விபச்சாரத் தொழிலை நடாத்தும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

414

25TH_WIGNESWARAN_2384794f

தமிழ்க்கட்சிகளைக்கொண்டு விபச்சாரத் தொழிலை நடாத்தும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும் என்கின்ற நோக்கத்தோடு வடமாகாண சபைக்கான தேர்தலில் வடகிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிபலிக்கும் கட்சியான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் முதல்வர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை நியமித்து, தமிழ் மக்களின் முழு ஆதரவோடு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அதில் அமோக வெற்றியும் பெற்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் முதன்முதலாக ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் படிப்படியாக தனது அரசியல் நகர்வினை நகர்த்திவந்த முதலமைச்சர் தமிழ் மக்களின் மீது அக்கறையுடன் செயற்படுவதைப்போன்று தமிழ் மக்களைக் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளிலும், பிளவுபடுத்தும் நடவடிக்கைகளிலும் உள்ளே மிருகம் வெளியே கடவுள் என்ற ரீதியில் தனது அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

Pongal_3_1

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களையும், தேர்தலில் தோல்வியுற்றவர்களையும் தனது பக்கம் வைத்துக்கொண்டுள்ளார் முதலமைச்சர்.; தனது அரசியல் பலத்தினை வளர்த்துக்கொள்வதற்காக அவர் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் அருவருக்கத்தக்ககது. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவுடன் கீரியும் பாம்புமாகவிருந்த முதலமைச்சர், யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் தின வைபவத்தின்போது மைத்திரிபாலவும், ரணிலும் கலந்துகொள்வதாகக் கூறப்பட்டது. எனினும் ரணில் அவர்களே கலந்துகொண்டார். இங்கேதான் முதலமைச்சரின் இயலாமை வெளிப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து புது மாப்பிள்ளையை வரவேற்கும் ஒரு சம்பவம் போல அந்த நரியை இந்த நரி தந்திரோபாயமாக இவ்வைபவம் நடந்தேறியது. விக்னேஸ்வரனது இந்த செயற்பாடுகள் குறித்து வலம்புரி பத்திரிகையினைத் தவிர, வேறெந்த பத்திரிகைகளுமே இதனைப்போற்றி எழுதவில்லை மாறாக தமிழினத்தின் துரோகியாகவே பார்த்தனர். வடமாகாணத்தின் அமைச்சர்கள் தமது பதவிகள் பறிக்கப்பட்டுவிடுமோ என்கின்ற காரணத்தினால் முதலமைச்சருடன் கைகோர்த்துள்ளார்கள். வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபையின் உறுப்பினர்களான அர்னோல்ட், சுகிர்தரன், சயந்தன் போன்றவர்கள் உட்பட 26 மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றார்கள். இவரது செயற்பாடுகள் சரியானது என்பதே அவர்களது கருத்து. முதலமைச்சரை பலவீனப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை இரகசியமாக மேற்கொள்கின்றது அரசு. ஓன்று மாகாணசபையினைக் கலைப்பதன் ஊடாகவும், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை வடமாகாணசபையில் ஏற்படுத்தும் நோக்கில் அங்கு இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கிடையே இவ்விடயம் தொடர்பாக முறுகல் நிலையினைத் தோற்றுவித்து, முதலமைச்சரை ஓரங்கட்டுதல், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வடமாகாணசபைக்கும் இடையில் பகைமைகளை உருவாக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அவையணைத்திற்கும் முதல்வர் சாவுமணி அடித்திருக்கின்றார். ஏற்கனவே இவர் பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட பிரேமானந்தா சுவாமியாரின் மாணவனாகவிருந்ததும், த.தே.கூட்டமைப்பிற்கு பாடம் கற்பிக்க முனைந்திருப்பதும் அவரை அரசியலுக்குள் த.தே.கூட்டமைப்பு அழைத்து வந்ததும் ஒரு வேடிக்கையான செயலே.
பாலியல் சம்பவம் தொடர்பாக இரட்டைக்கொலை புரிந்தவர்தான் இந்த சுவாமியார். இன்று தமிழ்க்கட்சிகள் மத்தியில் பாலியல் தொழிலை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர். நீதியரசராகவிருந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பினைச்சேர்ந்த உறுப்பினர்களுக்கு 15வருட சிறைத்தண்டனை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. மேலோட்டத்தில் நடைபெறுகின்ற அரசியலை வைத்து நான்போகும் பாதைதான் சிறந்தது. காக்கைவன்னியன் பரம்பரையில் வந்த மற்றொரு காக்கை வன்னியன் தான் இந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சிப் பதவியைப் பெறுவதற்கும், தேர்தல் காலங்களில் த.தே.கூட்டமைப்பிற்கும், தமிழினத்திற்கும் செய்த பாரிய துரோகச்செயலாகவே இவரது செயற்பாடுகள் அமைந்துள்ளது. தான் கடந்துவந்த பாதையினையும், யாரால் இந்தப்பதவியும் அந்தஸ்தும் கிடைத்தது என்பதை சிந்திப்பவராகவிருந்தால் சிறப்பாகவிருக்கும். இவரது பின்புலத்தில் உள்ளவர்களும் அரசியலில் விபச்சாரம் செய்தவர்களே. கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில் இவரது செயற்பாடுகளும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தினையே தோற்றுவித்துள்ளது.

