் அதிகமான விமானங்கள் இருப்பதான தகவல் அவர்களைப் பலத்த அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

அதற்கும் மேலாக விடுதலைப் புலிகள் வசம் ஜெட் எஞ்சின்கள் பொருத்தப் பட்ட வான்கலங்கள் சிலவும் இருப்பதாகக் கூறப்பட்டதானதுஇ அவர்களை அதிர்ச்சி யின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. விடுதலைப் புலிகளின் விமானங்கள் பற்றியும் அவர்கள் மேற்கொண்ட வான் தாக்குதல்கள் பற்றியும் இலங்கை அமைச்சர்கள் பலரும் மலினப்படுத்தப்பட்ட செய்திகளையே வெளியிட்டிருந்தார்கள். அவர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்த்து ஆச்சரியப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவர்கள் வெறும் அரசியல்வாதிகள். இராணுவ விவகாரங்கள் பற்றி எதுவும் அறிந்திருக்காத அவர்கள் அரசியலுக்காக அப்படித்தான் கருத்துக் கூறவேண்டும். ஆனால் சிங்கள இராணு வத்தின் தளபதி திரு. சரத் பொன்சேகாமுன்னர் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். “பறக்கும் பொம்மை விமானத்தில் இருந்துகைக்குண்டு போன்ற பொருட்களை வீசியெறிவதையெல்லாம் ஒரு வான் தாக்குதல் என்று கருதிவிட முடியாது” என்று ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். விடுதலைப் புலிகளிடம் ஜெட் இயந்திரங் கள் பொருத்தப்பட்ட விமானங்களும் இருப்பதான செய்தி வெளியானதைத் தொடர்ந்து பாரிய அச்சம் அவரைத் தற்பொழுது சூழ்ந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பொழுது அவர் வாயே திறப்பதில்லை. விடுதலைப் புலிகள் தம்மிடம் உள்ள பத்திற்கும் அதிகமான விமானங்களைப் பயன்படுத்தி சமகாலத்தில் பல இலக்குகள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் என்ன செய்வது என்பதுதான் தற்பொழுது அவர்களுக்குள்ள பெரிய கவலை.

இரண்டாவது அதிர்ச்சி

அந்த இரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது முக்கிய விடயம்இ இலங்கை படைத்துறைத் தலைமையை மட்டுமல்ல வான் புலிகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அந்த இரகசிய அறிக்கையைத் தயாரித்த நாட்டை யும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்துவதாகவே இருக்கின்றது.
வான்புலிகளின் இரண்டாவது வான் தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்துஇலங்கைப் படைத்துறைத் தலைமைக்கு ஒரு உண்மை நன்றாக விளங்கி இருந்தது. அதாவது தம்மிடம் இருக்கின்ற விமானங் களை வைத்துக்கொண்டோஇ அல்லது தம் வசம் இருக்கின்ற விமான எதிர்ப்பு சாதனங்களை வைத்துக்கொண்டோ வான் புலிகளின் விமானங்களை வானில் வைத்து சுட்டு வீழ்த்த முடியாது. ஒரு பாரிய மரத்தை வீழ்த்துவதானால் அதன் வேரை வெட்ட வேண்டும். அதாவது விடுதலைப்புலிகளின் வான் கலங்கள் தரித்து நிற்கும் இடத்தில் வைத்து அவற்றை அழித்துவிடவேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். இலங்கை வான்படையினரிடம் உள்ள கிபீர் மற்றும் மிக் ரக விமானங்களினால் இந்தக் காரியத்தைஇலகுவாகச் செய்துவிட முடியும். தரையில் நிற்கும் வான்புலிகளின் விமானங்களைமட்டுமல்ல அந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்ப தாகக் கருதப்படும்பிரதேசத்தையே முற்றாக அழித்துச் சாம்பலாக்கிவிடக்கூடிய அளவிற்கு இலங்கை வான்படையில் உள்ள விமானங்களால் முடியும்.

