தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தாளும் தமிழ்த் தரப்பினர் அனைவரும் துரோகிகள்

505

தமிழ் மக்களுடைய அபிலாசைகளை வென்றெடுக்கும் முகமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை யான காலமும் செயற்பட்டு வந்தது / வருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டதுதான் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் மறைந்த ஊடகவி யலாளர் சிவராம் அவர்கள் ஆற்றிய பங்கு காத்திரமானது.

தற்போதைய சூழ்நிலையில் தேசியம், சுயநிர்ணய உரிமை என்கிற தமிழ் மக்களுடைய கோட்பாடுகள் நிவர்த்தி செய்யப்படாத நிலையில் மற்றுமொரு கட்டத்தை தாண்டுவது என்பது சாத்தியமற்றதொன்று. 30 ஆண்டுகள் இலங்கை அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் மாகாண ஆட்சிமுறைகள் கொண்டுவரப்பட்ட போதிலும் மத்திய அரசே அந்த ஆட்சியினுடைய பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தைக் கைவசப்படுத்தியுள்ளது. அவ்வாறு இருக்கின்றபோது எவ்வாறு தன்னிச்சையாக செயற்பட முடியும் என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. தமிழ் மக்களின் தேச விடுதலைக்காக போராடிய ஆயுதக்கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், விடுதலைப்புலிகள் போன்றன முக்கியத்துவம் பெறுகின்றன. டக்ளஸ் தேவானந்தா அவர்களைப் பொறுத்தவரை ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியினைச் சார்ந்தவர். 1987 காலப்பகுதிகளில் சிங்கள அரசுக்கு எதிராக தமிழ் மக்களின் விடுதலை கருதிப் போராடினார்கள். தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் 1990 தொடக்கம் 2009 வரை தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அக்காலகட்டத்தில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி போன்ற இயக்கங்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்தார்கள். இந்தக் காட்டிக்கொடுத்தலின் விளைவு விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் பின்னடைவுக்குக் காரண மாக அமைந்தது. அத்துடன் முஸ்லீம் அரசியல் தலைமைகளும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அக்காலத்தில் காட்டிக்கொடுத்தார்கள். அதனது பிரதிபலிப்பாக இன்று முஸ்லீம் மக்களும், அவர்களின் தலைமைகளும் அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்துள்ளார்கள்.

திம்பு முதல் டோக்கியோ வரையான பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகள் பாரிய முன்னேற்றத்தை அடைந்த நிலை யிலும் இறுதியாக நோர்வேயின் தலையீட்டினால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது. மாவி லாறில் ஆரம்பிக்கப்பட்ட போர் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. அதன் பின்னர் அரசியல் ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை மையே தமிழ் மக்களின் ஏகபிரதி நிதிகளாக தமிழ் மக்கள் சார்ந்த அரசியல் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அதனு டைய பிரதிபலிப்புக்கள் மக்களிடையே சென்றடைவதற்கு முன்னர் தமிழ்க் கட்சிகளைப் பலவீனப்படுத்துவதற்காக மாறி மாறி வந்த அரச தரப்புக்கள் பிரதிநிதிகளைப் பிரித்தாளும் தந்திரோபாயங்களை மேற் கொண்டு வந்தனர். தற்போது அது திசைமாறி தமிழ்க் கட்சிகளுக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.

இதிலும் குறிப்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆனந்தசங்கரி, பிள்ளையான் போன்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தான் களமிறங்கியுள்ளனர். முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து பிறிதொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இவர்களை மக்கள் துரோகிகள் என்றே அழைக்கின்றனர். மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர்கள் மக்கள் மத்தியில் தாம் பிரகாசித்து தமக்கான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் செயற்படுகின்றனர். தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் இன்னமும் எட்டப்படாத நிலையில் தமது கட்சிகளின் நிலைகளைப் பலப்படுத்தவேண்டும் என்ற கனவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது என்று மக்கள் மத்தியில் கூறி, அரசின் கைக்கூலிகளாக மேற்கூறப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் செயற்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் அரசி யல் அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடாகவே இது அமைகிறது. மேற்கூறப்பட்ட கட்சிகளின் மீதான குற்றச்சாட்டு என்னவெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் தான் கூட்டமைப்பைப் பிரித்தாளும் சகுனியா கச் செயற்படுகின்றார் என்பதாகும்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை காப்பாற்ற செயற்பட்டது உண்மைதான். ஆனா லும் முஸ்லீம் தரப்பினர், தமிழர் தரப்பினர் ஒன்றிணைந்து அரசிய லில் காய்நகர்த்துகின்றபோது அதனை தென்னிலங்கையில், மீண்டும் ஒரு தனிநாட்டுப் போர் ஆரம்பிக்கப்படும் என்றும் இதனால் முஸ்லீம் அடிப்படைத் தீவிரவாதம் தலை தூக்கும் என்றும் அங்கு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், மத வாதம், இனவாதம், தேசிய வாதம் போன்றவற்றை மஹிந்த தரப்பினர் கையாண்டே இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். உண்மையில் இந்நிலைமைகள் மாற்றப்படவேண்டும். தமிழ் மக்களைப் பிரதிபலிக்கின்றோம் என்று கூறுகின்ற அரசியல் தலைமைகள் சற்று விழிப்பாகச் செயற்படவேண்டும்.

