தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது?

386

தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வையும் அதி­காரப் பகிர்­வையும் எட்­டாத தூரத்­துக்கு தூக்­கி­யெ­றிந்து விட்­டது போல் அண்­மைக்­கால அர­சியல் சம்­ப­வங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.  உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாத சம்­பவம், எதி­ர­ணியைச் சேர்ந்த ஒரு­வரை ஜனா­தி­பதி பிர­த­ம­ராக்­கிய ஜன­நா­யக சீர்­கேடு, இரு தேசியக் கட்­சிகள் ஒன்று இணைந்து உரு­வாக்­கிய தேசிய அர­சாங்கம் உருக்­கு­லைந்து போனமை, ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடை­யி­லான தொடர்ச்­சி­யான முரண்­பா­டுகள், முஸ்லிம் அமைச்­சர்கள் ஒரு­சேர பதவி வில­கி­யமை போன்ற பல்­வேறு அசா­தா­ரண சம்­ப­வங்கள் குறித்த சில காலங்­க­ளுக்குள் நடந்து முடிந்­து­விட்­டன.

இச்­சம்­ப­வங்­களின் கூட்­டு­மொத்த விளை­வுகள் தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வையும் அதி­காரப் பகிர்வு முன்­னெ­டுப்­புக்­க­ளையும் தூக்­கி­யெ­றிந்து விட்­ட­தா­கவே கருதும் அள­வுக்கு இலங்­கையின் அர­சியல் நிலை­மைகள் குழம்­பிப்போய் காணப்­ப­டு­கின்­றன. .

சிறு­பான்மை மக்­களின் பேரா­த­ர­வுடன் ஜனா­தி­பதி பத­வியை பொறுப்­பேற்றுக் கொண்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க காலத்­துக்குள் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை பெற்று விட­மு­டி­யு­மென்ற நம்­பிக்­கையை தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நம்­பிக்­கை­யுடன் பறைச்­சாற்­றி­யி­ருந்­தது. இந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் தான் 2016 ஆம் ஆண்­டுக்குள் அர­சியல் தீர்வு என்ற நம்­பிக்கை வெளி­யிடப் பட்­டி­ருந்­தது. ஆனால் இன்­றைய நிலையில் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான முரண்­பா­டுகள் கார­ண­மாக தமிழ் மக்­களே அதி­க­மாக பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றார்கள். தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் வாய்ப்­புக்கள் அனைத்­துமே தட்டிப் பறிக்­கப்­ப­டு­கின்­றன என கூட்­ட­மைப்­பினர் அதி­ருப்தி தெரிவிக் கின்­றனர். .

2015, ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மற்றும்  ஜனா­தி­பதி தேர்­தலின் போது நம்­பிக்கை கொண்­டி­ருந்த தமிழ்­மக்கள் தற்­போது வர­வி­ருக்­கிற ஜனா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது, நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லின்­போது கூட்­ட­மைப்பு எதைக் கூறி மக்­க­ளிடம் வாக்கு கேட்­கப்­போ­கி­றது என்­பது பற்­றி­யெல்லாம் அங்கும் இங்கும் தர்க்­கித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்; குழம்பிப் போயி­ருக்­கி­றார்கள்.

அர­சியல் தீர்வு, அதி­காரப் பகிர்வு விட­யங்­களில் அர­சாங்கம் தீவிர முற்­போக்கு சிந்­தனை கொண்­ட­தாக செயற்­பட்டு வரு­கி­றது என்ற நிலைப்­பாடு கரு­கிப்போய், தற்­பொ­ழுது பாரா­ளு­மன்ற தேர்­த­லையா அல்­லது ஜனா­தி­பதி தேர்­த­லையா முன் நடத்­து­வது? பாரா­ளு­மன்ற தேர்தல் வேண்­டுமா, வேண்­டாமா என்­பதைத் தீர்­மா­னிப்­ப­தற்­காக, மக்கள் வாக்­கெ­டுப்­புக்குச் செல்­வ­தற்கு அரசு தயா­ராகி வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை தற்­போ­தைய அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யொன்றை ஜே.வி. பி. கட்­சி­யினர் முன் வைத்­தி­ருக்கும் நிலையில் இப்­பி­ரே­ரணை அடுத்­த­மாதம் 9, 10 ஆம் திக­தி­களில் விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வி­ருக்­கி­றது. மக்கள் விடு­தலை முன்­னணி அர­சாங்­கத்­துக்கு எதி­ராக கொண்­டு­வந்­தி­ருக்கும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீது பாரா­ளு­மன்றில் வாக்­கெ­டுப்பு நிலை­யொன்று வரு­மாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எத்­த­கைய முடிவை எடுக்கும் என்­பது தொடர்­பிலும் அறி­வ­தற்கு, வட கிழக்கு மக்கள் ஆர்­வ­மா­க­வுள்­ளார்கள் என்­பதும் ஒரு பொது­வான எதிர்­பார்ப்பு. காரணம் அர­சியல் தீர்வு, அதி­காரப் பகிர்வு என்ற விவ­கா­ரங்கள் மாலை நேர அஸ்­த­மிப்­புக்குள் போய்­விட்ட நிலையில் கூட்­ட­மைப்பு என்ன முடிவை நோக்கி நக­ர­மு­டியும் என்­பதே இன்­றைய எல்­லோ­ரு­டைய எதிர்­பார்ப்­பு­மாகும்.

