முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்க தகடுகள் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளன.
வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டிற்காக நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக்களினால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த ஆலயவளாக பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கங்களுடனான தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
முள்ளிவாய்க்காலில் இறுதிபோர் நடைபெற்ற ஆலய வளாகப் பகுதி ஒன்றிலேயே இவ்வாறான தகடுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.