ஆனால் அவர்களுக்கு ஒரு சிறிய சிக்கல் இருந்தது. அதாவதுஇ வான்புலிகளின் விமானங்கள் எங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்வதில்தான் அவர்களுக்குச் சிக்கல் இருந்தது.

ஏனெனில் வான் புலிகள் தங்கள் விமானங்களை எங்கு நிறுத்தி வைத்திருக் கின்றார்கள் என்று எவருக்குமே தெரியாது. வான் புலிகளது விமானங்களின்ஓடுபாதை எங்கிருக்கின்றது என்றும் எவருக்கும் தெரியாது. இரணைமேடுஇ மல்லாவி உட்பட வேறு சில இடங்களில் விமான ஓடு பாதைகள் இருந்ததை இலங்கை வான் படையினரின் ஆளில்லா வேவு விமானங் கள் படம் பிடித்துக் காண்பித்திருந்தன. விமான ஓடுபாதைகள் இருந்தால் அந்த இடங்களுக்கு அருகில்தான் வான் புலிகளின் விமானங்கள் நிச்சயம் தரித்திருக்கும் என்ற அடிப்படையில்இ புலிகளின் வான்கலன்களை அழிப்பதற்கான பல முயற்சிகளில் இலங்கை வான்படை ஈடுபட்டிருந்தது. இருந்தபோதிலும் அது கைகூடவில்லை. வன்னியின் பல பிரதேசங்களிலும் விடுதலைப் புலிகளால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள விமான ஓடு பாதைகள் போலியானவைகள் என்பதுடன்இ இலங்கை வான் படையினரைத் திசை திருப்பி ஏமாற்றுவதற்காகவே விடுதலைப் புலிகள் அவற்றை நிர்மாணித்திருந்தார்கள் என்ற உண்மை அவர்களுக்குப் பின்னரே விளங்கியிருந்தது. வான் புலிகள் தமது வான் கலங்களை அடர்ந்த காடுகளின்மத்தியில் நிலத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ள தரிப்பிடங்களிலேயே நிறுத்திவைத்துள்ளதாகவும்இ வான் புலிகளின் நிஜமான ஓடுபாதைகள் உருமறைப்பு செய்யப்பட்டுஇ எவருமே கண்டுபிடிக்காத வகையில் பேணப்பட்டு வருவதாகவும் இலங்கைப் படைத் தரப்பிற்குத் தெரியவந்துள்ளது.

வான் புலிகளின் விமானங்களை அதன் தரிப்பிடங்களில் வைத்துத் தாக்கி அழிக்கும் தனது திட்டத்தை நடைமுறைப் படுத்தஇ வான்புலிகளின் விமானங்கள் தரையில் இருந்து புறப்படுவதை அல்லது தரை இறங்குவதை அவதானிப்பதன் மூலம்தான் அதன் இருப்பிடங்களை அறிந்துகொள்ள முடியும் என்று இலங்கை விமானப் படைதிட்டமிட்டது.

வன்னி வான்பரப்பில் இலங்கை யின் விமானங்களோஇ அல்லது வேவுவிமானங்களோ பறந்துகொண்டு கண் காணிப்பை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில்இவான்புலிகள் தமது விமானங்களை வெளியே எடுக்கமாட்டார்கள். அதற்கு மேலாகஇ 24 மணி நேரமும் வான்பரப்பில் தொடர் பறப்புக்களை மேற்கொண்டபடி இருப்பதும் சாத்தியமில்லாத ஒரு விடயம். எனவே இலங்கைப் படைத் துறைத் தலைமை ஒரு முடிவிற்கு வந்தது. நட்பு நாடொன்றிடம் இந்த உதவியைக் கோருவது என்று அது தீர்மானித்தது. அதாவது சாட்டிலைட் ஊடான கண்காணிப்பை மேற்கொண்டு வான் புலிகளது விமானங்களின் தரிப்பிடங்களை அறிந்து கொள்வது என்ற முடிவிற்கு வந்தது. வான் புலிகளின் விமானங்கள் அடிக்கடி பயிற்சிகளில்ஈடுபடுவது வழக்கம்.