ஏலவே அர­சியல் தீர்வு கிடைக்கும் சாத்­திய நிலை ஏற்­ப­டுமா இல்­லையா என்ற சந்­தே­கங்கள் தமிழ் மக்கள் மத்­தியில் காணப்­பட்ட போதும் கூட்­ட­மைப்­புக்கும் நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கும் இடையில் காணப்­பட்ட புரிந்­து­ணர்வு இணக்­கப்­பாடு கார­ண­மாக அர­சியல் தீர்வு கொண்­டு­வ­ரப்­ப­ட­லா­மென்ற நம்­பிக்கை, சிறி­ய­ளவு நம்­பிக்­கை­யா­வது இருந்­தது என்­பது உண்­மையே. அது­வு­மின்றி உப­கு­ழுக்கள் கூடி ஆராய்ந்­தமை வழிப்­ப­டுத்தல் குழு நிய­மிக்­கப்­பட்­டமை அதற்கு பிர­தமர் ரணில விக்­ர­ம­சிங்க தலைமை வகித்­தமை போன்ற சாத­க­மான கார­ணங்­க­ளினால் அர­சியல் தீர்வு பற்­றிய நம்­பிக்­கைகள் இருப்­ப­தற்கு நியாயம் இருந்­தது. இவற்­றுடன் கூட்­ட­மைப்­புக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடை­யி­லி­ருந்த நல்­லி­ணக்க போக்கு நம்­பிக்­கைக்­கு­ரிய வலுவை ஊட்டி நின்­றது.

ஆனால் நடந்­த­தென்ன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பத­வி­யி­றக்­கப்­பட்டு, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பாரம்­ப­ரி­யங்­களை உடைத்து, பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டமை, நெருக்­கடி நிலையை மேலும் சிக்­க­லாக்கும் வகையில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டமை. பாரா­ளு­மன்றில் கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் அதன் கார­ண­மாக எழுந்த வாக்­கெ­டுப்பு நிலை­மைகள் என எல்லா நெருக்­க­டி­களும் அர­சியல் தீர்வு என்ற விட­யத்தை கண்­ணுக்கு தெரி­யாத தூரத்­துக்கு தூக்கி எறிந்து விட்­ட­தென்றே கருதும் அள­வுக்கு நிலைமை மாறிப்­போய்­விட்­டது.

பாரா­ளு­மன்றில் நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­ன­மொன்று கொண்­டு­வ­ரப்­பட்ட போதும், நீதி­மன்றில் வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த போதும் கூட்­ட­மைப்­பி­னரின் நிலைப்­பா­டுகள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்­க­ளையும் அவர் விருப்பம் கொண்ட அர­சாங்­கத்­தையும் நேர­டி­யா­கவே பாதித்­தி­ருந்­தது. கூட்­ட­மைப்பு நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு நல்க வேண்டும் அல்­லது நடு­நிலை வகிக்க வேண்­டு­மென்ற கோரிக்­கையை ஜனா­தி­பதி கூட்­ட­மைப்­பிடம் நேர­டி­யா­கவே கோரிக்­கை­யாக விடுத்­தி­ருந்தார். ஆனால் அது நிரா­க­ரிக்­கப்­பட்­டது.  அது­மட்­டு­மன்றி தொடுக்­கப்­பட்ட வழக்கை முன் நின்று நடத்­தி­ய­வர்­க­ளாக கூட்­ட­மைப்­பினர் காணப்­பட்ட நிலையில் ஜனா­தி­ப­திக்கும் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் காணப்­பட்ட நல்­லி­ணக்­கத்­துக்கும் குந்­தகம்   ஏற்­படத் தொடங்­கி­யமை சாத­க­மான எல்லாச் சந்­தர்ப்­பங்­க­ளுக்கும் ஆப்பு வைக்கும் நிலையை உரு­வாக்­கி­யுள்­ளது.