13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர் பில் இந்தியாவில் பசப்புவார்த்தை களைப் பேசிவிட்டு தற்போது ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் இருக்கிறது என்கிறார். மற்றொரு விடயம் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளில் தான் நான் வெற்றி பெற்றுள்ளேன் என்கிற மமதையில் தான் ஜனாதிபதி பேசுகின்றார். ஆனால் சிங்களவரான சஜித் அவர்களுக்கு தமிழ் – முஸ்லீம் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷவின் முள்ளி வாய்க்காலின் கோரமுகத்தை தமிழ் மக்கள் இன்னமும் மறக்கவில்லை என்பதையே இந்தத் தேர்தலின் முடிவுகள் எடுத்துக்காட்டுகிறது. சிங்கள மக்கள் மற்றும் அரசியல் தலைமைக ளின் ஒற்றுமையைப் பார்க்கின்றபோது சிறப்பாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் அமையப்பெற்றுள்ளது. காலத் திற்குக் காலம் ஆட்சி மாற்றம் இடம்பெறும் போது தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் முன்னெடுக்கப்படும் போதெல்லாம் அதனைக் குழப்பும் நோக்கில் தான் அக்கால அரசுகள் செயற்பட்டது. சர்வதேச நாடுகளும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நசுக்கிவிடவேண்டும் என்ற நோக்கில் தான் செயற்பட்டனர். இந்தியா நினைத்திருந்தால் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளை 1987களில் அல்லது 2001இல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் நடைமுறைப்படுத்தியிருக்க முடி யும். இந்தியாவும் தமிழ் மக்களைப் பழிவாங்கும் நோக்கில் தான் செயற்பட்டது.

தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்படும்வரை குறித்த தமிழ் அரசியல்வாதிகள் பிரித்தாளும் தந்திரோபாயங்களை மேற்கொள்ளும் போது அல்லது குற்றச்சாட்டுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைக்கின்றபோது அது ஆரோக்கியமான அரசியலாக தமிழ் மக்களுக்கு அமையப் போவதில்லை. கிழக்கில் 17 அமைப்புக்கள் ஒன்றி ணைந்து ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய வெல்லவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் களமிறங்கினர். ஆனால் கிழக்கில் அவர்களால் பாரிய வாக்குகளைத் திரட்ட முடியவில்லை. இதிலும் குறித்த ஆதரவு அரசியல்வாதிகளிடத்தில் போட்டி தான் நிலவியது. யார் அதி கமான வாக்குகளைத் திரட்டிக் கொடுப்பது என்று. முஸ்லீம் சமூகத்தை அடக்கியாளவேண்டும் என்று சிங்கள வர்களோடு கைகோர்த்து நிற்பது என்பது, கடந்த காலத்தில் சிங்கள இனத்துடன் இணைந்து எம்மினத்தை அழித்தவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது எனச் சிந்திக்க வேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலைக்கானப் போராட்ட மானது சர்வதேசம் வரை சென்ற டைந்திருக்கிறது. தற்போது சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதும் நிரூபணமாகி வருகிறது. எனவே இனிவரும் காலங்களில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளை வென்றெடுப்பது மிக சுலபமாக உள்ளது. ஆகவே அதனை குழப்பவாதிகளாக இருந்து செயற்படாது நடைமுறையில் சாத்தியப்படக்கூடிய விடயங்களில் நாம் களமிறங்கவேண்டும். தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமையைப் பேசிக்கொண்டிருப்பவர்கள் போராட தனியாக களமிறங்க வேண்டும். வெறு மனே மக்களை உசுப்பேற்றி இவர்களை பாதாளத்திற்குள் தள்ளுகின்ற வேலை களைச் செய்யக்கூடாது. அடம்பன் கொடியும் திரண்டால் தான் மிடுக்கு. எமது கட்சிகளுக்குள் இருக்கின்ற துரோ கிகள் களையப்பட வேண்டியவர்கள். இவ்வாறான கட்டுரைகளை நாம் ஊடக அடக்குமுறைகளைத் தாண்டி தமிழினத்தின் விடுதலைக்காக, ஒற்றுமைக்காக நாம் எழுதுகின்றோம். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழினத்தின் விடுதலைக்காக இறுதிவரை போராடி தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அந்தத் தியாகத்தின் பயனாகவே இன்று நாம் ஒரு அரசி யல் தீர்வினை நோக்கி நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நகர்ந்து கொண்டிருக்கின்றோம். தமிழினம் ஒன்று இலங்கையில் இருக்கிறது என திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நிலைமைகள் மாற்றப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழினத்தின் விடிவிற்காக ஒரு குடையின் கீழ் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் அளவிற்கு செயற்பாடுகள் அமையப் பெற வேண்டும். அல்லாதுபோனால் தமிழ்க் கட்சிகள் பிளவுபட்டு, பாராளுமன்ற ஆசனம் வெகுவாக குறைக்கப்பட்டு, இந்நாட்டில் சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளே வட-கிழக்கிலும் ஆட்சிய மைத்துக்கொள்ளும். ஆகவே நிதானித்து தமிழ் அரசியல் பிரதி நிதிகள் செயற்படவேண்டியது காலத் தின் கட்டாயமாகும்.

(நெற்றிப்பொறியன்)

SHARE