‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாதவன். அதன்பிறகு ‘என்னவளே’, ‘மின்னலே’, ‘ரன்’ போன்ற பல வெற்றிப்படங்களை நடித்துவந்தார். சாக்லெட் பாயாக வந்த மாதவன் பிறகு ஆக்சன் ஹீரோவாக மாறினார். அவர் நடித்த ஆக்சன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இந்தியில் படவாய்ப்புகள் குவிந்ததால் நீண்ட நாட்களாக தமிழ் படத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தார். தற்போது மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார்.
‘துரோகி படத்தை இயக்கிய சுதா கே.பிரசாத் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க மாதவனிடம் பேசி வருகின்றனர். இப்படம் ஆக்சன் படம் என்றும் அதில் மாதவன் பாக்சராகவும் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கின்றனர்.