அர­சியல் தீர்வை முன்­கொண்டு செல்லும் அனைத்து சந்­தர்ப்­பங்­களும் கைந­ழுவிப் போய்­விட்­ட­தா­கவே, தமிழ் மக்கள் மற்றும் புத்­தி­ஜீ­வி­க­ளு­டைய கருத்­தாகக் காணப்­ப­டு­கி­றது. இதற்கு கார­ண­மாக இருப்­பவை மேலே எடுத்துக் கூறப்­பட்ட கார­ணங்­களே.

அண்­மையில் வெளி­நா­டொன்றில் வைத்து கருத்துத் தெரி­வித்த ஜனா­தி­பதி, அர­சியல் அதி­கார பகிர்வு விட­யத்தில் 13 க்கப்பால் செல்லப் போவ­தில்­லை­யென அடித்து கூறி­யி­ருந்தார். அர­சியல் சாச­ன­மொன்றின் மூலம் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு நாட்­டி­லுள்ள அனைத்து மக்­க­ளு­டைய அங்­கீ­கா­ரமும் பெறப்­பட வேண்­டு­மென்ற உறு­தி­யான நிலைப்­பாட்டை, கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அவர்கள் 2015, ஆம் ஆண்டு முதல் கூறி­வந்­துள்ளார். அது­வு­மின்றி 13 ஆம், திருத்தம் போது­மா­னது என்ற கருத்தை எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் கூட்­ட­மைப்­பினர் ஏற்றுக் கொண்­ட­தாக தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு இருக்கும் போது ஜனா­தி­ப­தியின் 13 ஆவது திருத்­தத்­துக்கு அப்பால் செல்ல முடி­யாது என்ற வாதத்தை எந்­த­ள­வுக்கு தமிழ்த் தரப்­பினர் ஏற்­றுக்­கொள்ள   போகி­றார்கள். தற்­பொ­ழுது தேர்தல் வரப்­போ­கின்­றது என்ற மாயையில் இலங்­கை­யி­லுள்ள அனைத்துக் கட்­சி­களும் தயா­ராகி வரு­கின்­றன. இக்­கட்­சிகள் எது­வுமே நீண்­ட­நா­ளாகப் பேசப்­பட்டு வந்த அர­சியல் தீர்வு பற்­றியோ புதிய அர­சியல் சாசனம் பற்­றியோ பேசு­வ­தாகத் தெரி­ய­வில்லை. அனை­வரும் இந்த விவ­காரம் தொடர்பில் மறந்­து­போய்­விட்­டார்கள் என்றே எண்­ணத்­தோன்­று­கி­றது. குறிப்­பாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் மூச்­சு­வி­டா­மலே அடக்கி வாசித்துக் கொண்­டி­ருக்­கிறார். அவ­ரது கன­வெல்லாம் வர­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்தல் பற்­றி­ய­தா­கவே இருக்­கின்­றது.

இவ்­வா­றான தளம்பல் நிலையில் அர­சியல் தீர்வு பற்றி மூச்சு விடும் திராணி கொண்­ட­வர்­க­ளாக எவ­ரு­மில்­லை­யென்­பது யதார்த்­த­மா­கவே தெரி­கின்­றது. .

நல்­லாட்சி அர­சாங்கம் குலைந்து போய் ஆளும் ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்­பா­ராத நெருக்­க­டி­க­ளுக்கு ஆளாகி பல சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய சூழ்­நி­லையில் அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு நல்கும் பின்­பு­லத்­தா­ராக கூட்­ட­மைப்­பினர் இருந்த போதும் சாண் ஏற முழும் சறுக்­கு­வது போல் உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாதம் நாட்டின் அனைத்து நிலை­மை­க­ளையும் நிலை­கு­லைய வைத்­து­விட்­டது. இச்­சம்­பவம் பெரும்­பான்மை சமூ­கத்­துக்கு அதிர்ச்­சியை அளித்­ததோ என்­னவோ ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­துக்கும் பேர­திர்ச்­சியை உண்­டாக்­கி­ய­துடன் தமிழ்த் தலை­வர்­களின் இலக்­கையும் நோக்­கையும் ஸ்தம்­பிதம் அடைய வைத்­துள்­ளது.

