தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்த்தேசியத்தை எப்பொழுது கைவிடுகிறதோ, அன்று தமிழினம் அழிந்துபோக நேரிடும்.

460

 

கடந்த பல வருடங்களாக நடைபெற்றுமுடிந்த யுத்தம், தமிழ் மக்களுடைய இன ஆக்கிரமிப்பு விடயங்கள் தமிழினத்திற்கு சிறந்த பாடமொன்றினை கற்றுத்தந்திருக்கிறது. அண்மைய காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நடவடிக்கைகள் மாறுபட்ட கோணங்களில் சென்றுகொண்டிருப்பதனை அவதானிக்கக்கூடியதாகவிருக்கின்றது. ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டநிலையில் அஹிம்சை வழிப்போராட்டம் எனக்கூறிக்கொண்டு, தற்பொழுது இருக்கக்கூடிய அரசாங்கத்துடன் சகோதரத்துவமான முறையில் கைகோர்த்து செயற்படுவது தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இரண்டிற்கும் பிரச்சினை ஏற்படுவதுடன் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழமுடியாத சூழ்நிலையையும் உருவாக்கும்.

TNA-press-meet
இந்த நாட்டில் பறங்கிய இனம் எவ்வாறு வாழ்கின்றதோ அவ்வாறான வாழ்க்கை முறைதான் தமிழ் இனத்திற்கும் ஏற்படும். போராட்ட வரலாறுகளில் பங்கெடுத்த ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஒரே கொள்கையுடனேயே போராட்டங்களை முன்னெடுத்தன.

sampanthan---Ranil

சகோதரப்படுகொலையினை இந்திய அரசு தூண்டிவிட்டதன் விளைவாக இவ் இயக்கங்கள் சிதறடிக்கப்பட்டன. அதன் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்டத்தினை வலுவாக முன்னெடுத்து இந்திய அரசிற்கு ஒரு பாடத்தினை கற்பித்தனர். இன்று பிராந்திய உலக வல்லரசுகளாக இருக்கக்கூடிய இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையின் ஆட்சிமாற்றத்திற்கு வித்திட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் ஒத்துப்போகும் தன்மை அற்றே காணப்பட்டன.

ஆனால் 2015ம் ஆண்டளவில் நெருங்கிய நண்பர்களாக இந்தியாவும், அமெரிக்காவும் மாற்றம் பெற்றுவிட்டன. காரணம் இலங்கையில் இருந்து சீனாவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதனாலேயாகும். இந்த ஜனாதிபதித் தேர்தலினால் தமிழ் மக்கள் அல்லது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் அனைத்தும் கைகூடும் என நம்பி இந்த அரசாங்கத்தை மட்டுமல்ல எந்த அரசினையும் நம்பிச் செயற்படுவது தவறானதொன்றாகும்.

இனப்படுகொலையினை மேற்கொண்ட இரு அரசுகளுடனேயே எமது பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள் நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றன. அமைச்சுப் பதவிகளுக்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சியிலுள்ளவர்கள் விலைபோகும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. வடமாகாணசபை கூட இனிவரும் காலங்களில் ரணிலுடன் இணைந்து தேசிய அரசாக கைகோர்த்து செயற்பட முன்வரலாம். அதற்கான வேலைத்திட்டங்களையே ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முன்னெடுத்துவருகின்றார்.

இதற்கு முதல்images (2) சகுனியாக தேசியப்பட்டியலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள் நுழைந்த சுமந்திரன் இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. இவர் இரகசியமானமுறையில் ரணில் விக்கிரமசிங்கவின் தரப்புடன் பேச்சுக்களை நடாத்தியிருந்தமை மற்றும் தொலைபேசியில் உரையாடியமை என்பன ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுமுடிந்த பின்னர் அமைச்சுப்பதவிக்காக முண்டியடிக்கும் ஒருவராக சுமந்திரன் அவர்கள் திகழ்வார். இவரைக் கன்காணித்த ஏனைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டு தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இரண்டினையும் மறந்துசெயற்படும் நிலைமைகள் உருவாக்கப்படும்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகர்களை தனியாக அழைத்து பேசி வருகின்றார். பிரபாகரனிடம் இருந்து கருணாவைப் பிரித்த ரணில் அவர்களுக்கு, ஏனைய கட்சியில் உள்ளவர்களை பிளவுபடுத்துவது பாரிய விடயமல்ல. ஒரு சோசலிசத்தினை உருவாக்கும் வகையில் அமெரிக்கா செயற்படுகிறது. அமெரிக்காவின் செல்லப்பிள்ளையே ரணில்.

