உலகம் நாம் கொல்லப்படுவதை பார்த்துக்கொண்டு இருந்தது என்ற தொணியில் BBC முன்நாள் ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹாரிசன் எழுதிய நூலும் இந் நாளில் வெளியிடப்படவும் உள்ளது. ஐ.நாவின் அதிகாரியான ஜஸ்மின் சூக்காவும் கலந்து கொள்ளவுள்ளார். இதில் முக்கியமான விடையங்கள் சிலவும் உள்ளது. 2009ம் ஆண்டு போர் நடந்தவேளை, தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்று புலம்பெயர் தமிழர்கள் பல போராட்டங்களை நடத்தினர். குளிரிலும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் இப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால், இவ்வளவு இழப்பும் வந்திராது என்று சற்றும் நா கூசாமல் எரிக் சொல்கைம் சொல்லிவந்துள்ளார். அப்படி என்றால் எதற்காக இவர் சமாதானத்தில் ஈடுபட்டார் ? புலிகளைச் சரணடையச் சொல்வதற்காகவா ? என்ற கேள்விகளும் எழுகின்றன. இவர் சொல்வது போல சரணடைந்த புலிகளின் அரசியல் தலைவர்களுக்கு என்ன நிகழ்ந்தது ?
இலங்கை இராணுவம் அவர்களை உயிருடன் விட்டதா ? இல்லையே ! அப்படி என்றால் இவர் இக் கருத்தை ஏன் சர்வதேச மட்டத்தில் தெரிவிக்கவேண்டும். தற்போது வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதனை தாம் சொல்லவுள்ளதாக இவர் கூறுவதன் பிண்னணியில் என்ன உள்ளது ? இது தொடர்பாக தமிழர்கள் இவரை கேள்வி கேட்க தயாரா ? இந் நிகழ்சிக்கு 10 பவுண்டுகள் டிக்கெட் அறவிடப்படுகிறது. இன்னும் சிறிதளவு டிக்கெட்டுகளே மிச்சம் இருப்பதால், இந் நிகழ்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழ் காணும் லிங்கை அழுத்தி உங்கள் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். தமிழர்கள் தமது கருத்தை எடுத்துரைக்க இந் நிகழ்வு ஒரு களம் அமைத்து கொடுக்கிறது.
TPN NEWS