அர­சாங்கம் மற்றும் ஜனா­தி­பதி தரப்­பி­ன­ருக்கு இச்­சம்­பவம் தமி­ழர்­களின் போராட்­டங்­க­ளி­லி­ருந்து தப்­பித்துக் கொள்­வ­தற்கு ஒரு வாய்ப்பை அல்­லது ஆறு­தலை தந்­துள்­ளது என்றும் கரு­தவும் இட­முண்டு.

உள்­நாட்டு அர­சியல் தலை­மைகள் மீது நம்­பிக்கை இழக்­கப்­படும் போது சர்­வ­தே­சத்தின் உத­வியை நாடு­வது பொது­வா­கவே தமிழ்த் தலை­மை­களின் கடந்­த­கால போக்­கு­க­ளாக அல்­லது அவர்கள் நாடும் யுக்­தி­க­ளாக இருந்து வந்­துள்­ளமை பொது­வான உண்மை. எனினும்  2015 ஆம் ஆண்­டுக்குப் பின் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துக்கு எட்­ட­நின்று ஆத­ரவு நல்கும் ஒரு புற­நிலை கட்­சி­யா­கவே சர்­வ­தே­சத்­துக்கு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்கும் நிலையில், எத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­நி­றுத்தி சர்­வ­தே­சத்­துக்கு முறை­யிட முடியும்?

அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­தித்த கூட்­ட­மைப்­பினர், அர­சியல் தீர்வு விவ­கா­ரத்தில் இலங்கை அர­சாங்­கத்தின் இழுத்­த­டிப்பு நிலை­மையை விளக்க முற்­பட்­டார்கள்.  அதற்கு இந்­தி­யப்­பி­ர­தமர், ”இது விடயம் தொடர்பில் யான் ஏற்­க­னவே தங்­க­ளிடம் கேட்­ட­றிந்­துள்ளேன்” என எடுத்த எடுப்பில் கூறி­யுள்ளார்.

இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­தி­ர­மோ­டியைப் பொறுத்­த­வரை இலங்கைத் தமிழர் விவ­கா­ரத்தில் அவர் காட்­டிய அக்­க­றையை விட, இலங்கை அர­சாங்கம் பிராந்­திய ஒற்­றுமை, பிராந்­தியக் கொள்கை என்­ப­வற்­றி­லேயே அதிக அக்­கறை காட்டி வந்­த­வ­ராக தனது ஆட்­சிக்­காலம் முழு­வதும் இருந்து வந்­துள்ளார். இந்­தி­யாவின் வெளி­யு­றவுக் கொள்­கையை மிக நேர்த்­தி­யா­கவும் சாணக்­கி­யத்­து­டனும் பின்­பற்­றி­யவர் இவர் என்­பது ராஜ­தந்­திர வட்­டா­ரங்­களால் பேசப்­ப­டு­கிற விடயம். தனது ஆட்­சிக்­கா­லத்தில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இலங்கை தமிழர் விவ­கா­ரத்தில் அவர் அக்­கறை காட்­டி­ய­தாக கூறப்­ப­ட­வில்லை.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் பிர­தமர் நரேந்­திர மோடியை மூன்று தட­வை­க­ளுக்கு மேல் சந்­தித்து உரை­யா­டி­யி­ருந்த போதும் தமிழர் விவ­கா­ரத்தில் கரி­சனை  காட்­டிய நிலைப்­பா­டுகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. கூட்­ட­மைப்பு மிக விரைவில் மீண்டும் பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­திப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­வ­தாக பத்­தி­ரிகை செய்­திகள் தெரி­விக்­கின்­றன. அச்­சந்­திப்பின் போது எத்­த­கைய விவ­கா­ரங்கள் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளன. நிகழ்ச்சி நிரல் எது­வாக இருக்கும் என்­பது மூடு­மந்­தி­ர­மாக இருந்­தாலும்  ஊகத்தின் அடிப்­ப­டையில் கூறு­வ­தாக இருந்தால் இடையில் ஓய்ந்து போய் விட்­ட­தாக விமர்­சிக்­கப்­படும் அர­சியல் சாசன முன்­னெ­டுப்­புக்கள் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விட­யத்­துக்கு வலு­வூட்­டப்­படும் என்று எண்ண இட­முண்டு.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியைப் பொறுத்­த­வரை இலங்கைத் தமிழர் விவ­காரம் அர­சியல் தீர்வு போராட்­டங்கள் அவர் அறி­யாத ஒரு விட­ய­மல்ல. அது­வு­மன்றி புதி­தாக விளங்க வைக்க வேண்­டி­ய­து­மில்லை. நிலை­மையை நன்­க­றிந்­தவர் அவர். கூட்­ட­மைப்பின் குழு­வினர் சந்­திக்­க­வி­ருக்கும் சந்­தர்ப்­பத்தை எப்­படி பயன்­ப­டுத்­தப்­போ­கி­றார்கள் என்­ப­தி­லேயே சகல சாணக்­கி­யமும் அடங்­கி­யி­ருக்­கி­றது.