போராட்டத்தினை ஆதரிப்பது போன்று பாசாங்கு காட்டி மோசம் செய்வதே ரணில் விக்கிரமசிங்கவினுடைய திட்டங்களில் ஒன்றாகும். ஜனாதிபதி தேர்தலிலும் கூட நோகாது பிரதமர் பதவியினை தக்கவைத்துகொண்டவர் ரணில் அவர்கள். அவ்வாறானதொரு தந்திரமுடையவர் அவர். இராஜதந்திரம் எனக்கூறிவரும்; தமிழரசுக்கட்சி சார்ந்த தலைவர்கள் ருNP அரசு தொடர்பில் விழிப்புள்ளவர்களாக செயற்படுவது சிறந்ததொன்றாகும்.

0 images (3)

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை மூடிமறைப்பதற்கு ரணில் அவர்கள் இன்னுமொரு திட்டத்தினை இரகசியமான முறையில் முன்னெடுத்துவருகின்றார். பண்டாரநாயக்க மற்றும் தனது குடும்பம் மட்டுமே இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சி செய்யவேண்டும் என்பதே இவர்களினுடைய தீர்மானம். அதற்காக இவர்கள் தமிழ்மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்த நினைப்பது தவறானதொன்றாகும். இராஜதந்திரம் எனக்கூறும் சம்பந்தன் அவர்கள் முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காது போனால் தமிழரசுக்கட்சியினை மக்கள் தூக்கியெறிய நேரிடும்.

chantherecca-ranil-ponseka

இதனை ரணில் விக்கிரமசிங்கவும் நன்கு அறிந்திருக்கின்றார். ஆகவே எவ்வாறு தமிழ் மக்களிடையே இருந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை தூக்கியெறிவது என்ற சிந்தனையிலே செயற்பட்டுவருகின்றார் என்பதும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளுக்கு அமைச்சுப்பதவிகள், பிரதியமைச்சுப் பதவிகள், வேலைவாய்ப்புக்கள் என்பவற்றை வழங்கி, கட்சியிலுள்ளவர்களை மேல்நிலைக்கு கொண்டுவருவதன் ஊடாக தமிழ் மக்களுடைய தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றிற்கு முற்றுப்புள்ளியினை வைத்துவிடலாம் என்ற கங்கனத்துடன் செயற்படுகின்றார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருந்து பிரிந்துசென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கொள்கையை விரும்பாது, தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றின் பால் இன்னமும் தரித்து நிற்கின்றார்கள். காலப்போக்கில் அவர்கள் ஒரு முன்னேற்றத்தினை அடையமுடியும். விடுதலைப்புலிகளின் போராட்டம், தமிழ்த்தேசியம் பற்றியும் கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பாக தமிழரசுக்கட்சி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தற்போதைய அரசியல் விடயங்களுக்கேற்ப தமிழரசுக்கட்சியின் நகர்வுகளுக்கு பாதகமான நிலைமைகள் ஏற்படும் என்கின்ற காரணத்தினால் அவர்கள் அரசிற்கு அடிபணிந்தவர்களாக செயற்படுவது போல் தோற்றம் பெறுகிறது.

எதற்கெடுத்தாலும் அரசியல் சாணக்கியம், இராஜதந்திரம் என்றே கூறுகிறார்கள். இதனது உண்மைத்தன்மை, தமிழ்மக்கள் எப்பொழுது சுதந்திரக்காற்றினை சுவாசிக்கின்றார்களோ அன்றுதான் தெரியவரும். தமிழரசுக்கட்சியிலுள்ளவர்கள் பேசிபேசி மண்டை பழுத்து வயது சென்றிருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் இதுவரையிலும் எட்டப்படவில்லை.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கஜேந்திரகுமார்;, பத்மினி ஆகியோர் கொள்கைகளுக்கு முரண்பட்டதால் விலக்கப்பட்டனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனித்தே விலகிக்கொண்டார். அதுமட்டுமல்லாது சிவநாதன் கிஷோர், தங்கேஸ்வரி ஆகியோரும் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள்.

தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசியதன் காரணமாகவும், கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாததன் காரணமாகவும் இவர்கள் விலக்கப்பட்டனர். இவ்வாறான நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பலம், பலவீனம் இரண்டினையும் UNP அரசாங்கம் பரிசீலனை செய்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை உடைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திவருகிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய கட்சி வலுவானதொரு இடத்தினைப் பிடிப்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவ்வாறு ஏற்படுகின்றபொழுது தமிழ்த்தேசியத்தில் பற்றுள்ளவர்கள் அக்கட்சியில் இணையக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

தற்பொழுது தமிழ்த்தேசியம் தொடர்பில் கட்சிக்குள் இருக்கக்கூடியsritharan mp 59696e சிவஞானம் சிறிதரன் மட்டுமே பேசிவருகின்றார். ஏனையவர்கள் அதுதொடர்பில் குரல்களை எழுப்புவதில்லை. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு தற்பொழுது முட்டுக்கட்டையாகவிருப்பவர் சிறிதரன் அவர்கள் மாத்திரமே. வடமாகாணசபைக்கு முட்டுக்கட்டையாகவிருப்பவர் அனந்தி சசிதரன் அவர்கள். இவர்கள் இருவரின் மீதும் தமிழரசுக்கட்சி ஒரு கண் வைத்துக்கொண்டே செயற்படுகின்றது. பொன்.செல்வராசா சரவணபவான், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியநேந்திரன், சிவசக்தி ஆனந்தன், விநோதராதலிங்கம், சுமந்திரன் போன்றவர்கள் தமிழ்த்தேசியம் பற்றி பாரியளவில் பேசினாலும், அந்தப்பேச்சு எடுபடுவதில்லை.

மறுபக்கத்தில் கட்சி ஒரு விடயத்தினை கூறுகின்றபொழுது அதற்கு அவர்கள் கட்டுப்படுகிறார்கள்: மறைமுகமாக மன்னிப்பும் கேட்டுவிடுகிறார்கள். தமிழ்த்தேசியம் பற்றி சம்பந்தன் அவர்கள் ஆரம்பத்திலேயே முரண்பட்டிருக்கின்றார். ஒருபக்கத்தில் ஏனைய தரப்பினர் கூறுவதுபோன்று விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமைக்கும், முள்ளிவாய்க்காலில் மக்கள் காவுகொல்லப்பட்டமைக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களே காரணமாகின்றார்.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவது ஒன்று. உலக நாடுகளிடம் பேசுவதொன்று என்ற நிலையே அக்காலத்தில் இருந்து வந்தது. தமிழ்த்தேசியம் பற்றி பேசுபவர்கள் கட்சியில் இருக்கவேண்டும். அதற்காக அவர்களை விலக்குவது சிறந்ததொன்றல்ல. உணர்ச்சிபூர்வமாக உரையாற்றக்கூடியவர்கள் இருந்தால்தான் அரசாங்கத்திற்கு ஒரு பயம் ஏற்படும். அவர்களுடன் இணைந்து செயற்படுவதாகவிருந்தால் எமது முதுகில் ஏறி ஊஞ்சலாடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை வென்றெடுக்கவேண்டுமாகவிருந்தால் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் அதற்கு முக்கியமாக அமையப்போகின்றது.

இதில் யார்யாருக்கெல்லாம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆசனங்களை வழங்கப்போகின்றது என போட்டி நிலவுகின்றதே தவிர, தமிழ்மக்கள் நலனில் அக்கறை காட்டுவது என்பது இரண்டாவது விடயமே என்பது மக்களது குற்றச்சாட்டு. மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை கவனத்திற்கொள்ளவேண்டியது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கடமைகளில் ஒன்றாகும். எதிரியானவன் எம்மைப்பார்த்து நகைப்பதற்கு இடமளிக்காது, புத்திசாதுர்யமாக செயற்படுவதன் காலகட்டத்திற்குள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், தமிழரசுக்கட்சியும் தள்ளப்பட்டிருக்கின்றது என்பதை மனதில் கொள்வது சிறந்தது.

– நெற்றிப்பொறியன் –

SHARE