8-1-701x355

அது மாத்திரமல்லாது இவர் வரலாற்றைத் தெரிந்துதான் இவ்வாறு செயற்படுகின்றாரா? தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கும் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் தமிழ் மக்களுக்கான வரைபு இல்லை. உண்மையில் இவ்வாறு இல்லையெனில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைகள் தமது பதவியிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும். புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள தமிழர் பேரவை என்ற அமைப்பில் இருந்து முதலமைச்சர் அவர்கள் அதனது கொள்கைகளில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்பதை தெளிவாகக் கூறியிருக்கின்றார். தனக்கு முட்டுக்கட்டையாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அமைந்துவிடுவாரோ? என்ற காரணத்தினால் தேசியப்பொங்கல் தினத்தில் அவரை இருகரம் கூப்பி வரவேற்று, தமது உறவினை மீண்டும் வலுப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
முதலமைச்சரின் பயணத்திற்கு முட்டுக்கடையாக இருந்தவர் பிரதமர் ரணில் அவர்களே. தற்போது இவர் அவருடன் கள்ளத்தொடர்பினைப் பேணவேண்டிய அவசியமில்லை. யாழில் இடம்பெற்ற வைபவத்தின் மூலம் நேரடியாகவே அனைத்து விடயங்களையும் பேசிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனோடு தனது மக்கள் பேரவையினையும் வளர்த்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் உள்ளது. த.தே.கூட்டமைப்பு அரசிற்கு எதிராக செயற்படுமாகவிருந்தால் முதலமைச்சர் விக்னேஸ்வரனை வைத்தே தனது காய்நகர்த்தல்களை அரசாங்கம் செயற்படுத்திக்கொள்ளும். இலங்கையை ஆண்ட 11 ஆட்சியாளர்களும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்படவில்லை. தமிழினத்திற்கு விடுதலையினைப் பெற்றுத்தருவோம் என்ற ரீதியில் அவர்களது செயற்பாடுகள் ஆரம்பத்தில் அமைந்திருந்தது. தொடர்ந்தும் தமிழினம் ஏமாற்றப்படுவதற்குச் சகுனியாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் செயற்படுவது என்பது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு சாபக்கேடு எனலாம்.

Swire-Meets-President

விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் 2002-04 ஆண்டுகளில் இடைக்கால நிர்வாகம்; கொண்டுவரப்பட்டது. இதன்போது விடுதலைப்புலிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிகளில் மேற்கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் படிப்படியாக விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான முறுகல் நிலை உருவாக ஆரம்பித்தது. சமாதான காலத்தில் மாத்திரம் இராணுவப்புலனாய்வாளர்கள் 29 பேர் அளவில் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் முக்கியமாக வன்னிப் பிராந்தியத்தைச் சேர்ந்த முத்தலீப், கொழும்பினைச் சேர்ந்த புளொட் மோகன் ஆகிய இருவரது இழப்பும் அரசிற்குப் பாரிய இழப்பாகவே காணப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளினால் விடுதலைப்புலிகள் மீண்டும் தமக்கு தலையிடி கொடுக்கிறார்கள் என எண்ணிய அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை மாவிலாறில் ஆரம்பித்தது. இதற்கிடையில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பொறுப்பாளர் நீலன், ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ் இதுபோன்ற பல விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் காரணமாக விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தரப்பினருக்கும் இடையிலான முறுகல் நிலை உச்சமடைந்தது.
சமாதான காலகட்டத்தில் 57 சர்வதேச நாடுகளும், 22 சர்வதேச அமைப்புக்களும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கின. இதில் உலக வங்கியும், அமெரிக்காவும் தனது பெருவாரியான ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சமாதானத்தை வலியுறுத்தி தீர்வுத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டுமாகவிருந்தால் அன்றே அதனை மேற்கொண்டிருந்திருக்கலாம். இறுதியில் சர்வதேச நாடுகளது தலையீடுகளும் தோல்வியடைந்த நிலையில் அவர்களது வஞ்சகத் தனத்தினால் எமது போராட்டம் பின்னடைவைக் காணவேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஜனநாயக நாடு எனக்கூறிக்கொள்ளும் அதேநேரம் கடந்த ஆட்சியாளர்களை ஒப்பிடும் வகையில் மைத்திரிபால சிறிசேனவினது ஆட்சி ஓரளவு சிறந்தது என்று கூறலாம். தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தினை முன்னெடுத்து அதனைச் சீர்செய்யும் நோக்கில் தென்னிலங்கை அரசியல்வாதிகளில் ஒருசிலர் செயற்பட எத்தனிக்கும்போது அதனை சீர்குலைக்கும் நோக்கில் தமிழ் மக்களுக்கிடையில் இருக்கக்கூடிய கட்சிகள் தமக்கிடையில் பிரிவினையைத் தோற்றுவிப்பது ஏற்றுக்கொள்ளப்படமுடியாததொன்று. தமிழ் மக்களுடைய உரிமைகள் இதுவரையில் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