இந்­தி­யாவின் இன்­றைய ஆட்சி நிலை­மையைப் பொறுத்­த­வரை மோடி தலை­மை­யி­லான பா.ஜனதா ஆட்சி ஒரு­மித்த ஜன­நா­யக பலம் கொண்­ட­தாக அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தொங்­கு­நிலை இல்­லாத தனிப்­பலம் நிறு­வப்­பட்­டி­ருக்கும் நிலை­மையில் பிராந்­திய சார்­பான கொள்­கை­களில் அதி­யுயர் ராஜ­தந்­தி­ரங்­களைக் கடைப்­பி­டிக்க வேண்­டிய தேவை உள்­ளது என்றே இந்­திய அர­சியல் ராஜ­தந்­தி­ரி­களால் வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. இத்­த­கைய சூழ்­நி­லையில் இந்­தி­யா­வுக்கும் சவா­லாக மாறி­யி­ருக்கும் ஐ.எஸ் பயங்­க­ர­வா­த­மொன்று இலங்­கைக்குள் நுழைந்­தி­ருப்­பது தொடர்பில் தீவி­ர­மான பரி­சோ­த­னை­களை இந்­திய அரசு மேற்­கொண்டு வரு­கி­றது.  இந்த சாத்­தி­ய­மான சூழல் போக்கை கூட்­ட­மைப்பு வெற்­றி­க­ர­மாக, பயன்­ப­டுத்த வேண்­டு­மென்­பதே அனை­வ­ரது எதிர்­பார்ப்பும்.இப்­பொ­ழு­தெல்லாம் கூட்­ட­மைப்பு, அர­சியல் தீர்வு என்ற மூல­மந்­தி­ரத்தை மறந்து போய் அபி­வி­ருத்­தி­யென்ற மாயையில் சிக்கிக் கொண்­டி­ருக்­கி­றது என்றே கடும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.சமஷ்டி கேட்ட கூட்­ட­மைப்­பினர் சமுர்த்­திக்­காக, கையேந்தி நிற்­கி­றார்கள் என்ற தகு­தி­யற்ற வார்த்­தை­களைக் கொட்டி சிலரால் விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

கம்­பெ­ர­லிய திட்டம், செமட செவன வீட்­டுத்­திட்டம், சமுர்த்தி திட்டம், வீதி அபி­வி­ருத்தி என்ற அற்­பத்­த­ன­மான சலு­கை­க­ளுக்­காக ஓடித் திரி­கி­றார்கள் என்ற நாக­ரி­க­மற்ற பிரச்­சா­ரங்கள் எழுப்­பப்­ப­டு­கின்­றன.   இது மனம் ஆற்றா மையால் எழுந்­தது.  இருந்­த­போ­திலும் மிக கவ­ன­மா­கவும் நிதா­ன­மா­கவும் எதிர்­கொள்ள வேண்­டிய சவால்கள் நிறை­யவே உள என்­பது ஆழ­மாக அறிந்து பய­ணிக்க வேண்­டிய தேவை கூட்­ட­மைப்­பி­ன­ருக்­குண்டு.

விரும்­பியோ விரும்­பா­மலோ இரு தேர்­தலை எதிர்­கொள்ள வேண்­டிய தேவை, நாட்­டி­லுள்ள பிர­தான கட்­சி­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல கூட்­ட­மைப்­புக்கும் உள்­ளது, ஜனா­தி­பதி தேர்தல் முன் நடத்­தப்­ப­டு­மாயின் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு எப்­ப­டி­யி­ருக்கப் போகி­றது, மாறாக பொதுத் தேர்தல் முன்னே நடத்­தப்­ப­டு­மாயின் கூட்­ட­மைப்பு மக்கள் முன்­கொண்டு செல்லப் போகின்ற அடைவு நிலை­யென்ன என்­பது பற்றி தமிழ்­மக்கள் காத்­தி­ர­மான எதிர்­பார்ப்­புடன் இருக்­கின்­றார்கள்.   .