தாக்குதலுக்கு என்றும்இ புதிய விமானிகளைப் பயிற்று விப்பதற்காகவும்இ விமானங்களைப் பரீட்சிப்பதற்காகவும் வான்புலிகள் தமது விமானங் களைமேலெழுப்பியாக வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களில் பல நூறு மைல்களுக்கப்பால் விண்ணில் நகரும். “ஹப்பிள் ஸ்பேஸ்” என்ற தொலைநோக்கிகள் பொருத்தப் பட்ட நவீன தொழில் நுட்பத் துடன் கூடிய செய்மதிகளினால் வான்புலிகளது விமானங்களின் இருப்பிடங்களை இலகுவாக அடையாளம் கண்டுவிடமுடியும். இந்த எதிர்பார்ப்பில் இலங்கை அரசாங்கம் தனது நட்பு நாடொன்றிடம் செய்மதித் தகவல்களைத் தந்துதவுமாறு கோரியிருந்தது. ஆனால்இ தனது செய்மதிகள் சேகரித்த துல்லியமான புகைப்படங்களை அந்த நாடு பார்த்தபோதுஇ அதற்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. அதாவதுஇ குறிப்பிட்ட அந்தச்செய்மதிகள் வன்னிப் பிரதேசத்தில் தமது கழுகுப் பார்வையைச் செலுத்தும் நேரங்களைத் துல்லியமாகக் கணிப்பிட்டு அந்த நேரங்களில் தமது அனைத்து பறப்பு நடவடிக்கைகளையும் வான்புலிகள் கவனமாகத் தவிர்த்திருந்ததுஇ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

ஆய்வாளர்களின் கூற்றுப்படிஇ செயற்கைக் கோள் ஒன்று வன்னிக்கு மேலாக ஒரு நாளில் சில நிமிடங்கள் மட்டுமே பறப்பையும்இ கண்காணிப்பையும்மேற்கொள்ளும்இ குறிப்பிட்ட இந்த நேரத்தில் எடுக்கப்படும் படங்களை அடிப்படையாக வைத்தே விடுதலைப் புலிகளின் விமானங்களின் தரிப்பிடங்களை அறிவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால்இ வான் புலிகள் தம்மைக் கண்காணிக்கும் பணியில் எந்தெந்தச் செய்மதிகள் ஈடுபடுகின்றனஇ அந்தச் செய்மதிகள் எந்தெந்த நேரங் களில் வன்னியைக் கடந்து தமது பறப்புகளை மேற்கொள்கின்றன போன்ற விவரங்களைக் கணினி மூலம் துல்லியமாகக்கணிப்பிட்டுஇ குறிப்பிட்ட அந்த நேரங்களில் தமது பறப்புகளைத் தவிர்த்துஇ எதிரியை வியப்பில் ஆழ்த்தி யுள்ளார்கள். உண்மையிலேயே பாரிய தொழில்நுட்ப வசதிகளும்இ நுண்ணறிவும் இருந்தால் மாத்திரமே ஒரு அமைப்பால் இவற்றைச் செய்யமுடியும். விடுதலைப் புலிகள் தரப்பில் இப்படியான ஒரு பலம் இருப்பது என்பதுஇ நான்காம் கட்ட ஈழ விடுதலை யுத்தத்தைப் பொறுத்த வரையில் சிங்களப் படை யினருக்கு மிகமிகப் பாதகமான ஒரு அம்சம் என்று அந்த இரகசிய அறிக்கையில் சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளதாம்.

இலங்கைப் படைத்துறைத் தலைமைக்கு அதிர்ச்சி ஏற்பட்ட தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

SHARE