 

ஆகவே எமது ஒற்றுமை என்பது அத்தியாவசியமானது. ஆரம்பகாலப் போராட்டத்தை எடுத்துக்கொண்டால் தமிழினத்திற்காக ஆயுதமேந்திய இயக்கக்கட்சிகள் பதவிக்காக ஆசைப்பட்டு போராடவில்லை. மாறாக தமிழ் மக்களது விடுதலையினை வேண்டியே, இன ஒடுக்குமுறைக்கு எதிராகவே அவர்களது போராட்டம் இடம்பெற்றது. இதில் இந்தியாவின் தலையீடும் இருந்து வந்தது. விடுதலைப்புலிகளது யுத்த தந்திரோபாயங்கள், அவர்களது வளர்ச்சியைக் கண்ட சர்வதேசங்களும் ‘வளர்;த்த கடா மார்பிலோ பாய்ந்தது’ என்பதற்கமைய, இவ்வாயுதக்குழுக்கள் தமக்கு துரோகமிழைத்துவிட்டது எனக்கூறி இவ்வாயுதக்குழுக்களிடையேயும் பிரிவினைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்துப்போராடும் இயக்கங்களாக மாறின. இதனைச்சாதுரியமாகப் பயன்படுத்திக்கொண்ட இந்தியரசு தமிழ் மக்களிடையே ஒற்றுமையில்லை, இவர்கள் பயங்கரவாதிகள் என உலகளவில் சித்தரித்து பாரியதொரு நாடகத்தினையே அரங்கேற்றியது.