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் போது கூட்­ட­மைப்பு கைகாட்­டிய திசையை நோக்கி அணி­வ­குத்துச் செல்ல தமிழ் மக்கள் ஒன்­று­சேர தயா­ராக இருந்­தார்கள். காரணம் ஜார் மன்­னனைப் போன்ற ஒரு கொடுங்­கோண்மை ஆட்­சி­யா­ளனை வீழ்த்­தி­விட வேண்­டு­மென்ற வெறி  இருந்­தது. ஆனால் அந்த சூழ்­நி­லையோ நெருக்­க­டியோ வரப்­போகும் ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஏற்­ப­டு­மென்று கட்­டியம் கூறி­விட முடி­யாது. உண்­மையை உரைப்­ப­தாயின் தமிழ் மக்­க­ளுக்­கான நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணுவேன் என்று வாக்­கு­று­தி­ய­ளிக்­கக்­கூ­டிய  ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒருவர் எதிர்­கால தேர்­தலில் களம் இறங்­கு­வா­ரென்று கூற முடி­யாது. அது­வு­மன்றி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­க­வி­ருக்கும் பட்­டி­யலைப் பார்ப்பின் அத்­த­கைய அநா­த­ரட்­ஷகர் ஒருவர் களம் இறங்­க­வி­ருப்­ப­தாக கற்­ப­னை­கூட, பண்­ணிப்­பார்க்க முடி­ய­வில்லை. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் தமிழ் மக்கள் யார் கைகாட்­ட­லுக்கும் திசை திரும்பப் போவ­தில்­லை­யென்ற நிலையே தோன்ற இட­முண்டு.

இன்­னு­மொரு வகையில் பார்ப்பின் பொதுத் தேர்தல் முந்­து­மாயின் கூட்­ட­மைப்பு முன்­வைக்­க­வி­ருக்கும் கோரிக்­கை­களும் கொள்­கை­களும் என்­ன­வாக இருக்கும்? இது பற்றி அறி­வதில் பொது மக்கள் உள்­ள­டங்­க­லாக புத்­தி­ஜீ­விகள் ஆர்­வத்­துடன் இருக்கிறார்கள் என்பது அங்கு இங்கு இருந்துவரும் கருத்தாடல்கள் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

இருத்தாலுங்கூட, கூட்டமைப்பின் வார்த்தைகளை மீறி, மாற்றுத் தலைமைகளை நம்பவோ அல்லது, எதிரணிக்கட்சிகளை நாடவோ தமிழ் மக்கள் தயாராகப் போவதில்லையென்ற பலமான யதார்த்தத்தையும் நாம் நம்பாமல் இருக்கமுடியாது. எனினும், கூட்டமைப்பு தன்னை சுயமதிப்பீடு செய்து சுதாகரித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

எது எப்படியாயினும்,  தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் கூறியது போல் நாட்டின் அனைத்து அசாதாரண சூழ்நிலைகளும் நேரடியாக தமிழ் மக்களையே பாதித்திருக்கிறது, அது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கும் நோக்கம் ஜனாதிபதியிடமில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் உருக்குலைவுகள், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான தொடர்நிலை முரண்பாடுகள் அதனைத் தொடர்ந்து நாட்டை உலுக்கிப் போட்ட, பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்தமை என்பன  ஒருபுறமிருக்க, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வுக்கான போரை நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய வியூகங்களையும் ராஜதந்திர முன்னிலைகளையும் மிக சாதூரியமாகவும் சாணக்கியமாகவும் கொண்டு செல்ல வேண்டிய காலக்கட்டத்தில் நிக்கிறது என்பது தெளிவாகிறது.

எது, எவ்வாறாயினும்,  அண்மைக்கால அரசியல் ஈடாட்டங்கள் முரண்பாடுகள் குலைவுகள் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தை கண்ணுக்கு எட்டாத தூரத்தில் தூக்கி எறிந்துவிட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய யதார்த்தம். அதுவுமின்றி நாட்டில் ஏற்பட்டுள்ள இன்றைய அசாதாரண சூழ்நிலையைத் தடுக்கும் சாதகமாகக் கொண்டு இலங்கை ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் தட்டிக் கழிக்கப் பார்க்கும் அரசியல் தீர்வு விவகாரத்தை கூட்டமைப்பு மிக சாதூரியமாக முன்னெடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயம் என்பதே தெளிவு.

திரு­மலை நவம்

SHARE