தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் பெரியளவிலான மேதினப் பேரணிகளை நடத்த ஒழுங்கு செய்துள்ளது. வடக்கில் சாவகச்சேரியிலும் மட்டக்களப்பு நகரிலும் மேதின நிகழ்வுகளை நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. மட்டக்களப்பில் நடைபெறும் மேதின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கு கொண்டு உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்டக் கூட்டமைப்பு எம்.பி பொன்.செல்வராஜா தலைமை தாங்குவார்.