இந்திய இராணுவம் 1987களில் அமைதிப்படை என்கின்ற போர்வையில் இலங்கைக்குள் காலடி எடுத்துவைத்ததன் விளைவு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடன் பகைமையில் நிறைவடைந்தது. இதில் ஒருவிடயம் குறிப்பிடவேண்டும், என்னவெனில் ராஜீவ்காந்தியை இலங்கைக்கு வரவேற்று இடம்பெற்ற இராணுவ மரியாதை அணிவரிசையின்போது அவரை ஆயுதத்தின் பின்பாகத்தினால் பிடரியில் தாக்கினார்கள். இவ்வாறு தாக்கப்பட்ட சம்பவம் என்பது அவரைக் கொலை செய்யும் நோக்கிலேயே ஆகும். காரணம் என்னவெனில் ஆயுதங்களிலே ரவைகள் முடிவடைந்த பின்னர் கையில் இருக்கக்கூடிய ஆயுதத்தினால் அடித்துக்கொள்ளும் முறை பயிற்சிகளில் கற்பிக்கப்படுகின்றது. அந்த முறைதான் துப்பாக்கியின் பின்பாகத்தினால் தாக்குவதாகும். இந்த சிப்பாய் தாக்கியதைக் கருத்திற்கொள்ளாத இந்திய அரசாங்கம் மீண்டும் இலங்கையரசுடன் நட்புறவினைப் பேணியது. துப்பாக்கியால் தாக்கியவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மனநோயாளி என்ற பெயருடன் பின்னர் அவர் கௌரவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இதில் ஒருவிடயம் இந்தியாவோ அல்லது ஏனைய சர்வதேச நாடுகளோ தமிழ் மக்களுக்கான சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப்போவதில்லை. மாறாக தமது சுயநல, ஏகாதிபத்திய அரசியலை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவினது ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கும் இந்த பிராந்திய வல்லரசுகளே காரணம். தமிழ் மக்களது இனப்பிரச்சினை என்றோ தீர்த்துவைக்கப்படவேண்டியது. பிரச்சினைகள் நடைபெறும்போது மௌனித்திருந்த இந்த சர்வதேச நாடுகள் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அபிவிருத்தி என்ற போர்வையில் நாட்டிற்குள் உள்நுழைந்து, சர்வதேச அரங்கில் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதே இந்நாடுகளின் முக்கிய நோக்கமாகும். தமிழ் மக்கள் தரப்பில் பல அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் பாராளுமன்றத்தேர்தலில் அதிக பட்சமாக 22 ஆசனங்களை மாத்திரம் பெறக்கூடியதாகவிருக்கின்றது. 03 தசாப்தங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பதவி தமிழ் இனத்திற்குக் கிடைத்திருப்பது என்பது வரலாற்றில் பதிவுசெய்யப்படவேண்டியதொன்று. இவ்வொற்றுமையை சீர்குலைக்கவேண்டுமாகவிருந்தால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கெதிராக ஒரு கட்சியையோ அல்லது அமைப்பினையோ உருவாக்கினால்தான் அது சாத்தியப்படும். அதுவும் தமிழ் மக்கள் மத்தியில் அதிகளவு அபிமானத்தைப் பெற்றிருக்கக்கூடிய ஒருவரே அவசியமாகின்றார். அத்தலைமையை பொறுப்பெடுத்துச் செய்யக்கூடிய வகையில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் அதற்குத் தகுந்தவர் எனத் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். இதன் பின்னணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற பல புத்திஜீவிகள் இருந்தாலும் கூட இவர்களைப் பின்புலத்தில் இருந்து இயக்கப்போவது ரணில் அவர்கள்தான். விடுதலைப்புலிகள் வசமிருந்து கருணாவைப்பிரித்தெடுத்த பெருமை அவரையே சாரும். முதலமைச்சர் விக்னேஸ்வரன் அல்லது ஏனைய தலைமைகளை பிரித்தாளுவதில் அவருக்குச் சிரமங்கள் ஏதும் ஏற்படாது. பாராளுமன்றத்திலே எதிர்க்கட்சியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்படுவதை சிங்கள இனவாதக்கட்சிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதாகவில்லை. ஆகவே ஒவ்வொரு தமிழ்க்கட்சிகளையும் வேறுவேறாகப் பிளவுபடுத்துவதன் மூலம் தமிழரசுக்கட்சி தனித்துவிடப்படும். குறைந்தது அவ்வாறு தனித்துவிடப்படும்போது 05 அல்லது 06 ஆசனங்களுக்கு மேல் பெற்றுக்கொள்ள இயலாது. இவ்வாறாக நிலைமைகள் தோற்றுவிக்கப்படும் போதுதான் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சிப் பதவியில் இருந்து அகற்றப்படும். இதன்போது சிங்களக் கட்சிகளே எதிர்க்கட்சியாக வரவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

தமிழர் பேரவையினது முன்னெடுப்புக்கள் சரியானதாகவிருந்தாலும் அது தமிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவின்றி செயற்படுவது என்பது தவறானது. இத்தகைய நிலை மாற்றப்படவேண்டும். விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் 22 ஆசனங்களைக் கைப்பற்றியதைப்போன்று மீண்டும் 22 ஆசனங்களைப் பெறவேண்டிய நிலைமைகள் உருவாகவேண்டும். அதற்கு தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை மிக அவசியம். உலக நடைமுறையில் விபச்சாரிகள் தான் இன்று ஒருவர், நாளை ஒருவர் எனச் சுற்றிவருவார்கள்:வருகின்றாரக்ள். எதிலும் அவர்கள் திருப்திகொள்வதில்லை. ஆகவே இதனைப்புரிந்துகொண்டு இந்தத் தமிழர் பேரவை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினதும், தமிழரசுக்கட்சியினதும் ஆதரவினைப்பெற்று செயற்படுவதே சாலச்சிறந்தது. கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளத்தவறினால் தமிழ் மக்களது பெரும்பான்மை சீர்குலைக்கப்பட்டு சிங்கள இனம் மீண்டும் எம்மை காலடியில் வைத்து மிதிக்கும் நிலைமை உருவாகும். அந்த சாபக்கேடு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் இத்தமிழினத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக இந்தக் கட்டுரை அமையட்டும்.
இரணியன்

SHARE